Header Ads



இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை, முந்திச்சென்ற கல்வித்துறை

இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை விட கல்வித்துறை முன்னிலை வகிப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பொலிஸ்துறை மீதே இலஞ்சம் தொடர்பில் அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதும் அது தற்போது குறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு அதிகம் இடம்பெறும் நிறுவனங்களில்இதனை ஒழிப்பதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலும் இவ்வாறு இலஞ்சம் பெறுவதில் கல்வித்துறை முன்னிலை வகிப்பதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் விசேடமாக இலங்கை சுங்கப்பிரிவு, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை தெளிவுபடுத்தும் நடவடிக்கையை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்வித்துறையில் ஊழலை ஒழிக்கும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் இதனை விரிவுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலை மட்டங்களில் இருந்தே இலஞ்சம் மற்றும் ஊழலை முற்றாக ஒழிப்பதன் பொருட்டு இது தொடர்பான பாடவிதானங்களை இணைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.