Header Ads



முற்றிக்கொண்டு போகும் இனவாதத்தை, கொஞ்சம் குறைக்க..!

-M.JAWFER.JP-

இன்று இலங்கையில் நாடளாவிய ரீதியில் இனவாதம் தூண்டப்பட்டு எந்தப்பக்கத்திலிருந்தாவது இனக்கலவரத்தை ஏற்ப்படுத்த இனவாதிகள் முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனை நாம் பொருட்படுத்தாமல் எமது சமூகமும் சமுக தலைவர்கலும்                         தானும் தன் வேலையும் என்ற விடயத்தில் ஆழமாக ஊறிப்போய் இருக்கிறார்கள்.

குறைந்தபட்சம் இவர்கள் ஒற்றுமையாகாமல் விட்டாலும்,ஒரு கட்சிக்குள் வரா விட்டாலும், அடிக்கடி முஸ்லிம் கட்சிகளின் ஓன்று கூடலயாவது ஏற்படுத்தினால்,கலந்துரையாடினால்,அரச தலைவர்களை சந்தித்தால் முற்றிக்கொண்டு போகும் இனவாதத்தையாவது கொஞ்சம் குறைக்க வாய்ப்பு ஏற்ப்படும்.கடந்த கால ஓன்று கூடலால் எந்தப்பிரயோசனமும் இல்லை என்றாலும் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விளிக்கும் அளவுக்காவது இந்த ஓன்று கூடல் அமைந்தது.

நம் தலைவர்கள் ஓன்று கூடி சில காலம் கழித்தவுடன் அவர்களின் கட்சிக்குரிய வேலையான ஒருவரை ஒருவர் குறை சொல்லி கூவித்திரியும் பெருமைக்குரிய வேலையை தவறாமல் செய்வார்கள்.இதை வைத்தே இனவாதிகள் நமது பலவீனத்தை கண்டு கொண்டு மீண்டும் தலை தூக்கும் காரியங்களில் ஈடுபட ஆரம்பிக்கின்றார்கள்.

இதில் முக்கியமான விடயம் சிவில் அமைப்புகள் என்ற வகையில் உலமா சபையும் பல தரப்பட்ட முயற்சிகளை எடுத்தாலும் எட்ட வேண்டிய இலக்கை எட்டவில்லை என்பதுதான் உண்மை.அதன் பின் ஷூரா சபை அனைத்து தரப்பிலிருந்தும் தெருவு செய்யப்பட்டு பல ஏற்பாடுகளை மேட்கொண்டாலும் அதனாலும் ஒன்றும் செய்ய முடியாதோ என்ற சந்தேகப்படும் அளவில் தற்போதைய நினமை இருப்பதாக தென்படுகிறது.

ஆக மொத்தத்தில் குர்ஆனையும் அல்ஹதீசையும் பின்பற்றித்தான் நாம் கட்சிப்பணிகளை மேற்கொள்கிறோம் என்று மார் தட்டும் நம் கட்சிக்காரர்கள் அல்லாஹ்வுக்குகோ, அவன் தூதர் நபி (ஸல்)அவர்களுக்கோ,இவ்விரண்டின் கருத்தை கொண்டு ஆலோசனை கூறும் நடு நிலை வகிக்கும் சமயத்தளைவர்களின் ஆலோசனையையோ ஏற்றுக்கொள்ள முன்வராத வேதனையான நிகழ்வுதான் நடந்தேறுகிறது.

இலங்கை,இந்தியா ஆகிய இரண்டு நாட்டிலும் உள்ள இனவாதிகளுக்குடையில்  மிகவும் நெருக்கம் இருப்பதும்,இலங்கையில் இஸ்ரவேலின் ஊடுருவல் அதிகரித்திருப்பதும்,மேற்கத்திய நாடுகளின் இலங்கை   இனவாதிகளுக்கிடையிலான பரஸ்பர உறவுகள் சந்தேகத்தை ஏற்ட்படுத்துவதோடு எதிர்கால சந்ததிகளின் இருப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.  

No comments

Powered by Blogger.