Header Ads



ஜெனீவா செல்லும் யாழ்ப்பாண குழுவினருக்கு, கத்தார்வாழ் யாழ் நண்பர்கள் வாழ்த்து


வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு தமிழ் விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கவனத்திற்கு கொண்டு வருவதற்காக சிவில் பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக யாழ்ப்பாண முஸ்லிம்களின் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 27 ம் திகதி செவ்வாய் கிழமை ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குச் செல்லும் வடக்கு மாகாண முஸ்லிம்கள் அங்கு ஐ.நா அதிகாரிகள் , சர்வதேச பிரதிநிதிகள்,மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் பிரதிநிகள்,அரபு மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள்  மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்திக்கவுள்ளனர்.

இதற்கான அனுமதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமிருந்து கிடைத்துள்ளது என அவ்வமைப்பு தெரிவித்தள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த சந்திப்புகளுக்காக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தனி அறை ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

வடக்கு மாகாண முஸ்லிம்களின் சார்பில் சுமார் 30 பேரடங்கிய குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது.லன்டன்,பிரா ன்ஸ்,ஜேர்மனி,நோர்வே,சுவீடன், இத்தாலி மற்றும் சுவிஸ் நாடுகளில் வாழ்கின்ற யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இந் நிகழ்வு வெற்றிகரமாக அமைவதற்கு கத்தார் வாழ் யாழ் நண்பர்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களையும் தருவதாக எமது நல் வாழ்த்துக்கள் அவர்களுக்கு உரித்தாகட்டும் எனவும் இது தொடர்பில் ஐ.நா மனித  உரிமை  ஆணைக்குழு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அத்துடன் இதற்கான நியாயமும் பெற்றுத்தர வேண்டும் எனவும் கத்தார் வாழ் யாழ் நண்பர்கள் உள்ளிட்ட பலர் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்தாரில் இருந்து செய்திகளுக்காக முஸாதிக் முஜீப்

2 comments:

  1. For 26 years you have been waiting for justice
    Neither Muslims politicians nor srilankan government did anything to help out displaced Muslims..
    Muslim community did little bit.but practically how long they could ?
    People of puttalam and some areas did help them ...
    But it is brave that you have done this...
    At least international community should know what happens..
    It is important to go there ...but follow up is more important.
    Please do take notes of what they say ..
    Please take all in writing..
    You set example to all minorities in the world .

    Hope Burmese Muslims too do like this ..?
    People in Palestine did it for 60 years without any benefit ..
    But your case is different..
    May Allah bless you all..
    May Allah reward you all..

    ReplyDelete

Powered by Blogger.