Header Ads



"முஸ்லிம் மாதர்களின் ஆடை தொடர்பாக, என்னிடம் பல நண்பர்கள் கேட்கிறார்கள்"

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

முஸ்லிம் மாதர்களின் ஆடை தொடர்பாக என்னிடம் பல நண்பர்கள் கேட்கின்றார்கள், முஸ்லிம் மாதர் முகம் கரங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை மறைத்து, அங்க அவயவங்களின் அலங்காரங்கள் கவர்சிகள் புலப்படாத வண்ணம் தளர்வான ஆடைகளை அணிதல் வேண்டும்.

“இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் ….”(ஸுரத்துன் நூர் 24:31)

முகத்தை முழுவதும் திரையிடுவது கட்டாயம் எனக் கருதும் நிலைப்பாட்டை கொண்டுள்ளோர் அதனை பின்பற்றுவது அவர்களது சுதந்திரமும் தெரிவுமாகும். அதே போன்று அடுத்த நிலைப்பாட்டில் இருப்பவர்களை ஹராத்தை செய்பவர்களாகவும் வழிகேடர்களாகவும் காபிர்களாகவும் அழைப்பது அறியாமையாகும்.

கருப்புநிற ஆடைகளை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்பதில்லை, வாழுகின்ற நாட்டின் சீதோஷன நிலைகளை கருத்தில் கொண்டு அதிக கவர்ச்சியற்ற தளர்வான ஆடைகளை அவர்கள் தாராளமாக அணியலாம்.

மாதர்கள் முகம்மூடி அணிந்தாலும், முகம்திறந்து அணிந்தாலும் அங்க அவயவங்களை புலப்படுத்துகின்ற கவர்ச்சியான இறுக்கமான ஆடைகளை அணிவதும் அவற்றை சந்தைப் படுத்துவதும் தவறாகும்.

அத்தோடு எத்தகைய ஆடைகளை அணிந்தாலும் மஹரம் துணையின்றி பொது இடங்களிலும், பொது போக்கு வரத்துகளிலும் தனித்து அலைந்து திரிவதை கண்டிப்பாக நாம் தவிர்ந்து கொள்ளல்வேண்டும், பொது இடங்களில் இஸ்லாமிய ஆடைகளை அடுத்தவர்கள் தரக்குறைவாக கருதும் வண்ணம் நடந்து கொள்வதும் தவிர்க்கப் படவேண்டிய விடயங்களாகும்.

மாதர்களது ஆடைகள் மாத்திரமன்றி ஆண்களது ஆடைகள் விடயத்திலும் சமூகம் அதிக கரிசனை காட்டுதல் வேண்டும், தமது அங்க அவயவங்களை அச்சொட்டாக காட்டுகின்ற கவர்சிகரமான இறுக்கமான ஆடைகளை ஆண்களும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

பாதுகாப்பு காரணங்களிற்காக பரிசோதனைகள் இடம் பெறின் பெண் அதிகாரிகளின் துணையுடன் நாம் பாதுகாப்பு தரப்பினருக்கு நிபந்தநிகளுடன்கூடிய ஒத்துழைப்பை வழங்கலாம், அதேபோன்றே ஆள் அடையாள அட்டைகளிற்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வதற்காக தமது முகத்திரையை ஓரளவு நகர்த்துவதில் மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை.

நவீன வடிமைப்புகளில் வரும் இடுப்பிற்கு கீழ் வழிந்தோடும், உள்ளாடைகளை அல்லது பின்புறத்தின் ஒரு பகுதியை வெளிக் காட்டும் கேவலமான ஆடைகளை இளைஞர்களும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.
முஸ்லிம் ஆடவருக்கும், மகளிருக்கும் பொருத்தமான தளர்வான ஆடைகளை வடிவமைத்து சந்தைப்படுத்தக் கூடிய தொழில் முனைவர்கள் இன்று அவசியப் படுகின்றனர்.

குறிப்பாக இஸ்லாம் ஏன் ஆடைவிடயத்தில் அதிக கரிசனை செலுத்துகின்றது என்ற அடிப்படை இலக்குகளை மனதில் கொள்வது பல்வேறு கேள்விகளிற்கு பதில்களைத் தரும்.

எமது ஆடைகளும், பண்பாடுகளும் எங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவை சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டும், தீமைகளில் இருந்தும் தீங்குகளில் இருந்தும் எங்கள் தாய்க்குலத்திற்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பை தரவேண்டும், மாறாக அவற்றை மையமாக வைத்து நாமே பிளவுகளையும் பிணக்குகளையும் வன்முறைகளையும் உள்ளிருந்தும் புறமிருந்தும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

மாதர்களின் ஆடைகளில் கரிசனை செலுத்தும் ஒரு சமூகம் மாதர்களுக்கு எதிரான சமூக பொருளாதார கலாச்சார அநீதிகளையும் களைவதற்கு மாநாடுகளை நடத்த வேண்டும், நோய்களிற்குரிய அடிப்படை காரணிகளை கண்டு அவற்றிற்கு நாம் வைத்தியம் செய்ய தவறி விடுகின்றோம்.

