Header Ads



ஹஜ் கட­மையை கொச்­சை­ப்­ப­டுத்­தும், ஆய­துல்லா அலி கொமைனிக்கு முஸ்லிம் நாடுகள் கண்­ட­­னம்

சவூதி அரே­பியா தொடர்பில் ஈரா­னிய ஆன்­மிகத் தலைவர் ஆய­துல்லா அலி கொமைனி முன்­வைத்­துள்ள கருத்­து­க­ளுக்கு முஸ்லிம் உலக நாடுகள் தமது கண்­ட­­னத்தை வெ =ளியிட்­டு­ள்­ள­ன.

வளை­குடா நாடுகளின் ஒத்து­ழைப்பு கவுன்சிலின் பொதுச் செய­லா­ளர் அப்துல் லதீ­க் அல் ஸயானி வெளியிட்­டுள்ள அறிக்­கை­யில்,  

கொமை­­னியின் குற்­றச்­­­சாட்­டுக்கள் உண்­மைக்குப் புறம்­பா­னவை.

இவ்­வா­றான வார்த்­தைகள் சாதா­ரண முஸ்­லி­மி­ட­­மி­ருந்து கூட வெ ளிப்­படக் கூடாது. ஆனால் இஸ்­லா­மியக் குடி­ய­ரசு என்று தம்மை அழைத்­துக் கொள்ளும் நாட்டின் ஆன்­மிகத் தலை­வ­ரி­ட­மிருந்து இவை வெளிப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­யன எனத் தெரி­­வித்­துள்ளார்.

அத்­துடன் உலக முஸ்­லிம்­களின் புனித ஹஜ் கட­மையையும் இரு புனித தலங்­க­ளையும் கொச்­சை­ப்­ப­டுத்­தும் செயற்­பாடே இது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

இதே­வேளை ஈரானின் இந்தச் செயற்­பாட்டை வன்­மை­யாகக் கண்­டித்து சவூதி வெ ளிவி­வ­கார அமைச்சர் அடேல் அல் ஜுபைர் தமது அர­சாங்­கத்தின் இய­லா­­மை­க­ளி­லி­ருந்து ஈரான்­ மக்­களின் கவ­னத்­தை திசை திருப்­பவே இவ்­வாறான கருத்­துக்­களை கொமைனி வெ ளியி­டு­வ­தாக தெரி­வித்­துள்­ளார்.

இரு புனித தல­ங்­க­ளையும் சவூதி அரே­பிய அர­சா­ங்கம் நிர்­வகிக்கக் கூடாது என்றும் சர்­வ­தேச குழு­வொன்று பொறுப்­பேற்க வேண்டும் என்றும்  ஈரான் ஆன்­மிகத் தலைவர் கொமை­னி விடுத்த அழைப்பை ­எகிப்தின் அல் அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழகத்தின் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­கள் கவுன்­சில் நிரா­க­ரித்­துள்­ள­து.

அதே­ேபான்று பாகிஸ்தான் இஸ்­லா­மாபாத்திலுள்ள இஸ்­லா­மிய நிறு­வ­னங்­க­ளின் தலை­மை­களின் ஒன்­றி­யமும் இதனைக் கண்­டித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­து. விடிவெள்ளி

10 comments:

  1. Both Iran and Saudi are trouble makers..
    Why Iran supported killing thousands of people in Iraq and Syria..and Lebanon and Yemen..
    It is behind all trouble in ME today.
    Saudi is carved out from.Turkish Islamic claiphate with support of British...it is also not good in many ways
    It is an agent of western countries for more than 100 years .
    It supports Israel and it supported alSeesi..who is killers of innocent people

    ReplyDelete
  2. It is a reasonable suggestion. A international committee is a good suggestion and it was proposed by educated upper class Sunni Muslim long time ago.

    ReplyDelete
  3. 200க்கும் மேற்பட்ட சுன்னி உலமாக்கள் (அல்-அஸ்ஹர் உலமாக்கள் உள்ளிட்ட) கலந்துகொண்ட சர்வதேச மாநாட்டில் "வஹ்ஹாபிகள் சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் அல்ல" என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இதையும் கொஞ்சம் பிரசுரித்திருக்கலாமே.

    ReplyDelete
    Replies
    1. Thaha Muzammil நீர் சொல்வது 100 வீத உண்மை தான் சுன்னத் ஜமாத் கூட்டம் ஷியா மதத்தவர்கள் தான் காரணம் ஷியா மதத்தவர்களும் சுன்னத் ஜமாத் கூட்டமும் யூதர்களின் வணக்கமான கபுர் முட்டி வணக்கத்தை தான் தொடர்ந்து செய்து வருகிறது

      Delete
  4. @Thaha Muzammil
    நீங்கள் முதலில் “சுன்னத் வல் ஜமாஅத்”, “வஹ்ஹாபிசம்”, “ஷியாக்கள்”,“ஷியாக்களின் உட்பிரிவுகள்” என்றால் என்ன என்று ஓரளவுக்காவது தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போது உங்களுக்குத் தெளிவு பிறக்கும். இவை பற்றி தெளிவு பிறந்தால், இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான பின்னூட்டம் எழுத மாட்டீர்கள்.

