September 29, 2016

முஸ்லிம்களை தமிழர்களாக சித்தரிக்க முனையும், விக்னேஸ்வரனின் கருத்தை ஏற்கமுடியாது

-நல்லாட்சிக்கான தேசிய முன்னணி-

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், சமீபத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்து,  அடிப்படையில் மிகவும் தவறானது. மொழி ரீதியாக முஸ்லிம்களையும் தமிழர்களையும் ஒரு இனமாக சித்தரிக்க முனைவது, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவத்தை நிராகரிக்கும் ஒரு நிலைக்கு இட்டுச் சென்று விடும்.

"முஸ்லிம்கள்  அரசியல் காரணங்களுக்காக தமது வடிவம் மதம் சார்ந்தது என்றும் அது மொழி சார்ந்தது அல்ல என்றும் கூறி வருகின்றனர். கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசி, எழுதி, கற்று வருகின்றதனால் முஸ்லிம்களின் கலை வடிவமும் மொழி  சார்ந்தது  என்று கூறத்  தோன்றுகின்றது."

"மொழியைப் பேசுவதற்குக் கற்றுக் கொண்ட பின்னர் தான் நாம் மதத்தை அறிந்து கொண்டோம். இந் நிலையில் முஸ்லிம் சகோதரர்களும்  அடிப்படையில் தமிழ் மொழி சார்பானவர்களேதான். தமிழ் இனத்தை  இனிமேல்  ஒன்றிணைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான்”  இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் இந்தக் காலகட்டத்தில் இவ்வாறான பொறுப்புணர்ச்சியற்ற கருத்துக்களை வெளியிடுவது அபாயகரமானது. தமிழ்- முஸ்லிம் சமூகங்களிடையே, சந்தேகத்தையும் கசப்புணர்வையும்

 வளர்க்க இது பங்களித்து விடுமாயின், அது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  மேலும் தெரிவித்துள்ளது.

நிலைமாறு காலகட்ட நீதி, மீளிணக்கம் பற்றி நாடு கவனம் செலுத்தும் இந்தக் கால சூழலில், பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கும் கருத்துக்களே முன்வைக்கப்பட வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  மேலும் கருத்து வெளியிட்டுள்ளது.

15 கருத்துரைகள்:

இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களின் வாதம் ஆச்சரியமாக உள்ளது. இங்கே தமிழ்நாட்டில் அனைவருமே தமிழர்களே, மதங்கள்,மதமின்மை என்பவைதான் வேறுபடுகின்றன.

இனம் என்பது மதத்தால் தீர்மானிக்கப் படுவதில்லை. கிறிஸ்தவ, நாத்தீக அரபிகள் உள்ளனர், அவர்கள் அரபிகளே.

மதம் மாறுவதால் ஒருவரின் இனம் மாற்றமடையாது. இலங்கை முஸ்லிம் ஒருவர் பெளத்த மதத்திற்கு மாறினால், அவரது இனம் என்ன?

It is more appropriate to call Tamil speaking people as Muslims in the Sri Lankan Context.

NFGGவிக்கியின்காலைபிடித்து மகாணசபை உறுப்பினர் பதவி பிச்சைவாங்கியது மறந்து விட்டதா!

Then why LTTE CHASE ALL MUSLIMS ( TAMIL SPEAKING ) FROM NORTH ?

இஸ்லாத்தில் இருந்து வெளியேறிய இலங்கையர்களின் இனம் என்ன?

இனம் என்ற வரையறை தாண்டி தானே பிரபாகரன் வடக்கிலிருந்து துரத்தினான், கிழக்கில் பள்ளிவாசல்களில் வைத்து பலி எடுத்தான், ஒரு மத பிரிவை இரண்டு இனங்களும் ஒதுக்கும் போது அங்கே தனியினம் என்கிறது அவசியம் என்பதை அறிக. தமிழ் நாட்டிலிருந்துகொண்டு ஈழ அரசியலை தான் உங்களுக்கு பண்ண முடியுமே தவிர யதார்த்தத்தை உணர முடியாது. இன்றுவரை நாம் அவர்களை முழுமையாக நம்பும் அளவிற்கு அவர்கள் நடந்துகொள்ளவில்லை மாறாக டம்மி அதிகாரத்தை கொண்டே நசுக்க நினைக்கும் இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் முஸ்லிம்கள் நிலை என்னாகும்

பிரபாகரன் மட்டுமல்ல, தமிழ் நாட்டில் கூட பல கலவரங்கள் நடைபெற்றுத்தான் இருக்கின்றன. அது மத ரீதியான பிரிவு. மத ரீதியாக மோதிக் கொண்டதற்காக, இனம் மாறிவிட முடியுமா?

