Header Ads



சம்பந்தனின் மௌனம், முஸ்லிம்களின் சலசலப்புகளுக்கே வழிவகுக்கும்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் மதிப்பிற்குரிய எதிர்கட்சி தலைவர் அவர்களே, 

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்       இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், மலேசியாவில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட காடையர் கூட்டம்  மலேசியக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்ராஹிம் ஷாஹிப் அன்சார் அவர்களை கொடூரமான முறையில் தாக்கிய நிகழ்வை நீங்கள் அறியாமலில்லை.

சமூக நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் இல்லாமல் செய்யும், நாட்டின் இறைமைக்கு களங்கத்தை ஏற்படுத்தும், இப்படியான கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திற்குள்ளும்  வெளியிலும் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சி தலைமை, எவ்விதமான கண்டன அறிக்கையும் விடாமல் மௌனமாக இருப்பது இலங்கை மக்களை மனதளவில் காயப்படுத்தக் கூடியதாகவே காணப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், எதிர்க்கட்சி தலைவர் எனும் அடிப்படையில், உங்களின் மௌனம் மக்கள் மத்தியில் (குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு) ஒரு விதமான சலசலப்புக்கும் பல்வேறு விதமான யூகங்களுக்கும் வழிவிட்டு செல்லும் என்பதே உண்மையாகும்.

தமிழ் கூட்டமைப்பின் தலைவராகவுள்ள எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில், இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக  நடைபெற்ற போராட்டம் என்பதாலும், தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வுகள், அதிகாரப்பரவலாக்கள் பற்றி பேசிக்கொண்டும் அதற்கான முன்னெடுப்புகளை செய்து கொண்டும் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், இப்படியான சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் "நாம் இலங்கையர்" என்ற நிலைப்பாட்டில். 

எனினும், எவ்விதமான எதிர்வினைகளும் இல்லாமல் சமூக நல்லிணக்கம் என்று பேசிக்கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு அதிகாரப்பரவலாக்கள் என்பது எல்லாம் வெறும் கானல் நீர் ஆகும்.

-மனாப் அஹமத் றிசாத்-

2 comments:

  1. Yes, They want the North and East united. However, they don't have mouth to speak of this matter. What a shame.

    ReplyDelete
  2. இந்தியாவில் இருந்து இன்னும் தகவல் வரவில்லை ஏனெனில் குடுமபமே நக்கிற
    து,எட்டப்பன் வேலைக்கு வேட்டு வைத்து விடாதே அதான் mr.waiting

    ReplyDelete

Powered by Blogger.