Header Ads



இலங்கையை திடீரெனத் தாக்கிய டொனேடோ - 15 நிமிடம் நீடிப்பு

பொலன்னறுவை வெலிகந்த பகுதியில் நேற்று மாலை திடீரென டொனேடோ (Tornado) சூறாவளி தாக்கியுள்ளதாக வெலிகந்த பிரதேச செயலக அனர்த்த பிரிவு தெரிவித்துள்ளது.

டொனேடோ சூறாவளி உருவாகி 3 கிராமங்களை தாக்கியுள்ளது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சூறாவளியால் 30 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அச்சத்தோடு காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெலிகந்த, காலிங்கவிலி அசேலபுர மற்றும் ருவன்பிட்டிய ஆகிய 3 கிராமங்களில் 30 வீடுகள் முழுமையாகவும், பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாக வெலிகந்த அனர்த்த பிரிவு அறிவித்துள்ளது.

இந்த சூறாவளி நிலைமை காரணமாக மின்சார தூண்களின் மீது மரத்தின் கிளைகள் உடைந்து விழுந்துள்ளமையினால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீட்டுத் தோட்டங்கள், மரங்கள் பயிர் செய்கைகள் உட்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் மழை பெய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.