Header Ads



"பான் கி மூனும், முஸ்­லிம் விவ­கா­ர­மும்"


(இன்று -02- வெளியாகியுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)

ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லாளர் பான் கி மூன் நேற்றிர­வு இலங்­கையை வந்­த­டைந்­துள்ளார்.  இன்றும் நாளையும் அவர் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து சந்­திப்­புக்­களில் கலந்­து­கொள்வார்.

நேற்­றி­ரவும் இன்றும் கொழும்பில் அரச தரப்­பி­ன­ருடன் சந்­திப்­புக்­களை நடத்தும் பான் கி மூன்  இன்று மாலை காலிக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­துடன் வெள்ளிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­துக்குச் சென்று  கூட்­ட­மைப்­பி­ன­ரையும் வடக்கு ஆளு­ந­ரையும் சந்­தித்து பேச்­சு­வா­ர்த்தை நடத்­த­வுள்ளார்.  

அர­சாங்கம் மற்றும் எதிர்த்­த­ரப்­புக்­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது நல­லி­ணக்கம்,பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள், ஜெனிவா பிரே­ரணை அமு­லாக்கம் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வெள்ளிக்­கி­ழமை யாழ்ப்­பாணம் செல்லும் பான் கி மூன் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரை சந்­தித்துப் பேச்சுவார்த்­தை நடத்­த­வுள்ளார். இந்த  சந்­திப்­பின்­போது பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.  

இதன்­போது தமிழ் பேசும் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பு அமை­ய­ வேண்­டி­யதன் அவ­சியம் என்­பன குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மப்பு பான் கி மூனுக்கு விளக்­க­ம­ளிக்கும் எனவும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு தொடர்­பா­க விரி­வாக கலந்­து­ரை­யா­டப்படவுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் ஐக்­கிய நாடு­களின் 71 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. இந்தக் கூட்டத் தொடரே பான் கி மூன் ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லா­ள­ராக கலந்­து­கொள்ளும் இறுதி பொதுச் சபை கூட்டத் தொட­ராக அமையும்.

இதன் கார­ண­மாக அவர் ஐ.நா. செய­லாளர் என்ற வகையில் இலங்­கைக்கு மேற்­கொள்ளும் இறுதி விஜயம் இது­வாகும்.

எனினும் பான் கி மூன் தனது விஜ­யத்தின் போது இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்கள் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களோ அல்­லது முஸ்லிம் பிர­தி­நி­தி­களைச் சந்­திப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களோ மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பது ஒரு குறை­பா­டாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பான் கி மூன் இலங்கை முஸ்­லிம்­களின் விவ­கா­ரத்­திலும் சிங்­கள மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரி கொழும்பில் இன்று காலை ஐ.நா. அலு­வ­லகம் முன்­பாக ஆர்ப்­பாட்டம் ஒன்றும் நடாத்­தப்­ப­ட­வுள்­ளது. 

அதே­போன்று வடக்­குக்கு விஜயம் மேற்­கொண்டு தமிழ் தலை­வர்­களைச் சந்­திக்கும் அவர், வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என சிவில் அமைப்­புகள் வேண்­டுகோள் விடுத்­துள்­ளன. கிழக்கு மாகாமாத்­திற்கும் அவர் விஜயம் செய்ய வேண்டும் என மற்­றொரு கோரிக்­கையும் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும் பான் கி மூனின் விஜ­ய­மா­னது இலங்கை வெளி­வி­வ­கார அமைச்­சி­னாலும் கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்­தி­னாலும் ஏலவே திட்­ட­மி­டப்­பட்­ட­தாகும். 

இந்த வருட ஆரம்­பத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் ஹுசைன் இலங்­கைக்கு வருகை தந்த போதும் அவர் முஸ்லிம் தரப்­பினைச் சந்­தித்­தி­ருக்­க­வில்லை என்­பது கவ­னிக்­கத்­தக்­க­தா­கும்.

எனவே வெ ளிவி­வ­கார அமைச்சோ அல்­லது இலங்கையிலுள்ள ஐ.நா. அலு­வ­ல­க­மோ முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­­னை­களை முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­த­வில்­லையா என்­பதே இங்கு எழும் கேள்வி. இந்தக் கேள்­வியை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளி­டம் எழுப்ப வேண்டி­யது அர­சியல் தலை­வர்­களின் பொறுப்­பா­கும்.

1 comment:

  1. முஸ்ஸிம் தரப்பு என்று ஒன்றும் தனியாக இலங்கையில் இல்லையே.

    ரஹிம், ரிசாத் பதியுதீன் இருவருமே அரசாங்க அமைச்சர்கள். எனவே இவர்கள் அரசாங்க தரப்பு.
    மூன் அரசாங்க தரப்பையும் சந்தித்துவிட்டாரே.

    ReplyDelete

Powered by Blogger.