Header Ads



வடக்கில் சிங்­கள மாண­வர்கள், அடித்து விரட்­டப்­ப­டு­கின்­றனர் - மஹிந்த

சுதந்­தி­ரக்­கட்­சி­யையும் ஐ.தே.கட்­சி­யையும் கலைத்­து­விட்டு ஸ்ரீலங்கா ஐக்­கிய தேசிய சுதந்­திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்­சியை ஆரம்­பிக்க வேண்­டு­மென ஆலோ­சனை வழங்­கி­யுள்ள முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக் ஷ நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்கும் போர்வையில் நாட்டைப் பிரிக்கும் யோச­னை­களை நிறை­வேற்ற முயற்­சிப்­பதை எதிர்க்­கின்றோம் என்றும் தெரி­வித்தார்.

பொது எதிர்க்­கட்­சியின் கூட்­டத்தில் கலந்துகொண்டு உறை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இவ்­வாறு தெரி­வித்தார். இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஐ.தே.கட்­சியின் கொள்­கை­களை எதிர்த்து எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க அக்­கட்­சியை விட்டு வெளி­யேறி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை உரு­வாக்­கினார்.

இன்று சுதந்­தி­ரக்­கட்­சியை உரு­வாக்­கிய ஸ்தாபகத் தலை­வரின் மகள் ஐ.தே.கட்­சியின் 70ஆவது சம்­மே­ள­னத்தில் கலந்து கொண்­டுள்­ளார்­. பண்­டா­ர­நா­யக்க, ஸ்ரீமாவோ ஆகியோர் சுதந்­தி­ரக்­கட்­சியின் கொள்­கை­களைப் பாது­காத்­தனர். அதன் பின்னர் நாம் கட்­சியைப் பாது­காத்து பலப்­ப­டுத்­தினோம்.

ஆனால் இன்று சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் ஐ.தே.கட்­சி­யுடன் இணைந்து கட்­சியின் கொள்­கை­களைக் காட்டி கொடுத்­துள்­ளனர். ஐ.தே.கட்­சி­யிடம் சுதந்­திரக் கட்சி இன்று மண்­டி­யிட்­டுள்­ளது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 65 ஆவது சம்­மே­ளனம் ஐ.தே.கட்­சிக்­கா­ரர்­க­ளுடன் இணைந்து கொண்­டா­டப்­பட்­டது. அதே­போன்று ஐ.தே. கட்­சியின் 70 ஆவது சம்­மே­ளனம் சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருடன் இணைந்து கொண்­டா­டப்­பட்­டுள்­ளது.

எனவே இவ்­வி­ரண்டு கட்­சி­க­ளையும் கலைத்­து­விட்டு புதிய கட்­சியை இவர்கள் உரு­வாக்க வேண்டும். அதற்கு ஸ்ரீலங்கா ஐக்­கிய தேசிய சுதந்­திரக் கட்­சி­யென பெய­ரி­டலாம்.

விடு­த­லைப்­பு­லி­களை நாம் ஒழித்தோம். ஆனால் தேசிய பாது­காப்பில் கவனம் செலுத்­தினோம். படை முகாம்­களை அகற்­ற­வில்லை. படை­யி­னரைக் குறைக்­க­வில்லை. ஏனென்றால் புலிகள் மீண்டும் எப்­போ­தா­வது தலை­யெ­டுப்­பார்கள் என்றே பாது­காப்பை பலப்­ப­டுத்­தினோம்.

ஆனால் இன்­றைய அர­சாங்கம் தேசிய பாது­காப்பு தொடர்பில் அக்­கறை செலுத்­த­வில்லை. இன்று புலிகள் மீண்டும் தலை­தூக்­கு­வதை மலே­ஷி­யாவில் கண்­டு­கொண்டோம்.

வடக்கில் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லி­ருந்து சிங்­கள மாண­வர்கள் அடித்து விரட்­டப்­ப­டு­கின்­றனர். மலேஷி­யாவில் இலங்கைத் தூதுவர் தாக்­கப்­ப­டு­கின்றார். எனவே அரசு பாது­காப்பில் அக்­கறை செலுத்த வேண்டும். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை ஒழிப்­பதில் எது­வி­த­மான பிரச்­சி­னையும் எமக்­கில்லை.

ஆனால் இதன் போர்­வையில் நாட்டைப் பிரிக்கும் யோச­னைகள், திருத்­தங்­களை முன்­வைப்­பதை கடு­மை­யாக எதிர்க்­கின்றோம்.

நான் 9000 மில்­லியன் ரூபா கடன் வாங்­கி­ய­தாக அரசு எந்த நாளும் குற்றம் சாட்­டு­கி­றது. ஆனால் இன்­றைய அரசு இப்­போதே 9000 மில்­லி­யன் ரூபாவுக்கும் அதி­க­மாக கடனைப் பெற்­றுள்­ளது என்றும் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.