Header Ads



வசிம் தாஜுடீன் படுகொலை - இன்று நீதிமன்றத்தில் CID யினர் தெரிவித்த முக்கிய விவகாரம்

ஜனாதிபதி செயலகத்தின் உள்ளக தொலைபேசி வலையமைப்பிற்கும், தங்காலை கால்டன் வீட்டு தொலைபேசிக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுவதாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று -07- தெரிவிக்கப்பட்டுள்ளது.

றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அரசத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கொலை இடம்பெற்ற தினம் இரவு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து கால்டன் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.