Header Ads



10 வயதினிலே, பாயிஸ் எப்ப வருவார்...?

10 வயதினிலே...!!
இன்று புலமைபரீட்சை பெறுபேறு வந்தது
என்னை 12 வருடங்கள் பின்னோக்கி இழுத்தது
அன்று சுமார் இரவு 7 மணி இருக்கும்
எனக்காக தைக்கப்பட்ட புதிய சீருடை
என் தந்தை தாயிடம் அயன் செய்ததை உறுதிசெய்கிறார்..
நான் எதுவும் தெரியாமல் டிவி யில் மூழ்கியிருந்தேன்..
ஒரு வருடங்களுக்கு பின்
டிவி பார்க்க அனுமதி கிடைத்திருந்ததால்..
புதிய சீருடை அல்லவா
புணர்ந்து பார்க்க அழைக்கப்பட்டேன்
பொருத்தமாக இருந்தது
பெற்றோரின் முகத்தில் ஒரு சந்தோசம்..
பரீட்சை பெருபேறு வந்து
ஒரு மாதம் இருந்திருக்கும்
இதற்கிடையில் பல விருதுகள் வந்துவிட்டன..
ஆனால் நாளை விசேடமான நிகழ்வு..!
நேர்தியாக வரவேண்டும் என்ற
ஆசிரியரின் வார்த்தை இன்னும்
காதில் கேட்கிறது..!!
சொன்னது ஆசிரியை #தேவகுமாரி
நாங்கள் சுவர்ணா மிஸ் என்றழைப்போம்
என் மீதும் எப்போதும் ஒரு தனி பாசம்
நான் கண்ட ஆசிரியர்களிள் இவரை போல்
ஒருவரை கண்டதே இல்லை
எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது...
இப்பொழுது எட்டு மணியாகிறது..
நான் வீட்டின் செல்லபிள்ளை
உணவு ஊட்டியபடியே
தாயின் அறிவுரை
நாளை அமைச்சர் வருகிறார்
உனக்கு பரிசு தருகிறார்..
தந்தையின் குரலும் ஒலித்தது
பயம் கொள்ளாதே மகனே..!
நாளை கம்பீரமாக வீரநடை போட்டு..
மேடையில் ஏறி வென்று வா என்று கூறினார்..!!
அப்படி நாளை யார் தான் வரப்போகிறது
அவர் ரொம்ப பெரியவர் போலும்
பெரியபதவியில் உள்ளவரோ..
இராணுவத்தை சேர்ந்தவரோ..
போலீஸ்காரரோ..
என்னில் தொடர்ந்தது கேள்விகள்
அத்தனைக்கும்பொறுமையாக பதில் தந்தார் தந்தை..
ஆம் நாளை #பாயிஸ் வருகிறார்
அவரை தெரியாதவர் யாரும் உண்டோ..!
ஆளும்திறன் கொண்ட அரசன்..
ஆணையிட்டால் அபிவிருத்தி..
அடக்கிவிடுவார் எதிரிகளை...!!
நாளை உதயமாயிற்று
மேடையும் அலங்கரிக்கப்பட்டே இருந்தது
நான் தந்தையின் மடியில் எந்த கவலையுமின்றி
பாயிஸ் எப்ப வருவார்
நான் அவரை பார்த்தே ஆக வேண்டும்
ஒவ்வொரு அதிதியும் வரும் போது
தந்தையிடம் கேட்டு கொண்டே இருப்பேன்
இவரா பாயிஸ் இவரா பாயிஸ் என்று...
கூட்டத்தில் ஒரு பரபரப்பு
மேடைகள் உள்ளோர் எழும்பினார்கள்
வந்திருந்தோர் காதுகளுக்குள் குசுகுசுத்தனர்
மாலைகள் போடப்பட்டது
ஆம் பாயிஸ் வந்துவிட்டார் என்பதை உணர்ந்துவிட்டேன் இருப்பினும் தந்தையிடம் இவரா என்று உறுதிசெய்துகொண்டது என் பிஞ்சு பருவம்...
என்ன ஒரு கம்பீரம்..
என்ன ஒரு பேச்சு..
என்ன ஒரு ஸ்டைல்..
என்னை கவர்ந்து விட்டார்..
எனக்கான நேரத்தை கார்த்துகொண்டுஇருந்தேன்
என் பெயர் அழைக்கபட்டது
என் தந்தையின் மடியில் இருந்து துள்ளிகுதித்து
எனக்கான விருதை பெற்றுவந்தேன்
நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும்
என்ற K.a. Baiz அறிவுரை இன்னும் என் மனதில்..!!
எனது எல்லா வெற்றிக்கு எனது தந்தையே பின்பலமாக நிற்பவர் என் தந்தை Bukari Jamaldeen...!!
நான் Mafas...!!

No comments

Powered by Blogger.