September 18, 2016

வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான, கோசம் போடுபவர்களை கண்டிப்பவர்களுக்கு..!

வடகிழக்கு இணைப்பிற்கு மு.கா தலைமை உடன்பாடு என்பதை விட அதுவே மு.கா கட்சியின் நீண்ட கால நிலைப்பாடு எனலாம் (இணைந்த வடகிழக்கில் முஸ்லிங்களுக்கான தனி அழகு) 

வடகிழக்கு இணைப்பிற்கான முன்னெடுப்புகளை நல்லாட்சி அரசாங்கத்தின் உதவியுடன் சர்வதேசமும் டயஸ்போறாக்களும் சேர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. இம்முன்னெடுப்புகள் ஆரம்பத்தில் ஆட்டம் காணாமல் இறுக்கமான தளமாக போடப்படுமானால் அடுத்த கட்ட நகர்வுகள் இலகுவாக அமையும்.

எனவே, இவ்வாரம்ப  முன்னெடுப்புகளுக்கான எதிர்வினையே கிழக்கு முஸ்லிம் மக்களின் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான கோஷங்கள் ஆகும். இவ்விடயத்தில் கிழக்கு முஸ்லிம் மக்கள் அரசியல்வாதிகளை நம்புவதற்கு தயாரில்லை என்பதனால், இவ்விடயம் தொடர்பாக  கிழக்கு  மக்கள் அதிக கரிசனை செலுத்துவதை புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. 

அதுமட்டுமில்லாமல் நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்படும் தலைவர்கள் கூறும் கருத்துக்கள்  கூட முஸ்லிங்கள் மத்தியில் பலவிதமான கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.  இவ்வாறான தலைவரின் கருத்துக்களுக்கு எதிரான வெளிப்பாடுகளே வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான கோஷங்களுக்கு இன்னுமொரு காரணி எனலாம்.

மு.கா கட்சியின் பயணத்தில், முன்னாள் தலைவர் தொடக்கம் இன்றுவரை இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக இணைந்த வடகிழக்கில் முஸ்லிங்களுக்கான தனி அழகு எனும் கோரிக்கையே வலுப்பெற்று இருக்கிறது. இதனையே மு.கா தாரக மந்திரமாக கொண்டுள்ளது. இதில் மு.கா தலைவர் உறுதியாக இருக்கிறார் என்பதை "2006 வடகிழக்கு பிரிப்பு நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடக அறிக்கை" மூலம் புரிந்து கொள்ளலாம். 

வடகிழக்கு பிரிப்பின் பின் மு.கா தலைமை ரவூப் ஹக்கீம் அவர்களின் ஊடக அறிக்கையின் ஒரு பகுதி ...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் எமது முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் காலம் தொட்டு நிபந்தனையுடனான வடக்கு – கிழக்கு இணைப்பை நாங்கள் கொள்கையாகக் கொண்டிருந்தோம்.

அன்றைய அரசு 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களிடம் எதையும் கேட்கவில்லை. அதேபோன்று இன்று வடக்கு – கிழக்கைப் பிரிப்பதிலும் முஸ்லிம்களுக்கு எந்த பங்கும் இருக்கவில்லை. வடக்கு – கிழக்கு முஸ்லிம்களின் பிரதான அரசியல் அபிலாசை, அங்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இனத் தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை அலகு என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. 

அத்துடன் மு.கா பிரதித் தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் "வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு மு.கா நிபயந்தனையுடன் ஆதரவு" என்று கூறியிருந்தார்.

அது மட்டும் இல்லாமல் ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் அதே நிலைப்பாட்டுடன்  தான் இருக்கிறார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி அவர்கள் ....

"அண்மையில் வடக்கு மாகாணத்தில் (எந்த இடம் என்று மறந்துவிட்டது) நடைபெற்ற ஜெர்மன் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள், இலங்கையில் சிங்களவர்கள் நின்மதியாக வாழவேண்டும் என்றால் தமிழர்களுக்குரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு விழாவில், ஜனாதிபதியின் உரையிலிருந்து.......

