September 03, 2016

என்னிடம் Files இல்லை - தேவையான நேரத்தில் இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் - ஜனாதிபதி

என்னிடம் Files இல்லை தேவையான நேரத்தில் தேவையான இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் - ஜனாதிபதி

தம்மிடம் பைல்கள் எதுவும் கிடையாது எனவும் தேவையான நேரத்தில் தேவையான இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரகசியங்கள் இருப்பதாக தாம் கூறியது கடந்த காலத்தில் சிலர் கூறியதனைப் போன்று பைல்கள் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நினைவு உரையொன்றில் தாம் கூறிய விடயங்களை அவரது மனைவி சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே கூட அறிந்திருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


இதேபோன்று தேவையான நேரத்தில் தேவையான விடயங்கள் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டில் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்தமைக்கும், இம்முறை இலங்கை விஜயம் செய்வதற்கும் இடையில் தெளிவான வித்தியாசம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment