Header Ads



நாமல் ராஜபக்ஸவிற்கு கல்தா..?


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது குறித்து யோசனை முன்வைக்கப்பட உள்ளது. கட்சி உறுப்புரிமையை ரத்து செய்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

கட்சி மற்றும் கட்சியின் தலைமைத்துவத்தை தொடர்ச்சியாக நாமல் ராஜபக்ஸ விமர்சனம் செய்து வருவதாகவும், அவர்மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும்  இந்த குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நாமல் ராஜபக்ஸ கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் செயற்பட்டு வந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.