Header Ads



இமாம்கள் கதீப்மார்கள் 100 பேர் மக்கா நகர் நோக்கி புறப்பட்டனர்

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் இலவசமாக உம்ரா கடமைக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தின், 100 பேர் அடங்கிய 4ஆவது குழு இன்று வியாழக்கிழமை புனித மக்கா நகர் நோக்கி புறப்பட்டது.

இந்த உம்ரா குழுவை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் மட்டக்களப்பு கெம்பஸ் பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு, குழுவில் பயணிக்கும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களை வழியனுப்பி வைத்தனர். 

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைய, சமூகத்தின் எழுச்சிக்காக தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள உலமாக்களை கௌரவிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் முன்னெடுத்து வருகின்றது.  

அந்தவகையில், ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனியின் வழிகாட்டலில்  பள்ளிவாயல்களில் சேவையாற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட, இதுவரைக்காலமும் ஹஜ் அல்லது உம்ரா கடமையினை நிறைவேற்றாத, இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் 500 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக உம்ரா செல்வதற்கான வசதிகளை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செய்து கொடுத்துள்ளது.  

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே தலா 100 பேர் அடங்கிய மூன்று குழுக்கள் உம்ரா கடமையினை நிறைவேற்றியது. இந்நிலையில், 100 பேர் அடங்கிய 4ஆவது குழுவே இன்று புனித மக்கா நகர் நோக்கி புறப்பட்டது. மேலும் 100 பேர் அடங்கிய 5ஆவதும் இறுதியுமான குழு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி உம்ரா கடமைகளுக்காக புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.  

4 comments:

  1. Masha Allah. allah bless you and your family. we need more than more like this services.

    ReplyDelete
  2. சகோதரர்களே இந்த சேவையை பாராட்டுகின்றோம் ஆனால்? இவர்கள் இலங்கை முழுக்கவுள்ள முஸ்லிம்களை தேர்ந்தெடுக்கின்றார்களா கட்டாயம் தெரிந்தவர்கள் அறிவிக்கவும் அல்லது ஹிஸ்புல்லாவின் அல்லது அவர்களின் சஹாக்களின் தேர்தல்வளையத்திட்கு உட்பட்டவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அனுப்பி இவர்களின் வாக்குப் பெட்டிகளை நிரப்ப செயல்படுகின்றார்களா என்று அறிவிக்கவும் ஏனெனில் இதற்கு செலவு செய்யப்படும் பணங்கள் தாராளம் மனம்படைத்த வளைகுடா நாட்டு அரபிய தனவந்தர்களால் அனைத்து இலங்கை ஏழைகளுக்கும் அவர்களின் தேவைகள் நிறைவேற்றி கொடுக்கப்படவேண்டும் என்று கொண்டுவரப்படும் பணங்களாகும் இதில் அதிகமான பணங்கள் சவுதி அரேபியர்களுடையது் இலங்கை அனைத்து முஸ்லிம்களுக்கும் இதை பங்கு வைக்கவிள்லை என்றால் ஹிஸ்புல்லாவும் ரிசாதும் அடுத்தவன் வீட்டு கோழியை அறுத்து தன்உம்மாவின் பெயரில் கத்தம் கதையாகிவிடும்.

    ReplyDelete
  3. மேலும் இந்தபணங்களை கொண்டுவரும் அரேபியர்களில் ஒருவரான காலித் தாவூத் என்பவர் கூறியவிளக்கம் நாங்கள் இப்பணங்களை சவூதி தனியார் தொண்டுநிருவனங்கள் மூலம் சேர்து இலங்கை வாழ் அனைத்து ஏழை முஸ்லிம்களுக்கும் கொண்டு வருகின்றோம் அதிமானபணங்களை கொண்டுவருவதனால் இலங்கை அரசாங்கம் இதை தடுத்து விடுமோ என்ற பயத்தினால் யூகத்தால் இவ்வாறான முஸ்லிம் சில அரசியல் வாதிகளின் உதவினூடக அப்பணங்களை இலங்கைகு கொண்டு வருகின்றோம் மேலும் அல்லாஹுவை பயந்து எங்களின் பணங்களை இலங்கை முழுக்க தேவையுள்ள அனைத்து ஏழைகளுக்கும் முஸ்லிமகளுக்கும் கொண்டுசேர்க்க எங்களுடன் தொடர்புள்ள பொருப்புதாரிகளிடம் ஆசிகின்றோம் என்றார் ஆகவே சகோதரர்ககே இந்த இரண்டு அமைச்சரும் அரேபியர்களின் நோக்கத்தை கவணத்தில் எடுத்துள்ளார்களா ??? தீர்ப்பு நாள் நம்மரணத்தின் பின்பு உள்ளது என்று இவர்களுக்கு ஞாபக படுத்துகின்றேன்

    ReplyDelete
  4. இதனை விட எத்தனையோ ஏழை குடும்பங்கள் வீடு வாசல் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவ்வாறானவர்களுக்கு இந்த பணத்தை பயன்படுத்தினால் பிரயோசனமாக இருக்கும்... உம்றா செய்வது பர்ழு இல்லை... தனது தேவைக்கு அதிகமாக பொருளாதார வசதி படைத்தவர்களுக்குத்தான் கடமை. இஸ்லாம் யாருக்கும் கஷ்டம் கொடுக்கும் மார்க்கம் இல்லை. மிகவும் எளிமையான இனிய மார்க்கம்...

    ReplyDelete

Powered by Blogger.