September 07, 2016

சவூதி அரேபியா, ஈரானுக்கு பதிலடி

புனித ஹஜ் கட­மையை நடாத்தும் பொறுப்­பி­லி­ருந்தும் மக்கா,­ம­தீனா ஆகிய புனித தலங்­களை நிர்­வ­கிக்கும் பொறு­ப்­பி­லி­ருந்தும் சவூதி அரே­பிய அர­சாங்கம் விலக வேண்டும் என ஈரானின் ஆன்­மிகத் தலைவர் ஆய­துல்லா அலி கொமைனி வேண்­டுகோள் விடுத்­துள்ள நிலை­யில், புனி­த­மிக்க ஹஜ் யாத்­தி­ரையை ஈரான் அர­சி­யல்­ம­யப்­ப­டுத்த முனை­வ­தாக சவூதி அரே­பிய முடி­க்­கு­ரிய இள­வ­ர­சர் முஹம்மத் பின் நாயிப் குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து இந்தவருட ஹஜ் யாத்­திரை தொடர்பில் இவ்­விரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் ஏலவே ஏற்­பட்­டுள்ள முறுகல் மேலும் வலுப்­பெற்­றுள்­ள­து.

இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை தொடர்பில் ஈரானின் ஆன்­மீ­கத் தலைவர் ஆய­துல்லா அலி கொமைனி நேற்று முன்­­தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்­டி­ருந்தார்.

அதில் அவர் சவூதி அரே­பியா மீது கடு­மை­யான விமர்­ச­­னங்­க­ளையும் குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முன்­வைத்­துள்­ளார்.

''சவூதி அர­சாங்கம் கடந்த வருடம் மினாவில் யாத்­தி­ரி­கர்­களை கொலை செய்­­தது.  'இத­ய­மற்­ற கொலை­கார சவூ­தி­யர்கள்' காய­­ம­டைந்த ஆயிரக் கணக்­கான யாத்­தி­ரி­கர்­களுக்கு மருத்­துவ சிகிச்­சை­களை வழங்­கு­வ­தற்குப் பதி­லாக உயி­ரி­ழந்­த­வர்­­க­ளுடன் சேர்த்து கொள்­க­லன்­களில் அடைத்­தனர் என ஆயத்­துல்லா கொமைனி தனது அறிக்­கையில் பாரிய குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்ளார்.  

அத்­துடன் சவூதி அரே­பி­யா­வை 'குட்டிச் சாத்­தான்' என வர்­­­ணித்­துள்ள அவர், சவூதி அரே­பியா ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களை கவ­னிப்­ப­தற்கும் அவர்­களை பாது­காப்­ப­தற்­கும் பதி­லாக 'பெரிய சாத்­தா­னா­கிய' அமெ­ரிக்­காவின் நலன்கள் தொடர்­பி­­லேயே அக்­க­றை­யாக இருப்­ப­தா­கவும்  தனது அறிக்­கையில் சாடியுள்ளார்.

எனினும் ஈரான் ஆன்­மீகத் தலைவர் ஆய­துல்லா அலி கொமை­னி­யின் மேற்­படி குற்­றச்­சாட்­டுக்­களை மறுத்­துள்ள சவூதி அரே­பிய உள்துறை அமைச்சர் முடி­க்­கு­ரிய இள­வ­ரசர் முஹம்மத் பின் நாயிப், புனி­த ஹஜ் யாத்­தி­ரையை அர­சி­யல்­ம­யப்­ப­டுத்த முனைய வேண்டாம் என வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­­ளார்.

அத்­து­டன் ஈரானின் இந்த கோப­மூட்டும் செயற்­பாடு யாத்­தி­ரி­கர்­களின் பாது­காப்­பை கேள்­விக்­குள்­ளாக்கும் என்றும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

ஈரா­னிய அதி­கா­ரிகள் தாமாக உரு­வாக்கிக் கொண்ட கார­ணங்­க­ளினால் ஈரா­னிய யாத்­தி­­ரி­கர்கள் ஹஜ் கட­மைக்­காக சவூதிக்கு வரு­வதை தடுத்­து­விட்­ட­தா­க­வும் இள­வ­ரசர் முஹம்மத் பின் நாயிப் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார். 

