Header Ads



'வடக்கில் சிங்களவரை குடியேற வேண்டாம், எனக் கூறுவது பாசிசமாகும்'

விக்னேஸ்வரனோ, சம்பந்தனோ, சுமந்திரனோ அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே உள்ளனர் என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று -28- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு எழுக தமிழ் பேரணியில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை குறித்து கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விமல் வீரவன்ச அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஒரு பக்கம் மங்கள சமரவீர விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் பிண்ணிப் பிணைந்து உறவாடும் வேளையில் மறுபக்கம் உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மக்களிடையேயும், சிங்கள மக்களிடையேயும் கட்டுப்பாட்டுடன் வரும் நல்லிணக்கத்துடனான ஐக்கியச் சூழலை கொன்றுவிட்டு,

சிங்கள மக்களையும், பௌத்த கலாசாரத்தையும் அருவருப்பான விடயமாக எடுத்துக்காட்டி அப்பாவித் தமிழ் மக்களை இனவாதப் பாதையில் இட்டுச் செல்கின்றார்.

அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்காக உயிர்நீத்த திலீபனின் திருவுருவப் படத்தை யாழ்ப்பாணத்தில் வைத்து நினைவு கூருகின்றார்கள்.
வடக்கில் புத்தர் சிலைகளை அகற்றுமாறு விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் குடியேற வேண்டாம் எனக் கூறுகிறார்கள்.

இன்னும் தெளிவாகக் கூறினால் இவை சிங்கள இனச் சுத்திகரிப்பாகும். இதுவொரு பாசிசவாத வெளிப்பாடாகும். இந்தப் பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் மக்களை குடியேற்ற வேண்டாம் என எங்களால் கூறமுடியாது.

அதேபோல சிங்கள மக்களைக் குடியேற வேண்டாம் என்றும் எவராலும் கூறமுடியாது. அப்படிப்பட்ட எண்ணத்தில் யாராவது இருந்தால் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். அது ஒரு நோயாகும்.

வடக்கு தமிழருக்கே சொந்தமானது. அதனால் வேறு இனத்தவர்கள் குடியேற முடியாது என்ற எண்ணக்கருவை விதைக்கும் சுதந்திரம் தற்போதைய நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் ஆட்சியிலேயே வழங்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரனின் இனவாதம், சம்பந்தனின் நடுநிலைவாதம் என்ற இரண்டு விதமான கூற்றை தெற்கு அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
எனினும் விக்னேஸ்வரனோ, சம்பந்தனோ, சுமந்திரனோ அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே உள்ளனர்.

இலங்கைக் குடியுரிமையில் உள்ள தமிழர் ஒருவரது புகலிடக் கோரிக்கையை அண்மையில் நிராகரித்த கனேடிய நீதிமன்றம், அரசியல் தஞ்சத்தை நிராகரித்தமைக்கான காரணத்தையும் தெரிவித்திருந்தது.

குறித்த பிரஜை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டிருக்கின்றார் என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த இயக்கத்தின் கிளையெனவும் கூறியிருக்கிறது.
இது தான் கனடா நீதிமன்றத்தின் தீர்ப்பு, வெளிநாட்டு நீதிமன்றம் இவ்வாறு தீர்மானித்திருந்தாலும் இலங்கை அரசாங்கம் அவ்வாறு தீர்மானம் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. YAKO WEERAWANSA TAMUSETA PULUWAN NAM HINGURAKGODA HO GAMPAHA DEMALA HA MUSLIM KATTIYAK PADINCHI KARANNAKO BALANNA.puwannam yapaneth onekenek padinchi wenna puluwan.

    ReplyDelete
  2. We have to allow Sinhalese to settle in the North. Then only we can control North LTTE.

    ReplyDelete

Powered by Blogger.