Header Ads



செல்பி அடிக்கும் இயந்திரமே, நரேந்திர மோடி - போட்டுத்தாக்கும் ராகுல் காந்தி


செல்ஃபி எடுத்துக் கொள்ளும், வாக்குறுதி அளிக்கும் இயந்திரம் தான் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

விவசாயிகள் பாதுகாப்பு யாத்திரையை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடத்தி வரும் ராகுல் காந்தி, அங்கு திரளாக கூடி இருந்த பொதுமக்களிடம் உரையாற்றும்போது, ''நமது நாட்டில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வேலையை பிரதமர் மோடி செய்து வருகிறார்.

தேர்தலின்போது மோடி, நல்ல நாட்கள் வரும் என்று வாக்குறுதி அளித்தார். இதேபோல், கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை அளிக்கப்படும், 2 கோடிக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று பல வாக்குறுதிகளையும் மக்களிடம் அள்ளி வீசினார் மோடி.

ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின், தொழிலதிபர்களாக உள்ள அவரது ஒருசில நண்பர்களுக்கு மட்டும்தான் நல்ல காலம் பிறந்துள்ளது. தற்போது அவர், சுயபடம் எடுக்கும் இயந்திரமாகவும், வாக்குறுதிகளை அள்ளி வீசும் இயந்திரமாகவும் தான் வலம் வருகிறார்.

இந்த நாடு அனைத்து மதத்தினருக்கும், அனைத்து ஜாதியினருக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் பொதுவானது. இதனை நிலை நிறுத்த காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் தொடர்ந்து பாடுபடுவோம் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, எங்கும் வன்முறை நிகழ்ந்தது இல்லை. ஆனால் மோடி ஆட்சியில் மத மோதல்கள் அதிகரித்துள்ளன" என்றார்.

1 comment:

Powered by Blogger.