Header Ads



றிசாத் பதியுதீனிடமிருந்து, புத்தளம் மக்கள் எதிர்பார்ப்பது..!

கொழும்பு குப்பைகளை புத்தளம் பிரதேசத்துக்கு கொண்டு வருவதை புத்தளத்தின் சகல  இன மக்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். குறிப்பாக இளைஞர் சமுதாயம் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர். கொழும்பு மாநகர சபை தீர்த்து வைத்திருக்க வேண்டிய இந்தக் குப்பைப் பிரச்சினையை புத்தளம் மக்களின் தலைகள் மீது கொட்ட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. 

பல்வேறு சுகாதார, சுற்றாடல் பிரச்சினைகளை உண்டு பண்ணக் கூடிய இத்திட்டத்தை புத்தளத்துக்கு கொண்டு வருவதை தடுப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் உடனடியாக தலையிட வேண்டும் என புத்தளம் மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். 

தமது கட்சிக்கு அரசில் உள்ள அந்தஸ்தைப் பிரயோகித்து இதை புத்தளத்துக்கு கொண்டு வர விடாமல் இருப்பதற்கு உடனடியாக அவர் களமிறங்குவதை காண்பதற்கு புத்தளம் மக்கள் ஆவலுடன் உள்ளனர். எனவே இந்தப் பிரச்சினையின் ஆழ அகலங்களை நன்கு விளங்கியும், அவர்களின் உணர்வுகளை புரிந்தும் வைத்துள்ள அமைச்சர். கொழும்பு குப்பைகளை புத்தளத்துக்கு கொண்டு வருவதில்லை என்று அரசிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பை பெற்றுத் தருவதற்கு முன்வர வேண்டும்.

முஹம்மத் முஹ்ஸி
புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர், சமூக ஆர்வலர்.

No comments

Powered by Blogger.