September 26, 2016

முஸ்லிம்களை விக்னேஸ்வரன், இரையாக்கப் பார்க்கிறார்...!

 -ஆரூர் சலீம், ஊடகவியாலாளர், இந்திய-

இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப்போரில், தமிழர்கள் தங்கள் உடமைகள், உயிர்கள், மானம் என்று அனைத்தையும் இழந்தார்கள். பெரும் கோடீஸ்வரர்களும், அடுத்தவேளை உணவுக்கு கையேந்தி நின்றார்கள். அதுவரை தனிநாடு, அரசியல் அதிகாரம் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள், உயிர்பிழைத்து வாழ்ந்தாலே போதும் என்ற மனநிலைக்கு உள்ளானார்கள். அதன்பிறகு, ஒருவழியாக, போருக்கு முக்கிய காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு, அந்த இயக்கம் அழிக்கப்பட்ட பிறகு, தமிழர்கள் மட்மின்றி ஒட்டுமொத்த இலங்கையுமே நிம்மதி பெருமூச்சு விட்டது. இனி, இலங்கையில், பிரச்னை நீங்கி, வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்த முடியும் என்று அனைவரும் கருதினார்கள். அங்கு, முதலீடு செய்ய வெளிநாட்டு முதலாளிகள் பலரும் ஆர்வம் காட்டினார்கள். 

ஆனால், அப்போதைய அதிபர் ராஜபக்சே சீனாவுக்கு ஆதரவாக இருந்ததால், அவரை மீண்டும் பதவிக்கு வரவிடாமல் தடுக்க அமெரிக்கா திட்டம் போட்டது. அதற்கேற்ப இப்போதைய அதிபர் மைத்திரி பால சிறிசேனா என்பவர், சிறுபான்மையினருக்கு ஆதரவானவர் என்று நம்பவைக்கப்பட்டு, அமெரிக்காவின் ஆசியோடு ஆட்சியில் அமரவைக்கப்பட்டார். இப்போது, அதன்விளைவாக, இலங்கையில் மீண்டும் குழப்பம் ஆங்காங்கே தலைதூக்கி வருகிறது. அத்தகைய குழப்பத்தை விளைவிப்பதில், தமிழ் அரசியல்வாதிகள் முக்கிய பங்கை வகிக்கின்றனர். 

வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்களும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் நிறைந்து வாழ்பவர்களாகவும் உள்ளனர்.. இந்த நிலையில், இருமாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்று கோரிக்கையை தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச சமூகங்களிடம், இந்த கோரிக்கையை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான குழு, ஓயாமல் வலியுறுத்தி லாபி செய்து வருகிறது.

அப்படி, வடக்கு மற்றும் கிழக்கை இணைத்தால், வடகிழக்கு மாகாணத்தில், தமிழர்கள் பெரும்பான்மையாக மாறி, அரசியல் ரீதியாக பலம் பெறுவார்கள் ; ஆனால், தற்போது கிழக்கில் முஸ்லிம்கள் பெற்றுள்ள அரசிய பலம் குறைந்து, அவர்கள் சிறுமையடைவார்கள். கிழக்கில் முஸ்லிம்களின் பலம் குன்றி, அவர்கள் தமிழர்களின் தயவை எதிர்பார்த்தே வாழ வேண்டி வரும் என்று நன்கு தெரிந்திருந்தும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இரண்டு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதற்காக, குள்ளநரி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.  தமிழர்கள் நிலப்பசிக்கு, முஸ்லிம்களை இரையாக்கப் பார்க்கிறார்.

சமீபத்தில், ‘எழுக தமிழ்’, என்ற பேரணியை அவர் நடத்தினார். அதில், முஸ்லிம்களும், தமிழர்கள் தான் ; அவர்கள் வேறல்ல என்று கூறினார். தங்களை முஸ்லிம்களை என்று கூறிக்கொள்வது, அரசியல் ஆதாயத்துக்குதான் என்று கூறி முஸ்லிம் அடையாளத்தை கொச்சைப்படுத்தி, கோபத்தை கிளப்பியுள்ளார். 

