Header Ads



நான் பொறுப்புடன் கூறுகிறேன், யாழ்ப்பாணத்தில் முகாம்கள் குறைக்கப்படவோ, கைவிடப்படவோ மாட்டாது”

யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்று யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

2010ஆம் ஆண்டு வரை பலாலி உயர் பாதுகாப்பு வலயம், 11,269 ஏக்கர் பிரதேசத்தை உள்ளடக்கியதாக இருந்தது.

அதன் பின்னர், சிறிலங்கா அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில், 7,210 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

பாதுகாப்புத் தேவைகளுக்கு அவசியமான எஞ்சியுள்ள எந்தக் காணிகளையும் மீள ஒப்படைப்பதில்லை என்பதே இராணுவத்தின் நிலைப்பாடாக உள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொள்ளாமல் பலாலி விமான நிலையம் மற்றும் இராணுவ கன்டோன்மென்ட் பகுதிகளுடன் உள்ள நிலங்களை மேலும் குறைக்க முடியாது.

காணி உரிமைகளை மீளப் பெற முடியாதவர்களுக்கு அரசாங்கம் மாற்றுக்காணிகளை வழங்க வேண்டும். தற்போதுள்ள இடத்தில் இருந்து ஒரு அங்குல நிலத்தையேனும், இராணுவத்தினால் விடுவிக்க முடியாது.

யாழ். குடாநாட்டில் இராணுவத்தின் வசமிருந்த 27,259 ஏக்கர் காணிகளில், 21,134 ஏக்கர் காணிகள், 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 11 கட்டங்களாக விடுவிக்கப்பட்டு விட்டன.

யாழ். குடாநாடு முழுவதிலும், நாம் பல்வேறு முகாம்களையும் சோதனைச்சாவடிகளையும் அகற்றியுள்ளோம். எனினும், ஆளணியின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை.

பலாலியில் உள்ள யாழ். படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள 51, 52, 55ஆவது டிவிசன்களின் கீழ் தலா 3 பிரிகேட்கள் உள்ளன. இந்த பிரிகேட்கள் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முகாம்களை அமைத்து நிலைகொண்டுள்ளன.

நான் பொறுப்புடன் கூறுகிறேன், இனிமேலும் யாழ்ப்பாணத்தில் முகாம்கள் குறைக்கப்படவோ, கைவிடப்படவோ மாட்டாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

4 comments:

  1. Goverments has rights to keep their security forces wherever they wants.Nobody has rights to refuse that.

    ReplyDelete
    Replies
    1. Can government keep force in your house.

      Delete
  2. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் தீர்மானிக்க வேண்டிய விடயம். இது மக்கள் ஆட்சி. இராணுவ ஆட்சியல்ல. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே.

    ReplyDelete
  3. இவ்வாறான பேச்சுக்கள் வர காரணம் தமிழர்கள்தான் இந்த அரசாங்கம் ஆட்சியில் ஏறிய பின் பல வகையான விட்டுக்கொப்போசெயல்பட்டு வந்தது அவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் தரப்பில் இருந்து பலவகையான எதிர்ப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பல்கலைக் கழகத்தீல் சிங்கள மாணவர்களுக்கு எதிராகவும்.வடக்கில் உள்ள சிங்களவர்களுக்கு எதிப்பான கோசங்கள்,வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்ற ஆலோசனை முன் வைப்பு,நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ,மலேசியாவில் தூதுவர் தாக்குதல் இவ்வாறாக அரசாங்கத்தின் அனௌதீதுக்கும் எதிரான செயற்பாடுகள்.விஷேசமாக வடாமாகாண மு.அமைச்சரின் நடவடிக்கைகள் அரசாங்கத்தையும் பாதுகாப்பு தரப்பையும் சந்தேகமடைய செய்கின்றது.இவ்வாறான ஒரு நிலையில் முப்பது வருடம் யுத்தம் நடந்த ஒரு தீவில் இருந்து எந்த நாட்டு அரசாங்கமும் இராணுவத்தை பாபஸ் பெறமாட்டாது.

    ReplyDelete

Powered by Blogger.