Header Ads



தொலைபேசி, இணையம் மீதான வரி அதிகரிப்பினால் நாட்டுமக்கள் பாதிப்பு

தொலைபேசி மற்றும் இணையப் பாவனைகள் மீதான வரி அதிகரிக்கப்பட்டதனால் இளைஞர் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சோசலிச இளைஞர் ஒன்றியம் கூறியுள்ளது. 

அந்த சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

தொலைபேசி மற்றும் இணையப் பயன்பாடானது நாட்டு மக்களின் அத்தியவசிய தேவையாக மாறியுள்ளது என்று அந்த சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் தொலைபேசி மற்றும் இணையத்தின் மீதான கட்டணத்துக்கு, நூற்றுக்கு 50 வீத அளவான வரி அதிகரிப்பினால் நாட்டின் இளம் சமூகத்தினர் உட்பட பொதுமக்களும் பெரும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அசாதாரண வரி அதிகரிப்பை உடனடியாக நீக்க வேண்டும் என்று சோசலிச இளைஞர் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.