Header Ads



பெண் பிசாசிடமிருந்து சிறுமியை, காப்பாற்றுவதில் பேஸ்புக் + நீதிபதி இளஞ்செழியனின் பங்களிப்பு

நீர்வேலியில் சித்தியினால் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற 6 வயது சிறுமியை தொடர்ச்சியான சித்திரவதையில் இருந்து பாதுகாப்பதற்கு, சமூகவலைத்தளத் தகவலும், அதனைத் தொடர்ந்து யாழ் மேல் நீதிமன்றத்தின் துரிதநடவடிக்கையும் உதவியிருக்கின்றன.

வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும் 


இந்தச் சிறுமி தாக்கப்படுகின்ற காட்சிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில்தீயாகப் பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்தக் காணொளி வெளியாகிய சில நிமிடங்களில் அது பற்றிய தகவலும் அந்தக்காணொளியும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட நீதிபதி இளஞ்செழியன், அந்தச்சிறுமியைக் கண்டுபிடித்து அவரைப் பாதுகாப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறுபொலிசார் உட்பட உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

மனிதாபிமானமற்ற ஒரு பெண்ணின் செயற்பாட்டினால், சித்திரவதைக்கு உள்ளாகியசிறுமியின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது.

அத்துடன்இந்தச் செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுமேயானால், அது அந்தச் சிறுமி மேலும்மோசமாகப் பாதிக்கப்படலாம் என்பதை நீதிபதி இளஞ்செழியன் சம்பந்தப்பட்டஅதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

எனவே, பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சிறுமி இருக்குமிடம் உடனடியாகக்கண்டுபிடிக்கப்பட்டு, அவரைப் பாதுகாக்க வேண்டும்.

அதேவேளை. அவரை அந்தநிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நீதிபதிஅறிவுறுத்தியிருந்தார்.


பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சிறுமி இருக்கும் இடம் நீர்வேலி பிரதேசம் என்றதகவலைத் தவிர ஏனைய துல்லியமான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நீர்வேலிகிராம சேவகர் பிரதேசம் முழுவதிலும் உடனடியாக, தீவிர தேடுதல் நடத்தி காணொளியில்காணப்பட்ட சிறுமி உட்பட சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்களைக் கொண்டுஅவர்களுடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்கு வழிகாட்டல் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, பொலிசாரும், சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் நலன்களுக்குப்பொறுப்பான துறை சார்ந்த அதிகாரிகள் மிகத் துரிதமாகச் செயற்பட்டு,பாதிக்கப்பட்ட சிறுமியைக் கண்டுபிடித்து, அவரைப் பாதுகாத்ததுடன் அவர் மீதுகொடுமை புரிந்த பெண்ணும் அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

சமூக வலைத்தளங்களின் பொறுப்பான செயற்பாடும், நீதிமன்றத்தின் துரிதச்செயற்பாடும் ஒரு சிறுமியைக் கொடுமையிலிருந்து பாதுகாக்கவும், சிறுவர்களுக்குஎதிரான சித்திரவதை என்னும் சமூகக் குற்றம் ஒன்றைத் தடுப்பதற்கும் உதவியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இந்த கானொளிக்கு YouTube இல் ஏராளமானோர் பின்னூட்டல் எழுதியுள்ளனர் . அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்கள். 90% இற்கும் அதிகமானவர்கள் இந்த பெண்ணை கொலை செய்யவேண்டும் , தீயிட்டு கொழுத்தவேண்டும், இரண்டாக பிளக்கவேண்டும் என்றெல்லாம் எழுதி இருக்கிறார்கள் . இவை அனைத்தும் அவர்களின் அடி உள்ளங்களில் இருந்து வெளிப்பட்டவை. இவை மனிதாபிமானத்தை நேசிப்பவர்களின் உளக்குமுரல்கள். அதுவும் இவர்கள் கூறுவது ஒரு கொலைக்கான தண்டனை அல்ல. ஒரு சித்திரவதைக்கு. ஆனால் இஸ்லாம் ஒரு கொலைக்கான தண்டனை அவரை கொலைசெய்வதுதான் எனக்கூறும் போது அதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை . மாறாக இஸ்லாத்தை குறை கூறவே முற்படுகின்றனர் .

    ReplyDelete
  2. Whatabout other thousand victims suffering in silence at the hands of monsters off the radar behind tightly locked barbed wires n iron gates ?

    Vigilente would do a lot to nab perpetrators .

    ReplyDelete

Powered by Blogger.