Header Ads



இஸ்லாமிய பெண்கள், ஹிஜாப் அணிவது கட்டாயம் - நீதிமன்றம் தீர்ப்பு

கென்யாவில் இஸ்லாமிய பெண்கள் பள்ளிச் சீருடையின் ஓர் அங்கமாக, ஹிஜாப் என்றழைக்கப்படும் தலையை மறைக்கும் துணியை அணிய வேண்டும் என்று அங்குள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இஸியோலா மாகாணத்தில் ஒரு தேவாலயம் நடத்தும் பள்ளியில், மாணவிகளின் பள்ளி சீருடையில் கூடுதலாக ஹிஜாப் அணிவதற்கும் மற்றும் வெள்ளை கால்சட்டை அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பள்ளியில் படிக்கும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்கள் வேறொரு ஆடை அணிவது மாணவர்களிடையே பேதத்தை உருவாக்கும் என இந்த முடிவு குறித்து வாதிட்டுள்ளனர்.

ஆனால், கல்வியை ஊக்குவிப்பு செய்பவர்கள் மதிப்பு மற்றும் கண்ணியமான கொள்கைகள், பாகுபாடு காட்டாமை போன்ற கொள்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கென்ய நாட்டில் உள்ள பள்ளிகள் ஏற்கனவே பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.