Header Ads



பிரான்ஸில் யாழ்ப்பாண முஸ்லிம்களின், மீள்குடியேற்றம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் (படங்கள்)


ஐரோப்பிய வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்களின், ஒன்று கூடலின் முதலாவது அமர்வு இன்று -03- சனிக்கிழமை பிரான்ஸில் ஆரம்பமாகியுள்ளது.

முதலாவது நாளில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ள இக்கலந்துரையாடலின் போது, பங்குகொண்ட யாழ்ப்பாண முஸ்லிம் சகோதரர்கள் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இக்கலந்துரையாடலின் போது யாழ்ப்பாண முஸ்லிம்களின் இருப்பை தொடர்ந்து பாதுகாக்கவும், மீள்குடியேறிய மக்களுக்கு உதவி செய்யவும், மீள்குடியேற காத்திருக்கும் மக்களை ஆர்வமூட்டி மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய வாழ்  யாழ் முஸ்லிம்களின் இரண்டாவது நாள் ஒன்றுகூடலாகும்.

இந்த 2 ஆவது நாள் ஒன்றுகூடலின் போது, ஐரோப்பிய வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே பொதுவான நிதியமொன்றை ஆரம்பிப்பது, அந்த நிதியம் மூலம் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு உதவுவது, மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பை ஜெனீவா உள்ளிட்ட சர்சதேச சமூகத்திற்கு எடுத்துச்செல்வது, யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய நலன்களுக்காக உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் முஸ்லிம் சக்திகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வது பற்றியும் இன்றைய கலந்துரையாடலின் பொது ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


6 comments:

  1. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் ஜப்னா முஸ்லிமுக்கும் எமது வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  2. Well done. Your hard work and dedication to your community and village are encouraging.
    But first all you should collect data of people who live in Europe from jaffna. That shold be number one task for you so that you can protect their iman and community committtment.this can be folllowed all projects you want to do



    Allah knows best

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மிகவும் வரவேற்கத்தக்க ஓர் சிறந்த முயற்சி. இச்சந்திப்பில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக மட்டும் நின்று விடாது, கல்வி,தொழில் நுட்ப பயி்ற்சி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் பற்றியும் ஆராய்வது சிறந்தது.
    உங்கள் நோக்கம் முழுமையாக வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. Ajan, கேவலமான உங்கள் மனக்கிடக்கையை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். வெட்கக் கேடு.

    ReplyDelete
  6. Ajan unathu sakiliya puththiya kattiviteer.

    ReplyDelete

Powered by Blogger.