Header Ads



ராஜபக்ஷ ரெஜிமென்டுகுள், அதிகார மோதல் தீவிரம் - கொழும்பு ஊடகம் தகவல்

அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ள ராஜபக்ஷ ரெஜிமென்டுகுள் அதிகார மோதல் தீவிரம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புதியதாக ஆரம்பிக்கப்படும் அரசியல் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தொடர்வில் ராஜபக்சர்களுக்கு இடையில் முரன்பாடு ஒன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்சவை பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் இணக்கமும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை முதன்மை வேட்பாளராக களமிறங்குவதற்கு புதிய கட்சியின் சார்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மஹிந்தவுக்கு அறிவிக்கப்பட்ட போது, அவர் தனது எதிர்ப்பை கடுமையாக வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மக்கள் மத்தியில் என்றும் நானே செல்வாக்கு பெற்றவன், அந்த இடத்திற்கு வர யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை.

மக்கள் கூட்டம் எனக்காக உள்ளதே தவிர வேறு யாருக்காகவும் இல்லை என்பதனை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த தேர்தலின் போது குடும்ப ஆட்சி என்ற குற்றச்சாட்டையே மக்கள் எம்மீது வைத்தனர். மைத்திரிக்கு அழுத்தம் கொடுத்து நாட்டில் நாடாளுமன்ற ஆட்சி முறையை அமுலுக்கு கொண்டு வரவேண்டும். இதன்போது தான் தான் பிரதமர் பதவிக்காக போட்டியிட முடியும் என மஹிந்த தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் காட்டமான கருத்தின் மூலம் கோத்தபாவின் அரசியல் பிரவசம் அவருக்கு உடன்பாடில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்தத் தகவல் நேரடியாக கோத்தபாயவுக்கு தெரிவிக்கப்படாமையால், மோதல் நிலை ஏற்படவில்லை. எதிர்வரும் காலங்களில் குடும்பத்திற்குள் அரசியல் மோதல் தீவிரமடையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.