பாண்டா - செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி - செல்வா ஒப்பந்தங்களுக்கு சிலர் இடமளிக்கவில்லை, இதன் பலனாக பாரிய யுத்தம், இந்திய ராணுவத்தின் வருகை, 13வது திருத்தச் சட்டம் என்பன நாட்டுக்குள் வந்தன. நாம் முதலில் செய்ய வேண்டியதை முன்னரே செய்திருந்தால் இந்த பாரிய பேரழிவு நடந்திருக்காது. (http://www.jaffnamuslim.com/2016/09/65.html) 

இதன் மூலம் ஜனாதிபதி சொல்ல வருவது என்ன? தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை கொடுப்பதற்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளாரா? 

#இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிங்களுக்குரிய நிர்வாக அதிகார சபை கொடுப்பதற்கு தமிழர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று வடக்கு மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா எதற்காக தெரிவித்தார்.  

வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்பதைவிட, அவ்வாறான முன்னெடுப்புகள் முஸ்லிங்களின் அனுமதி பெற்று முஸ்லிங்களுக்குரிய தீர்வுகளுடன் இடம்பெற வேண்டும் என்பதே கோசம் போடுபவர்கள் உண்மை நிலைப்பாடு ஆகும். வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான கோசம் போடுபவர்களை கண்டிப்பவர்கள் மேலேயுள்ள தலைவர்களின் கருத்துக்களுக்கு என்ன சொல்ல போகிறார்கள்.

-Manaff Ahamed Rishad-

30 கருத்துரைகள்:

இணைந்த வட கிழக்கு சஷ்டி நிறுவப்பட வேண்டும்.அதற்குள் தற்போதைய வடக்கு, கிழக்கு தமிழ் அலகு, முஸ்லீம் அலகு என 3மாகணங்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட விடையங்களில்(முக்கியமாக மதம், கலாசாரம், விவசாயம், குடியேற்றம், சுதேசமருத்துவம் என்பன கட்டாயம்) இவ் மாகணங்களினால் தெரிவு செய்யப்படூம் தவிசாளர் (மாகாணஅமைச்சர்) அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்.இணைந்த வடகிழக்கு மாநிலம்.மத்திய அரசிற்கு ஒதுக்கப்பட்ட சர்வதேச வரர்தகம், வெளிஉறவு, இரணுவம் உள்ளிட்ட சில முக்கிய அதிகாரங்கள் தவிர ஏனைய அதிகாரங்களை கொண்டீருக்கும்.

No need to joined north and east province together.

Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppression's, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate.
On 2 and 8 September 1988 President Jayewardene issued proclamations enabling the Northern and Eastern provinces to be one administrative unit administered by one elected Council. The North Eastern Province was born. The proclamations were only meant to be a temporary measure until a referendum was held in the Eastern Province on a permanent merger between the two provinces. However, the referendum was never held and successive Sri Lankan presidents have issued proclamations annually extending the life of the "temporary" entity.
The merger was bitterly opposed by Sri Lankan nationalists. The combined North Eastern Province occupied one fourth of Sri Lanka. On 14 July 2006, the JVP filed three separate petitions with the Supreme Court of Sri Lanka requesting a separate Provincial Council for the East. On 16 October 2006 the Supreme Court ruled that the proclamations issued by President Jayewardene were null and void and had no legal effect. The Eastern Province was formally born on 1 January 2007. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA, Insha Allah. This comment column is not enough to list the administrative and political atrocities the Tamil politicians and the TNA/ITAK had done to the Muslims in the Eastern Province since Independence. The above content is NOT communal or racists but the TRUTH and nothing but the TRUTH. "The Muslim Voice" also feels that the "KILAKKIN ELUCHI" campaign should also be supported by all the Muslims, especially Muslims of the Eastern Province, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

ஊருக்கு ஒரு மாகாண சபை கொண்டு வாரத்துக்கு முடியல அதுக்குள்ள இணைந்த வட கிழக்கு

As per recent research, Only ISIS terrorists supporters do oppose joining North-East provinces.
The peace loving Muslims do not oppose it.

