Header Ads



உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இலங்கை - புகழ்ந்தார் ஒபாமா


 தற்போது இலங்கையில் இடம் பெற்று வருகின்ற மாற்றங்கள் உலகத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.


நிவ்யோர்க் நகரில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று மாலை சந்தித்த ஒபாமா இதனை கூறியுள்ளார்.

மாறிவரும் இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என ஒபாமா இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கனடாவின் பிரதமர் Justin Trudo,அவுஸ்திரேலியாவின் பிரதமர் Malcolm Turnbull மற்றும் பாகிஸ்தான் பிரதமர் Nawaz Sherif ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராட் அல் ஹூசைனையும் மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இன்று மைத்திரிபால சிறிசேன உரையாடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. Well said. Example country and example leader!

    ReplyDelete
  2. இந்த கருத்தை தனியாக சொன்னதைவிட ஐ நா பொதுச் சபை கூட்டத்தின்

    ReplyDelete
  3. இதை தனியாக சொன்னதை விட ஐ நா பொதுச் சபை கூட்டத்தில் ஒபாமா பேசும்போது பகிரங்கமாக சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும் ,நன்றி ஒபாமா

    ReplyDelete

Powered by Blogger.