முஸ்லிம்கள் தங்களையும் தமிழர்கள் நம்பியது ஒருகாலம். ஆனால், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், முஸ்லிம்களை தமிழர்கள் என்று பார்க்கவில்லை. போர்நிறுத்தம் ஒப்பந்தத்தில் இருந்தபோதும், முஸ்லிம்களை கொல்வதை விடவில்லை. அவர்களை சொந்த நிலங்களிலிருந்து விரட்டினார். சொத்துகளை கொள்ளையடித்தார். இனசுத்திகரிப்பு என்ற பெயரில், அவருடைய கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து, முஸ்லிம்களை வெளியேற்றினார். பள்ளிவாசலுக்கு புகுந்து நூற்றுக்கணக்கானோரை சுட்டுக்கொன்றார். இன்னும் சொல்ல முடியாத பல கொடுமைகளை செய்தார்.

அப்போது, விக்னேஸ்வரன் மவுன சாட்சியாக இருந்தாரே தவிர, முஸ்லிம்களும் தமிழர்கள்தான்; அவர்களை கொல்லக்கூடாது என்று சொல்லவில்லை ; கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது, முஸ்லிம்களும் தமிழர்தான் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.. ஆனால், விக்னேஸ்வரன் சொல்வதை முஸ்லிம்கள் நம்பமாட்டார்கள். விக்னேஸ்வரன், முஸ்லிம்களின் நிலத்தை அபகரித்து, தமிழர்களின் நிலப்பசிக்கு அதை தீனியாக்கப்பார்க்கிறார் என்று அவர்களுக்கு நன்றாகவே விளங்கும். 

தமிழின வெறியால், ஏற்கனவே இலங்கை நாட்டு சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டார்கள். அதன் கொடூர விளைவுகளை, பல வருடங்களாக அனுபவித்து விட்டார்கள். அழகு கொஞ்சும் இலங்கையை அலங்கோலமாக்கிய பெருமை தமிழின வெறியையே சாரும். எனவேதான், பிரபாகரன் அழிக்கப்பட்டதற்கு, தமிழர்களே ஆதரவு தெரிவித்தார்கள். 

ஆனால், இப்போது அதை விக்னேஸ்வரன் போன்றவர்கள் மறந்துவிட்டு, நயவஞ்சகமாக, அரசியல் அதிகாரத்தை அடைய திட்டம் போடுகின்றனர். ஆயுதப்போராட்டத்தால் அடைய முடியாத ஆதிக்கத்தை, இப்போது தந்திரத்தால் அடையப் பார்க்கின்றனர். இது தமிழர்கள்- முஸ்லிம்கள் நல்லிணக்கத்தை கெடுக்கவே செய்யும் என்று அவர்கள் கவலைப்படவில்லை.

ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சிந்தனையை குழிதோண்டி புதைக்கும் என்றும் உணரவில்லை. தொடர்ச்சியாக, விக்னேஸ்வரன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள், முஸ்லிம்கள் ஆதிக்கம் பெறுவதற்கு எதிராக சதிகளை தீட்டி வருகிறார்கள். அடித்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் சொந்த நிலங்களில் குடியேறுவதை கூட, மனசாட்சி இல்லாமல் தடுக்கப்பார்க்கிறார்கள். 

இது, தமிழர்கள், பிரச்னைக்குரியவர்கள் என்பதையே மற்ற இனத்தவர்கள் மத்தியில் தோற்றுவிக்கும். இவர்களோடு, இணைந்து வாழ்வது எந்த காலத்திலும் சாத்தியம் இல்லாதது என்ற எண்ணத்தை முஸ்லிம், சிங்களவர்கள் மத்தியில் தோற்றுவிக்கும். எனவே, இலங்கை தமிழர்கள், விக்னேஸ்வரனின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். தங்களுடைய உரிமைகளை அரசிடம் கேட்டுப்பெறலாமே தவிர, அடுத்தவர்களின் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கக்கூடாது. 

பொறாமை, தன்னையும் அழித்து பிறரையும் அழித்து விடும். இதை விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு, தமிழர்கள்தான் புரிய வைக்க வேண்டும். இல்லாவிட்டால், இலங்கையை சின்னபின்னமாக்கி, அமைதியை கெடுத்தவர்கள் என்ற பழியை, தமிழர்கள் சுமக்க நேரிடும். 

