September 15, 2016

"அஷ்ரப் கண்ட கனவு"

கிழக்கின் உதய தாரகையாகத் தோன்றி ( 23.10.1947 ல்)  நாட்டின் அரசியல் வானில் ஒளிபரப்பி முஸ்லிம்களை  அரசியல் ரீதியில் ஒரு குடையின் கீழ் கொண்டுவர அரும் பாடுபட்டு அதன் மூலம் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து “சத்தியமே இலட்சியம்” என்று பறைசாற்றி அதன் வெற்றிப் பாதையையும் காட்டி விட்டு அதற்காகத் தன்னையே தியாகம் செய்துவிட்டு  மாபெரும் தலைவர் மர்ஹூம் எம். ஏச். எம். அஷ்ரப் அவர்கள் 16. 09. 2000 ல் இவ்வுலகை விட்டு இறையடி சேர்ந்தார்கள்.

சுதந்திரத்தின் பின்  அரசியல் அநாதைகளாயிருந்த முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரத்தை  வென்று கொடுத்து அதன் மூலம்   அரசியல் முகவரியையும் அடையாளத்தையும் முத்திரை குத்திச் சென்றவர் மாபெரும் தலைவர் அஷ்ரபேயாகும். 

பயங்கரவாத நடவடிக்கைகள் , இனக்கலவரங்கள் ஆகியவற்றின் மத்தியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு துணிவுமிக்க அரசியல் வழியைக் காட்டிக் கொடுத்தவர் இம்மகான்தான். அறிவும், ஆற்றலும், சமூக உணர்வும் , ஆளுமையும் கொண்ட இவர் முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சி, அதனது கல்வியறிவிலும்   ஒற்றுமையிலுமே தங்கியுள்ளது என்பதை வற்புறுத்தி  பல பாடசாலைகளை அமைத்ததோடு மும்மொழிகளின் முக்கித்துவத்தையும் வற்புறுத்தி முதன்முதலாக முஸ்லிம் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை –  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை  தோற்றுவித்தார். தனது 6 வருட குறுகிய கால அமைச்சர்  பதவி காலத்தில்  முஸ்லிம் பிரதேசத்தில் துறைமுகம் ஒன்றையும்  , பல்கலைக்கழகம் ஒன்றையும்  நிறுவியதோடு முஸ்லிம்; பிரதேசங்களில் இருந்த பாடசாலைகளை மறு சீரமைக்கவும்  புதிய பாடசாலைகளை அமைக்கவும்  முனைப்புடன் செயல்பட்ட அவர் வடக்கிலருந்து தெற்குவரை இருந்த இளைஞர்களுக்கும்  , யுவதிகளுக்கும் ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்களை எல்லா  இனங்களும் பயன்படும் விதமாக வழங்கினார்.

தலைவர் அஷ்ரபுடைய அர்ப்பணிப்புகளில் முக்கியமானதும் முதன்மையானதுமான சேவை என்னவெனில் 1980 களில் முஸ்லிம் வாலிபர்கள்  அரசியல் ரீதியாக வழிதவறி  பயங்கரவாத இயக்கங்களில் சேர்வதைத் தடுத்து அவர்களை அரசியல் மயப்படுத்தி  தேசிய அரசியல்  நீரோட்டத்தில்  சேர்த்ததேயாகும்.  அதன் மூலம் நாட்டின் வடகிழக்கில் பிரிவினைவாத – பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு வழங்காததன் மூலமும்  அவ்வியக்கங்களில் எமது இளைஞர்கள் சேராமல்  தடுத்ததன் காரணமாக  இந்த நாட்டின் இறைமையையும்  ஐக்கியத்தையும் பாதுகாத்தார் என்பது இந்த நாட்டுக்கு செய்த சேவைகளில்  மகத்தானது என்று கூறினால் அது மிகையாகாது. 

  அன்று மர்ஹூம் அஷ்ரபின் கீழ் தலை நிமிர்ந்து வீறு நடை போட்ட  சமூகம் இன்று அடிமையாவதா?  அகதியாவதா? அல்லது  அடையாளங்களையும் முகவரிகளையும் இழந்து அனாதைகளாகக் கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு உட்படுவதா என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. அன்று முஸ்லிம்களின் அரசியல் தலைவர் என்று போற்றப்பட்ட அஷ்ரபிடம்  தனது கட்சியின் மீதான பற்றுதலும் சமூகத்தின் மீதான உணர்வும் தனது மார்க்கத்தின் மீதான அவவாவும் மேலோங்கி இருந்ததனால்தான், இரவு பகலாகத் தூக்கமின்றி சமுதாயத்தை காத்து நின்றார். 