பெற்றோருக்கு இடையில் பிரச்சினை என்றால், பெற்ற பிள்ளைக்கு புதிய தாய் வர முடியுமா? இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை ஒரு காலத்தில் தாக்கினார்கள், அதற்காக தமிழர்கள் இலங்கையர்கள் இல்லை என்று அர்த்தமா?

இஸ்லாம் என்பது மதம், தமிழர் என்பது இனம்.
இஸ்லாமிய மதத்திற்கு உள்ளேயே வஹ்ஹாபி - தப்லீக் பிரச்சினைகள் வருவதில்லையா? அதற்காக ஒரு தரப்பு இஸ்லாமியர் இல்லை என்று ஆகிவிடுமா?

but v love our religious identity than language

விக்கி சொன்னது 100% சரி.

இலங்கையில் 2 இனங்கள் மட்டுமே உள்ளது. 1. சிங்களவர்கள், 2.தமிழர்கள்.
இதை சட்டழூலமாக அரசு கொண்டுவந்தாலே இலங்கையின் இனப்பிரச்சினை 50% தீர்ந்துவிடும்.

ஆரம்ப காலங்களில் அப்படித்தான் இருந்ததாம். உலகெங்கும் அப்படித்தான் உள்ளது. இலங்கையில் மட்டும் அரசியல்வாதிகள் தங்களின் பிழைப்புக்காக இடையில் ஒரு மதம் யை இனமாக மாற்றிவிட்டார்கள்.

Mr.Attathoni unudaiya koppar yar.thanava c navas.

There are 3 ethnicities in Sri Lanka.

Who cares about racist Vicky?

Muslims are different ethnicity.

Muslims ethnicity is not based on language in Sri Lanka.

Oru arabiyo,negro, tamilan, singalavan, vellaiyano Islam embraced panninaal; avan naadu, inam, moli paarpathu islaathil prohibited. Avan entha inathil irunthu vanthaalum antha culture follows pannuvathu haraam(prohibited). Muslims have unique culture.

விக்கி சொல்வது போல மொழியை வைத்தோ அல்லது இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் சொல்வது போல மதத்தை வைத்தோ இனம் வரையறுக்க படுவதில்லை. இந்தொனிசிய முஸ்லிம்களும் மலேசிய முஸ்லிம்களும் இலங்கை முஸ்லிம்களும் ஒரே இனம் என்று சொல்வதை இந்தோனேசிய மற்றும் மலேசிய முஸ்லிம்கள் ஏற்று கொள்கிறார்களா? அப்படி ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களின் இனம் என்ன? அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா?

இன மரபு ஜீன்கள் (genes - genetics) இன அடையாளத்தை தீர்மானிக்கின்றன. இந்த வகையில் இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல - அரபுக்கள். அவர்கள் பேசுவது அரபுத்தமிழ். இலங்கை அரபுக்களை தமிழர்கள் என்று தமிழர்கள் அடம் பிடிப்பது இலங்கை அரபுக்களை அவமதிப்பதாக இருக்கிறது. அரபுக்களும் தம்மை அரபுக்கள் என்று இன ரீதியாக அடையாளப்படுத்தி கொல்ல வேண்டும். முஸ்லிம் மதத்தை இலங்கை அரபுக்களும் மலே முஸ்லிம்கள் போல அதிகம் நேசிக்கிறார்கள். அதற்காக இலங்கை அரபுக்களும் மலே முஸ்லிம்களும் ஒரே இனம் ஆகிவிட முடியாது.

Post a Comment