Header Ads



ஒரு நாளில் 1 கோடி 80 இலட்சம் வருமானம் பெறும் நிறுவனம் - அம்பலப்படுத்தும் அநுரகுமார


இலங்கையில் குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் ஒன்று அதிகளவான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'Perpetual Treasuries' நிறுவனம் 2015ஆம் ஆண்டில் 520 கோடி வருமானத்தை பெற்றுள்ளது. இதற்கு பிரதான காரணம் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற பிணை முறி கொடுக்கல் வாங்களே என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு 90 கோடி வருமானத்தை பெற்ற 'Perpetual Treasuries' நிறுவனம் 2015ஆம் ஆண்டு 520 கோடி ரூபா வருமானத்திற்கு உரிமை கோருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

'Perpetual Treasuries' நிறுவனம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் எலோசியஸிற்கு சொந்தமானதாகும்.

இலங்கையின் பிரதான தரப்பு வர்த்தக வங்கிகளின் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2106ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான வருமானத்தை விடவும் பாரிய வருமானம் ஒன்றை 'Perpetual Treasuries' நிறுவனம் பெற்றுள்ளது. அதன் வருமானம் 520 கோடி ரூபாவாகும். அதற்கமை 'Perpetual Treasuries' நிறுவனம் நாள் ஒன்று பெற்றுக் கொள்ளும் வருமானம் 1 கோடி 80 இலட்சம் ரூபாவாகும்.

அதிக அளவிலான கிளைகள், பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டுள்ள வர்த்தக வங்கிகள் பெற்றுக் கொள்ளும் வருமானத்தை விடவும் ஒரு அலுவலகத்தை கொண்டு, கிட்டத்தட்ட 20 ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனம் ஒன்று இவ்வளவு பெரிய வருமானத்தை பெறுவது எவ்வாறு?

2014ஆம் ஆண்டு 'Perpetual Treasuries' நிறுவனத்தின் வருமானம் 90 கோடி ரூபாவாக இருந்த நிலையில் 2015ஆம் ஆண்டில் இவ்வளவு பெரிய வருமானத்தை பெற்றது எவ்வாறு?

2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டில் 520 கோடி வருமானத்தை பெறுவதற்கு பிரதான காரணம் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட பிணை முறி கொடுக்கல் வாங்கல்களாகும்.

பிணை முறைகளை கொள்வனவு செய்து விற்பனை செய்வது மாத்திரமே அந்த நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வருமானத்திற்கு காரணம் மாமா மற்றும் மருமகனின் கொடுக்கல் வாங்கல்களாகும்.

அர்ஜுன் மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராகியது இந்த நிறுவனத்தின் வருமானத்திற்கு காரணமாகியுள்ளது. இதனால் அரசாங்கம் பல்வேறு முறைகளில் இந்த கொடுக்கல் வாங்கல்களை மூடிமறைக்க முயற்சித்த போதிலும் அதன் வருமானம் மோசடிகளை காட்டிகொடுத்து விட்டது.

நாள் ஒன்றின் 24 மணித்தியாளத்தில் 180 லட்சம் வருமானம் பெறுவதற்கு இந்த நிறுவனத்திடம் உள்ள திறன் என்ன?

இந்த ஊடகவியலாளர் சந்தப்பில் அமர்ந்திருக்கும் நேரத்தில் 'Perpetual Treasuries' நிறுவனம் 7 - 8 லட்சம் ரூபாய் வருமானத்தை பெற்று விடும்.

இதனால் இந்த மோசடி தெளிவாக உள்ளது. இதற்காக உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மத்திய வங்கிக்கு விசேட பொறுப்பு உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.