Header Ads



வடக்கில் எழும், தமிழ் இனவாதம் - சிங்கள அரசியல்வாதிகளின் பிரதிபலிப்புகள்..!!

வடக்கிலும் தெற்கிலும் எவ்வாறான இனவாதம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் தேசிய நல்லிணக்கத்தை அடையும் பயணத்தை அரசாங்கம் கைவிடாது.  ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடைந்தே தீரும் என்று அமைச்சர்  மஹிந்த சமரசிங்க  தெரிவித்தார். 

வடக்கில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் ஆர்ப்பாட்ட பேரணியானது அரசாங்கத்தின்  முயற்சிகளுக்கு  தடையாகவே உள்ளது.  ஆனால் எவ்வாறான  தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் எமது முயற்சியில் நாங்கள் ஒருபோதும் பின்னிற்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.   வடக்கில் எழுக தமிழ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில்  விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

2

வடக்கிலும் தெற்கிலும் இனவாத தூண்டுதலை முழுமையாக தோல்வி அடைய செய்யவேண்டும். வார்த்தை பிரயோகம் செய்து மக்கள் மத்தியில் பயம் சந்தேகங்களை உருவாக்குவதற்கு முயற்சிக்க கூடாது. புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இனத்தவர்களுக்கும் சமமான அதிகாரங்களை வழங்குவோம். ஆகையால் புதிய அரசியலமைப்பிற்கு வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஷ்வரன் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு நல்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரும் அரச நிறுவனங்கள் பிரதி அமைச்சருமான எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

தெற்கு மக்களுக்கு சமஷ்டி என்பது அச்சத்தை ஏற்படுத்த கூடியதாக உள்ளது. அதேபோன்று ஒற்றையாட்சி என்பது வடக்கு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடியதாக உள்ளது. எனினும் புதிய அரசியலமைப்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான சமாந்தர தீர்வினை வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.