Header Ads



புத்தளம் மாவட்டத்தில் தமிழ்மொழி அமுலாக்கல், தொடர்பில் சமர்ப்பித்ததுள்ள முன்மொழிவுகள்

தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கனேஷன் அவர்களுக்கு புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பில் நாம் சமர்ப்பித்ததுள்ள முன்மொழிவுகள்...!

புத்தளம், முந்தல், கற்பிட்டி, வண்ணாத்திவில்லு பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி அமுலாக்கப்படுவதற்கு பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1. புத்தளம், கற்பிட்டி, முந்தல் பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளர்களாக தமிழ் பேசும் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச... செயலாளராக தமிழ் பேசும் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.  (இந்த சிபாரிசு மேற்படி 4 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சனத்தொகை அடிப்படையில் விடுக்கப்படுகிறது).

2. இப்பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி அமுலாக்கல் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்).

3. தமிழ் மொழிப் பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

4. தமிழ் மொழி சிற்றூழியர்கள் Peon முதலியோர் நியமிக்கப்பட வேண்டும்.

5. தமிழ் மொழியிலும் சகல அலுவலர்களின் பணிகள் தொடர்பில் காட்சிப்படுத்தல்கள் இருக்க வேண்டும்.

6. சகல விண்ணப்பப் படிவங்களிலும் தமிழ் மொழியிலும் விவரங்கள் கோரப்பட்டிருக்க வேண்டும்.

7. தமிழில் கடிதங்கள் சமர்ப்பிக்கப்படும் போது அவை அலுவலர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

8. நடத்தப்படும் சகல கூட்டங்களிலும் தமிழிலும் விளக்கமளிக்கும் ஏற்பாடுகள் இருத்தல் வேண்டும்.

9. தமிழ் மொழி அதிகாரிகள் போதியளவு நியமிக்கப்பட வேண்டும்.

10. தமிழ் மொழியின் முக்கியத்துவம் தொடர்பில் போதிய தெளிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஊக்குவிப்புக்கள், மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.

புத்தளம் மாவட்ட தமிழ் பேசும் மக்களின் மொழி அமுலாக்கல் தொடர்பில் நீண்ட கால அபிலாஷைகளை பூர்த்தி செய்து வைப்பதில் அமைச்சரின் வகிபாகம் மிகவும் இன்றியமையாதது என்றும் நாம் வலியுறுத்தியுள்ளோம்.

-Mohamed Muhusi-

No comments

Powered by Blogger.