10 கருத்துரைகள்:

விக்னேஸ்வரன் போன்றவர்களின் கதைகளுக்கு விளக்கமோ பதிலோ கொடுக்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை. முஸ்லிம்களும் தனித்துவமான ஒரு இனம் தான் என்பதை ஏற்றுக்கொண்டு தனது கருத்துக்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பும் கேட்கும் வரை, அவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளையும் முஸ்லிம்களும் அதன் பிரதிநிதிகளும் முற்று முழுதாக பகிஷ்கரிக்க வேண்டும். முஸ்லிம்களும் ( இலங்கை சோனகர் ) ஒரு தனித்துவமான இனம் என்பது மிகவும் தெளிவாக தெரிந்திருந்தும், சிறுபிள்ளை தனமான வாதங்களையும் விளக்கங்களையும் முன்வைக்கிறார். காகம் கரையும், சினி கரையும் ஆகவே காகமும் சீனியும் ஒன்று என தர்க்கம் புரிகிறார். இவர் இனிமேலும் இப்படி தான்தோன்றி தனமான தர்க்கம் புரிவாரானால் இவர் வழங்கிய தீர்ப்புகளையும் மீள் பரிசோதனை செய்யப்படல் வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிழக்குமாகாண இயறகை வளங்கள், பொருளாதாரம், கடல் வளம், செல்வ செழிப்புக்களை, வடமாகாணத்தவருக்கு தாரை வார்ப்பதட்கு கிழக்கு மாகாண அனைத்து இன மக்களும் தங்களது எதிர்கால சந்ததிக்காக வடக்கும் கிழக்கும் இணைவதட்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

முஸ்லிம்களின் இன அடையாளத்தையே இல்லாமல் செய்ய முட்படும் இந்த விக்கியின் கூற்றுக்கு எதிர்ப்பையோ, கண்டணத்தையோ, ஏமாற்றத்தையோ, கவலையையோ தெரிவிக்க வக்கில்லாத சகோதரர் ஹக்கீம் அவர்களுக்கு இந்த விடயம் தெரியுமோ தெரியாது. இவரது அடிவருடிகளும் உச்ச பீட உறுப்பினர்களும் ஏன் மெளனம் காக்குகிறார்களோ தெரியாது.


முன்பு எல்லாம் கிழக்கு மூவின மக்கள் வாழும் பகுதி அதனை வடக்குடன் இணையவிடமாட்டோம் என்பர்.இப்போது கிழக்கு முஸ்லீம் மகாணம் என்றே சொல்ல தொடங்கிவிட்டனர்.
39% சனத்தொகை மட்டடும் வைத்துகொண்டு கிழக்கு முஸ்லீம்மாகாணமென்றுகூற தலைப்பட்டுவிட்டனர்.

கிழக்கு மாகாணம் 9996 ச.கி பரப்பு கொண்டது.இதில் முஸ்லீம் நிலப்பரப்பு வெறும் 875 ச.கி மீட்டர் அளவெ அண்ணளவாக 9% சிங்களமக்கள் 4091 ச.கி பரப்பையும் ( 40%) சனத்தோகை 21% முமம் உள்ளனர் தமிழர் நிலப்பரப்பு 5030 (51%) சகி மீட்டர் சனத்தொகை 40% எனவே முஸ்லீம்களின் வளம் எதையும் தமிழர் அபகரிக்க வில்லை.
மாறாக 9%நநிலப்பரப்பில் வாழும் இனம் தனது சனத்தொகை யை காரம் காட்டடி 91% நிலப்பரப்பை உரிமை கொரமுடியுமா.?
எனது விட்டில் அதிக அங்கத்தவர்கள் உள்ளதால் இடப்பற்றாகுறை என்று கூறி அயல் வீட்டை உரிமை கோரலாமா?
யாருக்கு நில்ப்பசி.?

விடுதலை என்ற போர்வையிலே, பிரபாகரன் நடத்தியது பாதாள, பயங்கரவாத, மாபியா இயக்கமே தவிர, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் எடுக்கவில்லை. தமிழ் மக்களுக்காக போராடி இருந்தால், தமிழ் பெரும் தலைவர்களை கொண்டிருக்க மாட்டார்கள், சாதாரண தமிழ் மக்களின் வாழ்க்கையை சீரழித்திருக்க மாட்டார்கள். ராஜிவ் காந்தியின் கொலை கூட, மேற்கத்திய நாடுகளின் ஒப்பந்தக் கொலையாக இருக்குமென சந்தேகிக்கிறேன். மஹிந்தவிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டே, தமிழர்களின் வாக்குரிமையை கொள்ளையடித்து, மஹிந்தவை ஜனாதிபதி ஆக்கினார்கள். இந்த மீன்பிடி கரையானுக்குப் பயந்து, வெள்ளாளர்களும், மற்றும் உயர்குல தமிழர்களும் அடங்கி ஒடுங்கி இருந்தார்கள், உயிரை காப்பாற்றிக்கொள்வதட்காக.