தான் உறங்கினால் சமுதாயமும் உறங்கி விடும் என்ற  உணர்வினால்  விழித்திருந்து சமூகத்தின் உரிமைகளுக்காகப்  போராடிய அந்த மகானை எம்மால் இலகுவில் மறந்து விட முடியாது. ஆனால், இன்று முஸ்லிம் கட்சித் தலைவனாகக் கூறிக் கொள்ளும் தலைமைத்துவத்திடம் மேற்கூறிய  தலைமைத்துவப் பண்புகளும் ஆளுமையும் இருக்கின்றதா? என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது.  மறைந்த தலைவரின் பின்  இன்றுவரை  16 வருட காலங்களுக்குள் முஸ்லிம் சமுதாயத்துக்குக் கிடைத்த நன்மைகள், சேவைகள் என்ன? என்று கேட்டால் நாம் மௌனம் சாதிக்கும்  நிலைக்கே தள்ளபடுவோம்.

அரசியலிலே மீட்சி பெற்று இந்த நாட்டின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக உன்னத நிலை பெற்றிருந்த அன்றைய முஸ்லிம்களின் தலைமைத்துவம்; இன்று தனது உரிமைக் குரலை எழுப்ப முடியாது ஒதுங்கியும்  பதுங்கியும் இருக்கும்  துர்ப்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் விழித்தெழுந்து அரசியல் சிந்தனையோடு புதியதோர் யுகம் படைக்க முன்வர வேண்டிய காலம் இப்பொழுது கனிந்துள்ளது என்பது அரசியல் அவதானிகளின் சரியான கணிப்பாக இருக்கின்றது. 

“போராளிகளே புறப்படுங்கள்” என்ற அன்றைய மாபெரும் தலைவரின்  முழக்கத்துக்கு ஏற்ப சொற்போர், கருத்துப் போர் புரிந்து முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார  உரிமைகளை வென்றெடுக்க துணிவோடும் தியாகத்தோடும் அஞ்சா நெஞ்சம் கொண்டு அறிவுப் போர் மூலம் சமுதாயத்தைக் காக்கும் அரசியல் தலைமைத்துவத்தை  இனங்கண்டறிவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். பாதை தவறிய தலைமைத்துவத்திற்கு பதிலாக உரிமை காத்து வெற்றிப்  பாதை காட்டும்  தலைமைத்துவமே இன்று அவசிமாகின்றது.  இந்த தலைமைத்துவ தாகத்தின் தேடலில் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்டு வரக்கூடிய   அரசியலமைப்பு, சீர்த்திருத்தங்களிலும் தேர்தல் தொகுதி அமைப்பு சீர்த்திருத்தங்களிலும்  மிக முக்கிய கவனம் செலுத்தி அவதானமாக நடந்து தனக்கொரு தகுதியான தலைவரைத் தேடிக்கொள்வதில் முஸ்லிம் சமூகம் மும்முரமாக ஈடுபடுவது   அச் சமுதாயத்தின் தலையாய கடமையாக இருக்கின்றது. இல்லையேல் தலைவர் அஷ்ரப் அவர்கள் கண்ட கனவுகள் கரைந்து போகும் ஆபத்தான நிலைக்கு உட்படலாம்.  “உரிமை காக்க ஒன்று படுவோம் தலை நிமிர்ந்து நிற்போம்”. “மீட்சிதரும் தலைமைத்துவம் நோக்கி புறப்படுவோம். அதற்காக சமூகப் போராளிகளே புறப்படுங்கள்” என்ற மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் அறைகூவலை ஞாபகப்படுத்தி விடைபெறுகின்றேன். 
    
எஸ். சுபைர்தீன்
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  

7 கருத்துரைகள்:

...... ஹாஜி சுபைர்தீன் அன்றைய நாட்களுக்கு ( உங்கள் கட்டுரை மூலம் ) எம்மைக் கொண்டு செண்றீர்கள் ! கண்ணை கசக்கி பார்த்த பின்தான் புரிகிறது இன்றைய அனாதரவு நிலையை !! Saheed M Lafir - Qatar

