Header Ads



தேசிய அரசாங்கத்திற்கு எதிரான, அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு
தேசிய அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று -03- நிராகரித்துள்ளது.

குறித்த மனுவை, கப்பற்படை அதிகாரி சரத் வீரசேகர மற்றும் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர் சிசிரடி ஆப்ரூ மற்றும் நீதியரசர் உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணைந்தே உருவாக்கியுள்ளது ஏனைய கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது ஒரு தேசிய அரசாங்கமாக இருக்க முடியாது என மனுதாரர்கள் விவாதித்திருந்தனர்.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான விவாதம் முன்னதாகவே நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டதுடன் சபாநாயகர் அனுமதியும் வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், சபாநாயகர் இதற்கான தீர்மானத்தை வழங்கியுள்ளதால் இந்த வழக்கு நிராகரிக்கப்படும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.