    ReplyDelete
  5. @Nowfara

    ஹஜ் கடமை, அதன் நிருவாகம் பற்றி முஸ்லிம்கள் தான் கவலைப் பட வேண்டும். அப்படியிருக்க ஏன் இஸ்லாத்திற்கு வெளியே இருக்கும் ஷியாக்கள் கவலைப் படுகிறார்கள்?– அன்றியும் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தாலும், பிற இஸ்லாமிய நிறுவனங்களாலும் நிராகரிக்கப் பட்ட ஒரு கருத்தை நல்லது என்று ஆமோதிக்கிரீர்களே உங்கள் நிலைப்பாடு வியப்பாக இருக்கின்றது! . அது சரி இந்த சுன்னி முஸ்லிம்கள் என்றால் யார் ? கொஞ்சம் வரையறுத்துக் கூறினால் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள், ஹி... ஹி... நானும் கூடத்தான்.

    ReplyDelete
  6. Do not call him AYATHULLAH.... Rather just call him Komaini.

    ReplyDelete
  7. THERE is no WAHABISM... No body you claim to be WAHABEE call himself that he belongs to a group called WAHABEE. The word WAHABIS is used RAFIDA, SOOFI supporting groups and IHWANEES to oppose the call of Muhammed Ibn Abdul Wahaab who called the people of ARAB land to follow the TAWHEED brought by Muhammed (sal) in its pure form and to leave Misguidance such as Grave worshipping.

    So those who love to worship grave such as RAFIDA and SOOFI groups started to oppose him and introduced the name WAHABISM. Rather No one who follows Pure form of TAWHEED call themself by above name.

    Islam needs Caliphate But based on Sunnah of Muhammed (sal). But the Attoman Caliphate which ended up in Turkey .. please read their Misguidance toward Islam at ending of Caliphate and Even till today they struggle to Establish HIJAB of women at public places.

    Alhamdulillah, May Allah Bless the people of ARAB land who RE Establish the land to PURE form of TAWHEED and Erased many form of SHIRK and BIDA and guided the people to the way of Muhammed (sal) and HIs companions way of life.

    ReplyDelete
  8. THAHA அவர்கள் குறிப்பிடுவது போன்று ச வஹாபிகள் சுன்னத் ஜமா அத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பது உண்மைதான்.காரணம் சுன்னத் ஜமா அத என்று வாதாடும் இவர்களிடம் அல்குரான் அச்சுன்னாஹ் வழிமுறைகள் எதுவும் கிடையாது.இயக்கத்தை நடத்த வேண்டும் என்பதற்காக ஒரு பெயர் வேண்டும் அதற்காக சுன்னத் ஜமாஅத் என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.உதாரணத்துக்கு ஒரு மனிதனுக்கு கமர் قمر என்று பெயர் வைத்தால் கமரின் பொருள் சந்திரன் அவர் சந்திரனுடைய வேலைகளை சிய முடியுமா சம்ஸ் சூரியன் என்று பெயர் வைத்தால் அவரால் சூரியன் செய்யும் வேலைகளை செய்ய முடியுமா ?முடியாது அதேபோன்று பெயரை சுன்னத் ஜமாஅத் என்று வைத்துக்கொண்டால் நூறு வீதம் சுன்னாவை பின்பற்றிய கூட்டம் ஆகாது.அவர்களிடத்தில் பத்து வீதமும் இல்லை என்பதுதான் உண்மை.அவர்களிடம் தொண்ணூறு வீதம் சுன்னாவுக்கு எதிரான விடயங்களே உள்ளன அதனால்தான் அவர்கள் மற்றைய இயக்கங்களை சுன்னத் ஜமா அத்தை செர்ராதவர்கள் என்று சொல்கிறார்கள்.அது உண்மைதான்.அதற்காக இயக்க பேருக்காக அவர்கள் கடைப்பிடிப்பது எல்லாம் சுன்னா அல்ல.வஹபிகள் என்று உங்களைப்போன்றோர் குறிப்பிடும் வர்க்கத்தினர் முடிந்தளவு குரான் சுன்னாவை பேணி நடக்கிறார்கள்.ஆனால் சில பிழைகள் இருக்கலாம் அது மனிதனுக்குரிய பண்பு அதனால் அவர்கள் வழிகேட்டில் இல்லை.அனால் சுன்னத் ஜமாஅத் என்று சொல்லும் வழி கேட்ட கூட்டம் எப்போதும் தனது வாசிக்கான பேசி மக்களை ஷிர்கின் பக்கம் அழைப்பது உங்களுக்கு மார்க்கமாக விளங்குது அதற்க்கு யாரும் ஒண்டும் செய்ய முடியாது.வஹபிகளுக்கு வாஹபி என்ற பெயரை உங்களைப்போன்றவர்கல்தான் சூட்டினார்களே தவிர அவர்கள் இப்பெயரை வைக்க வில்லை.குரானையும் சுன்னாவையும் பின் பற்றும் கூட்டத்தை பார்த்து வாஹபிகள் என்று நீங்கள்தான் சொல்கின்றீர்கள்.பெயர் எதுவாக இருக்கட்டும் நாம் பின்பற்ற வேண்டியது அல் குரானும் அஸ்சுன்னாவும்தான்.என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  9. சம்பந்தப்படட கட்டுரைக்கு பின்னூட்டுவதை விட்டு விட்டு வேறு எங்கோ போறாங்கப்பா .............. என்னத்த சொல்றது ..........

    ReplyDelete

Powered by Blogger.