This comment has been removed by a blog administrator.

As per my knowledge, Only LTTE terrorists supporters do support joining North-East provinces.
The peace loving Tamils do not support the merge of North-East provinces.

Donald drumpt said Iss made by obama & Hilari clinton

(மாண்பு மிகு கிழக்கின் எழுச்சி ஏற்பாட்டாளர்களுக்கு)மூட்டாள் பயலுகளே தேர்தல் முறைமாற்றத்தால் இனத்தின் பிரதி நிதித்துவம் பறிபோ போகுது அத தட்டி கேக்க வக்கில்லை எங்க தமிழனுக்கு ஏதும் கிடைச்சுடு மோனு குழப்பு றத்துக்கு திரியுறீங்க.அதல தான் சிங்களவன் கூடவே உங்கள வச்சுறுக்காங்க.துக்கிபோடுறத கவ்விட்டு தமிழன பாத்து குலைச்சு கொண்டு இரூப்பீங்க.

இவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் LTTE பயங்கரவாதிகள் இருப்பதை மறுக்கும் அதேநேரம் இல்லாத ISIS யை பற்றி புதுக்கதை விடுகிறார்கள் . புலனாய்வு பிரிவு வைத்துள்ள அரசாங்கத்தின் மூலமே ISIS பற்றிய தகவல்களை பெற முடியவில்லை . இவர்கள் எப்படித்தான் ISIS தகவல்களை பெறுகிறார்களோ தெரியவில்லை .

வட கிழக்கு இணைப்பபது என்பது LTTE இன் எட்டாக்கனவை நனவாக்குது போல் ஆகும்.
அந்த LTTE பயங்கரவாதிகள் இந்த இனைப்பை மையப்படுத்தித்தானே தமிழ் ஈழத்தை உருவாக்க கனவு கண்டார்கள் ?

As per recent research only ltte refugees supporting for join north-east!

peace loving tamils do not support it

இந்து தமிழ் சகோதரர்ககளே....
நான் உங்களை நேசிக்கிறேன்.
ஆனால் இணைந்திருந்த காலத்தில் நாங்கள் பட்ட துன்பங்களால் மனம் இன்னொரு இணைப்பை ஏற்க மறுக்கிறது.
உங்கள் தலைவர்களும் தொண்டர்களும் எங்களை துவம்சம் செய்த போது நீங்கள் வாய் திறக்க வில்லையே அது தான் எங்களுக்கு அவநம்பிக்கையை தருகிறது.
இணைக்க வேண்டும் என்ற கற்பனையை விட்டு விடுங்கள்.
நாங்கள் விடப் போவதும் இல்லை நீங்களும் விடப்போவதில்லை என்றால் இந்த இழுபறி பெரும்பாபான்மைக்கு சாதகமாய்ப் போய் விடும்.
அவர்களே ஆள் வைத்து இதைக் கிளரி விடுவார்கள்.
அப்புறம்...
உங்கள் எங்கள் உரிமைப் போராட்டம் எல்லாம் கனவுகளாகி விடும்.
ஒன்று இரண்டாக இருந்தால் மத்தியில் இருந்து நிதி ஒதுக்கீடும் இரண்டு மடங்காகி விடுமே.
இதை என் இல்லாமல் ஆக்க வேண்டும்.
அன்பான பக்கத்து வீட்டுக் காரர்களாக இருப்போம் வாருங்கள்.