மஹிந்தவின் அரசியல் இனத்துவேசத்தை அடிப்படையாகக்கொண்டது. எமில்காந்தன், கே பி, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் இன்றும் மஹிந்தவின் நண்பர்கள். இவர்களை வைத்து மலேசியாவில் தனக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்து, தேட்க்கிலே தன்னை ஒரு வீரனாக பிரபல்யப் படுத்திக்கொண்டார். அதே போல், வடக்கிலே சி வி இன் இனத்துவேசத்தால், தேட்க்கிலே கூட்டு எதிர் கட்சிக்கு தான் அரசியல் லாபங்கள் அதிகம். அதனால், சி வி உம், மஹிந்தவின் பணத்துக்காக வேலை செய்யும் கூலியா என்று எண்ணத்தோன்றுகிறது.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது முஸ்லீம்களின் அடிமை சாசனத்தை எழுதிக் கொடுப்பதட்கு சமன். இதை முஸ்லீம் அரசியல் தலைவர்கள் செய்தால், அவர்களை மட்டும் அல்ல, அவர்களது குடும்பங்களையும், கிழக்கு முஸ்லிம்கள் பூண்டோடு அழித்தால், ஆச்சரியப்படுவதட்கு ஒன்றும் இல்லை.

100 percent correct.Wicki is a venemous person to Muslims.

முஸ்ஸிம்கள் வதந்திகள் பரப்புவதை நிறுத்தவேண்டும் என போலீஸ் உயர் அதிகாரியால் அறிவுரைத்தப்பட்ட செய்தியை பிரசுரித்த JM, பொய் வதந்திகள் பரப்பும் இக்கட்டுரையும் பிரசுரித்தள்ளது. 🤔

வடக்கு முதலமைச்சர் வரலாறு பேசுவதற்கு தகுதியானவரா? என்பது எனது கேள்வியாகும், ஏனென்றால் விக்னேஸ்வரனும் அவரைப்போன்று வரலாறுகளை நுனிப்புல் மேய்ந்த ஒருசில தமிழ் தலைமைகளும் முஸ்லிம்கள் தமிழ் பேசுகின்றார்கள், இஸ்லாமிய மதம் கி பி 8ம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கிறது, ஆகவே வர்த்தக நோக்கில் வந்த அரபியர்கள் தமிழ் பெண்களை திருமணம் முடித்ததன் விளைவாக முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றும் அதன்விளைவாக தமிழ் பேசுகின்றார்கள் என்றும் எண்ணுகின்றனர், இதுதான் இவர்களது அறியாமையாகும்.

40% sanaththohai konda tamilarhal kilakkil perumpanmai petru aatchi seyya muyatchi seyyungal athai vittuvittu vadakkudan inaikkamutpadatheerhal. Wada mahana muslimkaluku seyyappatta aniyayam kilakku muslimkalukku wendam

Unmaihal unkalukku kasakkum endral poi aaahividathu. Vadakku muslumkalai ina suththiharippu seythuvittu ippothu kabala naadaham aaaduhireerhal. Ina suththiharippu seyyamal paathuhappathatkaahathan muslimkalai veliyetri iruntheerhal endral enkalidamirunthu thirudiya soththukkal enke??? Muslimkalin soththukkalil wayiru walarththa ltte inarku aaatharawaha pesatheerhal.

Please to all why you take worries don't worry,N & East will not be joined as a solution ,SL govt never solves the issue, it will continue . The same situation remains forever. Tamils needs n struggle for their independent n Tamils or muslin can't get together because of different religions,though speck one language.two have to go in their way,

Please to all why you take worries don't worry,N & East will not be joined as a solution ,SL govt never solves the issue, it will continue . The same situation remains forever. Tamils needs n struggle for their independent n Tamils or muslin can't get together because of different religions,though speck one language.two have to go in their way,

Post a Comment