Header Ads



இலங்கைக்கு, பங்களாதேஷ் பதிலடி

பங்களாதேஷ் பிரஜைகளுக்கான ஒன் எரைவல் வீசா முறையை இலங்கை அரசாங்கம், அந்த நாட்டுக்கு அறிவிக்காமலேயே நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து பங்களாதேஷூம் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வந்த ஒன் எரைவல் வீசா முறையை நிறுத்தியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. 

மேலும், இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகரவை அழைத்து இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. 

சுமார் ஒரு மணித்தியாலம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அதிருப்தியை வௌியிட்டுள்ள பங்களாதேஷ் வௌிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் கம்ரூல் அஷன், என்ன காரணத்திற்காக ஒன் அரைவல் வீசா நிறுத்தப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தான் இதுபற்றி அறிந்திருக்கவில்லை எனவும், தனது நாட்டு வௌிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு விடயத்தை அறிந்து வந்து மீண்டும் சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் செய்தியாளர் ஒருவருக்கு கருத்து வௌியிட்டுள்ள யசோஜா, பங்களாதேஷ் பிரஜைகளை இலங்கை எப்போதும் மதிப்பதாகவும், அவர்கள் இலங்கைக்கு வருவதை இந்த நாடு வரவேற்பதாகவும் கூறியுள்ளார். 

1 comment:

  1. விஷா இல்லாமல் நேரடி வரவை சகல நாட்டுக்கும் இரத்துச் செய்ய வேண்டும் .இவ்வாறான விடயம் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் நாடுகடந்த பயங்கரவாதத்தில் இருந்து வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் இரசியமாக புகுவதால் உள்நாட்டில் பயங்கரவாதத்தோடு தொடர்பு ஏற்படுத்தவும் மூளைச்சலவை செய்யவும் வாய்ப்பு உள்ளது அனைத்து வழிகளிலும் தேசிய பாதுகாப்பு கருதி அரசாங்கம் இந்த முறையை கையாள வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.