Header Ads



மகிந்தவுக்கு அப்பம் சுட்டவர், ரணிலின் கட்டுப்பாட்டில்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறுவதற்கு முன்னர் சாப்பிட்டதாக கூறப்படும் அப்பத்தை சுட்டுக்கொடுத்த சமையல்கார், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமை உட்பட சில விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, டளஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன, வீரகுமார திஸாநாயக்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அண்மையில் அலரி மாளிகைக்கு சென்று பிரதமரை சந்தித்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோப்பி விருந்தளித்துள்ளார்.

அப்போது அங்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், “ சேர் தரும் கோப்பியை குடித்த பின்னர் எமக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு விடுமோ தெரியாது” என்று கூறியுள்ளார்.

இதன் போது குறுகிட்ட உதய கம்மன்பில், “ஜனாதிபதி மகிந்த, கோப்பி வழங்கியதால் பிரச்சினைகள் ஏற்படவில்லை. அப்பத்தை வழங்கியதால், கட்சியின் செயலாளரை இழந்தார்” என்றார்.

இவர்கள் கூறிய கேட்ட பிரதமர் பெரிய சிரிப்பை வெளியிட்டதுடன், “ அன்று அப்பம் சுட்டவர் சமையல்காரர் தற்போது என்னிடம் இருக்கின்றார். அலரி மாளிகையின் ஊழியர்களை அறிமுகப்படுத்தும் நாளில் ஜனாதிபதியே இவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்லும் முன்ன அப்பம் சுட்டுக்கொடுத்தது தானே என அந்த சமையல்கரர் கூறினார்” என்றார் பிரதமர்.

No comments

Powered by Blogger.