சுபைதீன், சுரிக்குள் கிடக்கும் மக்களை, புதை மண்ணுக்குள் தள்ளி விடவே முயட்சி செய்கிறீர்கள். உங்கள் முதல் நண்பர் - தலைவர் சகோதரர் அதாவுல்லாவுக்கும் அவரது கட்சிக்கும் என்ன நடந்தது. அவரது கடை நஷ்டத்தில் செல்கிறது என்பதை உணர்ந்த நீங்கள் இப்போது றிசாத்தின் கடை நல்ல ஓடுகிறது என்று அந்த கடையில் சேர்ந்துள்ளீர்கள். இப்போது அவரை குஷி படுத்துவதட்கு சில முயட்சிகள் செய்கிறீர்கள் பரவாயில்லை, ஆனால் சமூகத்துக்கு செய்து காட்டுங்கள். முடியுமானால் புதிய அரசியல் சாசனம் இப்படித்தான் அமைய வேண்டும் என்று சொல்லி ஒரு மாடல் வரைபை முன் வையுங்கள். கல்வி, வேலைவாய்ப்பு, முஸ்லிம்களின் அரசியல் உரிமை, மத வழிபாட்டு உரிமை இன்னோரன்ன பிரச்சினை பற்றி பேசுங்கள். ஒரு அஸ்ரப் மறைந்தாலும் இன்னும் முஸ்லிம்காங்கிரஸ் என்ற கட்சி இலங்கை அரசியலில் அதன் தாக்கத்தை செலுத்துகிறது. ஆனால் ஒரு ரிசாத் பதுர்டீன் இல்லையானால் உங்களின் நிலை என்ன உங்கள் கட்சியின் நிலை என்ன என்பதை சிந்தித்தித்து பாருங்கள். ஒரு மீன் எப்படி தண்ணீருக்குள் மட்டும் வாழுமோ. அதே மாதிரித்தான் றிசாத் அமைச்சரவையில் இருக்கு மட்டும் தான் நீங்களோ, அவரை சுற்றி இருக்கும் அனைவரும் இருப்பீர்கள், அவர் அரசாங்கத்தை விட்டு மாறினால் எல்லோரும் கழன்று விடுவீர்கள் ஏன் றிஸாத்தின் கதியும் அதோ கதிதான். தயவு செய்து இன்னும் மறைந்த தலைவர் அஸ்ரப் ஐ வைத்து அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள்.

இவருடைய மண்ணறை வாழ்க்கையை வல்ல ரஹ்மான் பொருந்திக்கொள்ளட்டும்

கட்டுரையில் சொல்லப்படுவது முற்றிலும் உண்மை முஸ்லிம் சமூகத்துக்கு தேவைப்படும் தலைமைத்துவத்தை இன்றே தெரிவு செய்வோம் நாங்களே தேர்ந்தெடுத்த இந்த வக்கற்ற நாய்களை வீட்டுக்கு அனுப்புவோம்.அது எங்கள் கையில் உ்ள்ளது.சிந்திப்போம் செயல் படுவோம் வெறும் மயக்க வார்த்தையில் மயங்காதிருப்போம்.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.பயப்பட வேண்டாம்.மாயயில் சிக்க வேண்டாம்

உண்மையை நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்

முஸ்லீம்களின் சாபம். தூரநொக்கு அற்றதலைமை.குறிப்பாக முஸ்லீம்களின் உணர்வுகளை தூண்ட இவர் செய்தவேலைகள் அவர்களுக்கு துன்பத்தையே தந்தது.LTTE க்கு பிரேமதாசகாலத்தில் ஆயுதங்கள் வழங்கப்பட்டது.இவர் ஆர்வ கோளாரரின் காரணமாக முஸ்லீம் களுக்கும் ஆயுதம் பெற்று ஜீகாத் பயங்கர வாதத்தை உருவவாக்கினார்.அவர்கள் இராணுவத்துடன் இணைந்து தமிர்களை படு கொலை செய்தனர்.குறிப்பாக இவர்களை கற்பளிப்பு ராணுவம் என்றே கிழக்கு தமிழர் அழைத்தனார்.அத்தனைகற்பளிப்புகள் செய்னர்.இவரின் ஆர்வகொளாரால் புலீகள் முஸ்லீம்களை படு கொலை செய்தனர்.வடக்கிலிருந்து அப்பாவி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர்.இவற்றுக்கும்காணம்
அஷ்ரப்.
மேலும் அவரஅவசர மாக இலங்கையில் முஸ்லீம் பல்கலைகழகம்ம என்ற கோசத்துதடன் உருவான பல்கலைகளகமும் வினைதிறன் அற்று மூடபடும் அளவுக்கு சென்றுதப்பித்தது.
மூஸ்லீம் துறை முக கோசதுடன் உருவா ஒலுவில் துறைமுகத்தால் அந்த கிராமமே அழியும் நிலையில் உள்ளது.

ஓ இஷுட் Mr Kumar சரி உங்க தலைவர் 30வருடங்கள் கிழித்த பட்டியல் ரெம்ப நீளமா இருக்கு பரவாயில்லையா?

Post a Comment