ஹஜ் கட­மையை அர­சி­ய­லாக்­கு­வ­தா­னது இஸ்­லாத்தின் போத­னைக்கு எதி­ரா­னது என்றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

கொமை­னியின் குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­துள்ள இள­வ­ர­சர், சவூதி அரே­பியா ஒரு­போதும் ஈரா­னிய யாத்­தி­ரி­கர்­களை ஏனைய நாடு­க­ளின் யாத்­திரிகர்­க­ளி­லி­ருந்து வேறு­ப­டுத்தி நோக்­கு­வ­தில்லை என­வும் ஆனால் ஈரா­னி­யர்­க­ளே ஹஜ்ஜின் சட்­ட­திட்­டங்­களை மதி­க்­காது நடந்து கொண்டதாவும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஹஜ்ஜின் போதுஆர்ப்­பாட்டங்கள் நடத்­து­வதும் கோஷங்­களை எழுப்­பு­வதும் இஸ்­லாத்தின் போத­னை­களை மீறும் செயற்­பா­டாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார். ஹஜ்­ கட­மைக்­காக வரும் யாத்­தி­ரி­கர்­களின் பாது­காப்பை சகல விதத்­திலும் உறு­திப்­ப­டுத்­து­வ­தா­ன­து தமது புனித கடமை என்றும் இள­வ­ரசர் நாயிப் குறிப்­பிட்­டுள்­ளார். 

கடந்­த வருட ஹஜ் யாத்­தி­ரையின் போது மினாவில் ஏற்­பட்ட சன நெரிசல் கார­ண­மாக 2426 பேர் உயி­ரி­ழந்­ததாக உத்­தி­யோ­கப்­பற்­றற்ற அறிக்­கைகள் கூறும் நிலையில் 769 பேர் மாத்­தி­ரமே உயி­ரி­ழந்­த­தாக சவூதி கூறி வரு­கி­றது. 

இந்­நி­லையில் இஸ்­லாமிய நாடு­களால் நிய­மிக்­கப்­படும் சுயா­தீன குழு ஒன்று இவ் அனர்த்தம் தொடர்பில் விசா­ர­ணை­களை நட­த்­த அனு­ம­திக்க வேண்டும் என ஈரான், சவூ­தி­யிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தது.

இதனை சவூதி அரே­பியா நிரா­க­ரித்­த­தைத் தொடர்ந்து இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான இரா­ஜ­த­ந்­திர முறு­கல் மேலும் வலுப் பெற்­றது. இத­னை­ய­டுத்து இவ்­வ­ருடம் ஈரா­­னுக்குள் வசிக்­கும் ஈரா­னி­யர்கள் ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்க­மாட்­டார்கள் என ஈரான் கடந்த மார்ச் மாதம் அறி­வித்­தது. 

இதற்­க­மைய இவ்வருடம் ஈரா­னி­லி­ருந்து எந்­த­வொரு யாத்­தி­ரி­கரும் ஹஜ் யாத்­தி­ரைக்­காக சவூ­திக்கு வர­வில்லை. எனினும் ஈரா­னுக்­கு வெளியே ஐரோப்பா மற்றும் ஆபி­ரிக்க நாடு­களில் வசிக்கும் ஈரா­னியர் தாம் வாழும் நாடுகள் மூல­மாக இம் முறை ஹஜ் யாத்­தி­ரைக்கு சமு­க­ம­ளித்­துள்­ள­தா­க சவூதி ஹஜ் விவ­கார அமைச்சர் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­­டத்­தக்­க­­து.

0 கருத்துரைகள்:

Post a Comment