"உங்கள் எங்கள் உரிமைப் போராட்டம் எல்லாம் கனவுகளாகி விடும்."
அதுசரி
தமிழர்க்கு உரிமை போராட்டம் உண்டு.மூஸ்லீம்களின் உரிமை போராட்டமா?? அது என்ன??
இந்த
1.அமைச்சு பதவிகளுக்கு போராடுவது.
2.எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதனுடன் ஓட்டி கொள்வது.
3.சம்பந்தமே இல்லாத மேடைகளில் எல்லாம் புலிகளை வசைபாடி சிங்களவன் மனதைகுளிர்விப்பது.
4.தருஸ்ஸலாமை மீட்கும் போராட்டம்.
5.தேசிய பட்டியல் உறுப்பினருக்கு அடிபடுவது.
6.எப்போதெல்லாம் தீர்வுதிட்டம் வருகின்னறதோ அப்போதெல்லாம் சிங்களவன் ஆணையை ஏற்று அதனைகுழப்புவது.
7.தமிழ் அரசியல் வாதிகள் (குறிப்பாக விக்னேஸ்வரன்) என்ன அறிக்கை விட்டாலும் அவ்அறிக்கையின் ஒவ்வொரு வரியையும் விமர்சிப்பது.
8.கட்சிதாவுவது, காட்டிகொடுப்பது என்பவற்றை செய்துவிட்ட்டு இராஜ தந்திரம், சாணக்கியம் என்று பீத்தீகொள்வது.
9.உச்சமாக ஐநா வில் சென்று சிங்கள வனுக்கு வக்காளாத்து வாங்கிவிட்டு.ஐநா உயர்ஸ்தானிகரும், ம.உரிமை ஆணையரும் இலங்கை வந்தால் எம்மை சந்திக்க வில்லை என்று ஓலமிடுவது.
10.தனி மாவட்டத்தைகூட தராத சிங்களவனுக்காக சுயஅதிகார அலகு தருவதாக கூறிய விக்கீனேஸ்வரனை வசைபாடுவது.
இதுதானே முஸ்லீம் களின் உரிமை போராட்டம்.

RAW அரசாங்கத்திற்கு வழங்கிய விரிவான புலணாய்வு அறிக்கையின் படி இலங்கையில் தற்போது LTTE இல்லை.
ஆணால், ISIS பயங்கரவாதிகளின் தொடர்புகள் இலங்கையில் வேகமாக வழர்ச்சி அடைந்து வருகிறது. எனவே முஸ்ஸிம் அடிப்படை வாதிகள் கவனிகபடல் வேண்டும்

Now Mr.Ajan also start to use this trick like Western anti Muslims. That showing Muslims as two parts, example peace lovers and terrorists.

You are a true muslim and true citizen of the east who feels freedom for all who loves freedom and humanity against the atrocities and genocide of the facist LTTE. I do perfectly agree with you. If,by the grace of the almighty, the LTTE not defeated can muslims exist in the region ? Mass destruction at Mullivaikal at the last moment is the result of their own handiwork. TNA joined UNP to defeat draft constitution of Ashraff in parliament for their evil thought that Muslims should not enjoy any rights and be suppressed by tamils.If they had supported Ashraff,minorities could have won many things including merger of the north & east,lands and lives of 40,000 innocent Tamils.If Sampanthan and his fellowmen speak out of their purity and if it is true that they speak one and the same in the matter of ethnic issues at any level, then why he was not accompanied by muslim representatives to meet foreign dignitories?. Muslims are not ready to allow Sampanthan to win his cards in the battle against them Insha Allah.

வட, கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்கின்றன.

பிரிந்தே இருக்கும்.

வட மாகாணத்தை மேலும் 2 மாகாணங்களாகப் பிரித்தால், தமிழனுக்கு முழுத்தீர்வு கிடைக்கும் .

தனி அலகு தருவது விக்னேஸ்வரன் வேலை இல்லை அது மத்திய அரசாங்கத்தின் வேலை ,தான் போக இடமில்லை டவில் போல் மாராப்பு என்ற கதையாக இருக்கிறது உங்களின் காமடி.அவர் அங்க பிச்சை எடுத்து அதில் கொஞ்சத்தை இங்கு கொடுப்பாராம் பேராசை பெரும் தரித்திரியம்.

