Header Ads



பாடசாலைகளுக்கு வரும் தாய்மாருக்கு, சேலை கட்டாயமில்லை - கல்வியமைச்சர்

 பல கடமைகள் நிமித்தம் பாடசாலைகளுக்கு வரும் தாய்மார் கட்டாயமாக சேலை அணிந்தே வர வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.

குறித்த நடைமுறையை நீக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், துறைசார் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச பாடசாலைகளில் சில தேவைகளுக்காக பாடசாலைக்குள் செல்லும் தாய்மார் சேலை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் கவ்வி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். இந்த நடைமுறையை நீக்க கோரி பாடசாலை அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை தெளிவுப்படுத்தி சுற்றுநிருபம் அனுப்புமாறு தனது அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் தாய்மார் பல்வேறு துறைகளில் தொழில் புரிவதாகவும் குறித்த தொழில்களுக்கு ஏற்றவாறே அவர்களது உடைகளும் காணப்படுவதாகவும், தொழில் செய்யும் இடங்களில் இருந்தவாறே அவசர வேலை நிமித்தம் பாடசாலைக்கு வரும் தாய்மார் சேலை அணியாத பட்சத்தில் பாடசாலைக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படுதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

எனவே குறித்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சர் தாய்மார் சேலை அணிவது கட்டாயம் என்ற நடைமுறையை மாற்றுவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

No comments

Powered by Blogger.