Header Ads



இலங்கையை மதச்சார்ப்பற்ற நாடாக மாற்றுவற்கு, முயற்சிக்க வேண்டும் - சந்திரிகா

இலங்கையில் உரிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரைப்பங்கான மதச்சார்பற்ற சமஸ்டி முறையை அமுல்செய்ய அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய நல்லிணக்க செயலகத்தின் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அவர் அதிகார பரவலாக்கல்கள் மூலம் பல நாடுகள் தமது பிரச்சினைகளை தீர்த்துள்ளமை குறித்து பாடம் படிக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், தென்னாபிரிக்காவை பொறுத்தவரை அது சமஸ்டி மூலமே பிரச்சினையை தீர்த்துக்கொண்டது.

நைஜீரியாவும் அதேமுறையையே பின்பற்றியது. இந்தியாவில் 36 மொழிகள் வழக்கில் உள்ளன. பௌத்தம், சீக்கியம் உட்பட்ட பல மதங்கள் உள்ளன. எனினும் அந்த நாட்டில் ஒருமைப்பாட்டுக்கு பிரச்சினை ஏற்படவில்லை.

இந்திய அரசியலமைப்பின்படி அந்த நாடு மதச்சார்பற்ற அரசாகவே கருதப்படுகிறது.

இந்தியா வலுவான நாடாக இருப்பதற்கு, சமஸ்டி முறையும் மதச்சார்ப்பின்மையுமே காரணமாக உள்ளன என்று சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, புத்தபெருமானை பொறுத்தவரையில் அவர், அனைவருக்கு சமவுரிமையை வலியுறுத்தினார்.

இந்த நிலையில் இலங்கை ஏன் அந்த கொள்கைக்கு எதிராக செயற்படவேண்டும் என்று சந்திரிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

பௌத்த மதத்தை பொறுத்தவரையில் அது அனைத்து மதங்களுக்கு சமவுரிமையை வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் இலங்கையை முழுமையாக மதச்சார்ப்பற்ற நாடாக மாற்றமுடியாது போனாலும் அரை மதச்சார்ப்பற்ற நாடாக வேனும் மாற்றுவற்கு முயற்சிக்க வேண்டும் என்று இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இலங்கை மதச் சார்பற்ற நாடாக மலர வாழ்த்துக்கள். முன்னேற்றத்திற்கான நல்ல அறிகுறி.

    ReplyDelete

Powered by Blogger.