Ajan,உங்கள் Raw இற்கு சொல்லுங்கள் ltte இந்தியாவில் இல் உள்ளது என்று

Dear Kumar Kumaran
நீங்கள் சொல்வது எமது அரசியல்வாவாதிகளுக்குப் பொருந்தலாம்.
நீங்கள் நினைப்பது போல் அரசியல்வாவாதிகளை நாம் தலைவர்ககளாக ஆக்கிக் கொள்வதில்லை.
அவர்கள் எமக்கு வளங்களைப் பெற்றுத் தரும் ஏஜண்டுகள்.
That's it.
அவர்களது சூடேற்றும் பேச்சுக்களை ரசிப்போமே தவிர உங்களைப்போல நம்புவதில்லை.
எமக்கென்று ஒரு ஒரு போராட்ட வழியிருக்கிறது.
அது அடுத்தவர்ககளுக்கு புலப்படுவயில்லை.
அதனால் தான் ஆயுதம் ஏந்தாமல், அடுத்தவர் இரத்த்தம் சிந்தாமல் இத்தனை உரிமைகள் பெற்று வாழ்ந்து வருகிறோம்.

அப்ப நாங்க பிச்சை எடுத்து முழுவதையும் உங்களுக்கே தரவேண்டுமோ ... ஹீஹீ,
அரசாங்கத்துண்ட காலைநக்கி கொண்டு இருப்பியல் தீர்வெண்டு வரும்போதெல்லாம் ஓடி வந்து குரைப்பீங்க.
உண்மையை சொல்லப்போனால் உங்களுக்கு தமிழரைபார்த்து பொறாமை.தன்னை போல ஒரு சிறுபான்மை இனம் தன் விட 2%மே அதிகமாக உள்ள ஒரு இனம் சுயமாக தன்னை ஆளப்போகிறது நாம் சிங்களவனுக்கு அடிமையய் இருகிறோமே என்று!!

எத்தனை உரிமைகளை பெற்று வாழ்கிறறீர்ர்...ஹீஹீ
1.பல ஆண்டு பழமையான பள்ளிவாசல் ஒன்று அப்புறபடுத்தப்பட்டததே அதுவா
2.அழுத்கம சம்பவமா?
3.தர்க்கா நகரில் கிடைத்த உரிமையா.
4.உங்கள் பெண்களின் ஆடைக்கு விடுக்கப்பட்ட சவாலா (பொது பல சேனா வால்)
5.வாரம் ஒரு பள்ளிவாசல் தாக்கபடுகிதெ அதுவா)?
6.நுரைச்சோலை சுனாமி வீடமைப்பு திட்டமா?
இவை தான் நீர் பெற்ற உரிமை யென்றால் உமது போராட்டம்வெற்றிதான் வாழ்த்துகள்.

உமது போராட்டம் வெளியில் தெரியாதொ ...விநேதமான போராட்டம் தான்

நேசம் மிக்க திரு Kumar Kumaran....
உண்மை தான் இது விநோதமானது தான்.
போராட்டம் என்ற சொல்லுக்கு கொலை, கொள்ளை, சேதம் விளைவித்தல், நாசமாக்குதல் என்று தான் நீங்கள் கருதினால் நாங்கள் அதனை செய்வதில்லை.

அடுத்து மேலே நீங்கள் குறிப்பிடுள்ள எமக்கெதிரான சிங்கள சகோதரர்ககளின் செயல் பாடுகளில் பெரும்பாபாலானவை ஈழ டயஸ்போராக்களின் தூண்டலில் நடந்தவை தான்.
இருந்தாலும் நாங்கள் உங்ககளை நேசிக்கிறோம்

பொறுமை எல்லை மீறும் புழுவும்போ கூட புலியாய்து மாறும்.
சகொதரா தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவது பொல நடிப்பவனை
எழுப்ப முடியாது.


செல்லும் பாதை பிழை என்று தெரிந்தும் அதற்கு நியாயம் கற்பிக்கும் உம் அறியாமை கண்டு வருந்துகிறேன்.

Post a Comment