Header Ads



தென்மாகாணத்தில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை, சீனாவுக்கு வழங்கும் நல்லாட்சி (?)

தென்மாகாணத்தில் சிறப்பு பொருளாதார வலயத்தை உருவாக்குவதற்கு, 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

‘இந்த சிறப்பு பொருளாதார வலயத்தின் மூலம் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் கைத்தொழில்துறை வருமானத்தை அதிகரிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில் அரசாங்க வருமானம் 16 தொடக்கம் 17 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும். இந்த இலக்கை எட்டாவிடின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

42 மில்லியன் டொலர் கடனுதவி பெறும் உடன்பாடு உலக வங்கியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரவில் நீர் விநியோகத் திட்டங்களுக்கான 46 பில்லியன் ரூபா ஜப்பானிடம் இருந்து நீண்டகால கடனாக பெறப்பட்டுள்ளது.

இந்த உதவிகளை சிறிலங்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. Well done Sri Lanka...
    it is timely needed .
    Butter that bankruptcy.
    Better our people get works
    It does not mean srilanka is sold out ..
    it is a new world we live in ?

    ReplyDelete

Powered by Blogger.