Header Ads



'சவூதி அரச துறையில் பணியாற்றும் அத்தியாவசியமற்றவர்களின், ஒப்பந்தக்காலம் புதுப்பிக்கப்படாது'

பொதுத்துறை பணியாளர்களுக்கான நிதி சலுகைகளை குறைக்கும் புதிய திட்டம் ஒன்றை சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி அமைச்சர்களின் சம்பளம் 20 வீதத்தால் குறைக்கப்பட்டிருப்பதோடு ஷூரா கவுன்ஸில் உறுப்பினர்களின் சம்பளத்தில் 15 வீத வெட்டு விழுந்துள்ளது.

மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி, எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் ஆடம்பர பொதுச் செலவுகளை கட்டுப்படுத்தி வருகிறது.

அரச பணியாளர்களுக்கு ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் இஸ்லாமிய புத்தாண்டில் ஆண்டு போனஸ் வழங்கப்பட மாட்டாது என்றும் பணி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்போது அல்லது நீடிக்கப்படும்போது சம்பள அதிகரிப்புகள் சேர்க்கப்படாது என்றும் அரச ஆணை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இதில் அமைச்சர்களுக்கான ஆண்டு விடுமுறையும் 42 நாட்களில் இருந்து 36 தினங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

சவூதி அரச துறையில் பணியாற்றும் அத்தியாவசியமற்ற வெளிநாட்டினரின் ஒப்பந்தக்காலம் புதுப்பிக்கப்படாது என்று சவூதி அரசு அறிவித்துள்ளது. இதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை. 

No comments

Powered by Blogger.