September 07, 2016

பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தெரிவும், ஆண்டுக்கான திட்டமிடலும்


-VTM. IMRATH-

பல்கலைக்கழகங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும் என்ற நீண்டகால வேண்டுகோளின் விளைவாக, ஏற்கனவே பல்கலைக்கழக வளாகங்களில் இயங்கிவரும் முஸ்லிம் மஜ்லிஸ்களை ஒன்றிணைத்த ஒரு குடை அமைப்பாக உருவாக்கப்பட்டதுதான் ஒம்சா (AUMSA) எனப்படுகின்ற அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமாகும்.

2002 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, சுனாமிக்கு பிற்பட்ட மீள் குடியேற்ற காலத்தில் ஓர் இயங்கும் படையாக உருவெடுத்து, பல்வேறு சமூக நல விடயங்களில் பங்காற்றிவிட்டு காலவேட்டத்தில் ஓய்வுநிலைக்கு சென்றது.

பிற்பட்ட காலத்தில் மீண்டும் இப்படியொரு அமைப்பின் இயங்குநிலை பலராலும் கோரப்பட்டதை அடுத்து, 2012ம் ஆண்டு முதல் பல்வேறு நபர்களாலும் மேற்கெள்ளப்பட்ட தீவிர முயற்சியின் விளைவாக, கடந்த வருடம் மூச்சுப்பிடித்து மீளவும் உயிர்பெற்றது.

கடந்த ஒரு வருடத்தில் இலங்கையின் அனைத்து வளாகங்களையும் சேர்ந்த மஜ்லிஸ்களை ஒன்றுசேர்ப்பதிலேயே பாரிய நேரங்களை செலவிட்ட இவ்வமைப்பு, ஆங்காங்கே சில சமூக பங்களிப்புகளையும் வழங்கி துளிர்விடத் தொடங்கியது.

அதன் அங்கீகாரங்களாக, தேசிய சூரா சபை மற்றும் ஜம்மியத்துல் உலமா போன்ற தலைமை தாங்கும் அமைப்புகளில் ஓர் அங்கமாக வகிபாகம் வகித்து வருகின்றமை ஹைலைட் பண்ணப்பட வேண்டிய விடயமாகும்.

இப்படியொரு வளர்ச்சிப்பாதையிலே பயணித்துக்கொண்டிருக்கும் ஒம்சா அதன் இரண்டாவது வருடாந்த மொதுக்கூட்டத்தையும் நடாத்தி புதிய நிர்வாகத்தையும் அண்மையில் தெரிவு செய்தது!

கடந்த சனியன்று (03/09/2016) கொழும்பு - 2 இல் அமைந்துள்ள வேகந்தை ஜும்மா பள்ளிவாயல் மண்டபத்திலே நடைபற்ற இந்நிகழ்வில், ஒம்சாவினுடைய 26 அங்கத்துவ மஜ்லிஸ்களில் இருந்து சுமார் 18 மஜ்லிஸ்கள் பிரசன்னமாகியிருந்தது! (பரீட்சை காரணமாக ஏனைய மஜ்லிஸ்கள் கலந்துகொள்ளவில்லை!)

அமைப்பின் கடந்தகால நிகழ்வுகள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பித்தல், உள்ளக யாப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய நிர்வாகம் ஒன்றை தெரிவுசெய்தல் பேன்ற மூன்று நோக்கங்களுக்காக கூடப்பட்ட அன்றைய நிகழ்வு, முன்னால் தலைவர் எம்.ஏ. ஆஷிக் அவர்களினால் தலைமையுரை ஆற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் ஏனைய அறிக்கை சமர்ப்பித்தல் நிகழ்வுகள் என பரந்த கலத்துரையாடலுக்குள் சென்றது!

அதனைத் தொடர்ந்து ஒம்சாவுக்கான அடுத்த நிர்வாக குழு ஒன்றை தெரிவு செய்வதற்காக, அனைத்து மஸ்லிஜ்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

பின், குறித்த குழுவானது மஷூரா அடிப்படையில் கலத்துரையாடி ஓரு வலுவான நிர்வாகத்தை மிகவும் சுமுகமான முறையில் தெரிவுசெய்தமை சிறப்பம்சமாகும்!

அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் முறையே,

தலைவர் :
ஏ.எம். அஷ்ரான் - களனி பல்கலைக்கழகம்
பொதுச் செயலாளர் :
வீ. டி.எம். இம்றாத் - ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
பொருளாளர் :
ஏ.எச்.எம். ஹிஷாம் - வயம்ப பல்கலைக்கழகம்
ஒருங்கிணைப்பாளர் :
எம்.என்.எம். அப்ஷர் - மொரட்டுவை பல்கலைக்கழகம்

உப தலைவர்கள் :
1. எம்.எல்.எம். ரிப்ஷான் - தென்கிழக்கு பல்கலை.
2. எஸ்.எல். முஷாக்கிர் - பேராதனை பல்கலை.
3. எம்.எம். இம்தாத் - ருஹுனு பல்கலை.

உப செயலாளர்கள் :
1. எம். ஸஹீட் - சப்ரகமுவ பல்கலைக்கழகம்
2. ஏ.எம்.ஏ. மஹீஸ் - கொழும்பு பல்கலைக்கழகம்
உதவி பொருளாளர் : 
எம்.எச்.ஜெம்சீத் அஹ்மத் - ரஜரட்டை பல்கலை.
இதழாசிரியர்கள் :
எம்.என்.எம்.ரிப்கான் - ஊவா வெல்லஸ்ஸ பல்கலை.
எம.ஐ.இர்ஷாத் - கிழக்கு பல்கலைக்கழகம்.

நிறைவேற்று குழு உறுப்பினர்கள் :
ஒவ்வொரு பிரதிநிதிகள் முறையே ஏனைய  14 மஜ்லிஸ்கள்!
இந்த புதிய நிர்வாகத்தின் அறிவிப்போடு நிகழ்வுகள் யாவும் முடிவுக்கு வந்தது!

அல்ஹம்துலில்லாஹ்!

1 கருத்துரைகள்:

Post a Comment