உதாரணமாக இஸ்லாமிய ஆடையணிந்து மஹ்ரம் துணையுடன் மாதர் வீட்டைவிட்டு வெளியேறுவதை வலியுறுத்தும் ஒரு சமூகம் தமக்கொரு துணையை விலை கொடுத்து வாங்குவதற்கென வீட்டைவிட்டு வெளியேறி உழைக்கும் நிலையை கடல்கடந்து பயணிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ள சமூக கொடுமைகள் அநீதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கின்றமை தான் ஆச்சர்யமானது.

இஸ்லாத்தை பகுதி பகுதியாக பின்பற்றாது முழுமையான வாழ்வு நெறியாக நாம் எடுத்துக் கொள்கின்ற பொழுது ஏகப்பட்ட பிரச்சினைகளிற்கு தீர்வுகள் கிடைக்கின்றன.

8 comments:

  1. ஓரளவு நடுநிலையான கருத்து. வரவேற்கத்தக்கது.

    ReplyDelete
  2. நமது முஸ்லிம் சமூகம் பென்கலை தொலிலுக்காக வெலி நாடு அனுப்புவதை முற்றிலுமாக தவிர்க்க வேன்றும்

    ReplyDelete
  3. Pretty Good. Unfortunately, these days some ladies are just covering their hair but show their buds. Also, wear very tight clothes showing the dimensions of their breast,hip, waist and legs. This is not allowed. I call these people are fashion Muslims.

    ReplyDelete
  4. Islam muham maraipadai ulagathuku arimugam seyyawilla endral yaru enda madam arimugam saidazu ? nalwali nadanda ummahaathul mumineengal mauthu warayil mugam kaati sahabakkal mun irundargala ? Muslimgal maraipadu weru enda madha thil ulladu ?
    Naangal engaludaya mugam maraikkum pengalai adigam ganniya paduttha palaguwom . Edir kalatthil namazu pengal mugam maraittu selwadarku utchaga padutthuwom . Naam awarglukku padukappalargala iruppom. edir kalam namazu pen pillaigalukku padukappu mugam maraippadil adiga pangu undu !

    ReplyDelete
  5. என்னதான் முழு உடலையும் மறைத்தாலும், பலமான காற்றுக்கு, உடைகள் உடம்பில் ஒட்டும் போது, அங்க வடிவங்கள் வெளியில் தெரியத்தான் செய்கிறது. குறைந்த பட்சம், ஒரு முஸ்லீம் பெண் போகிறாள் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். இதட்கு என்ன செய்யலாம்?

    நுளம்பு வலையின் அமைப்பில், கூடாரங்களுக்கு பாவிக்கும் துணியில், மேல், முன், பின், வலது, இடது பக்கங்கள் மறையும்படி, சதுரமாகவோ, வட்டமாகவோ, ஒரு கூடாரத்தை தைத்துக்கொள்ளலாம். மேல் பக்கத்தின் நடுவில், தலையில் அணியக்கூடிய, தொப்பி வடிவத்தில் ஆக்கிக்கொண்டாள், இதை தலையில் ஒரு தொப்பியைப்போல் அணிந்துகொள்ளலாம். காற்றோட்டம் தேவையென்றால், ஆங்காங்கே சிறு ஓட்டைகளை போட்டுக்கொள்ளலாம்.

    இந்தக் கூடாரம் காற்றுக்கும் அசையாது, உள்ளே இருப்பது என்ன என்றுகூட கண்டு பிடிக்க முடியாது. இதன் பெயரை, அபாய, புர்கா, ஜில்பாப் ஆகியவற்றின் முதல் எழுத்தை எடுத்து, அபுஜி என்று வைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  6. (Saakbish)
    நீங்கள் முதலில் உளவியல் டொக்டர் ஒருவரைச் சந்தித்து அமைதியாக உங்கள் பிரச்சனைகளைச் சொல்லி தீர்வைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அதிகரித்துவிட்டால் குணப்படுத்துவது சிரமம். இப்பொழுதே உங்கள் பிரச்சனை முற்றிவிட்டது போல்தான் தெரிகிறது. காலம் தாழ்த்த வேண்டாம். (உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்.)

    ReplyDelete
  7. Batti Guy,

    உங்களுடைய பெற்றோர்கள் சூட்டிய சொந்தப் பெயரில் உங்கள் கருத்தை எழுதாதட்கு காரணம், ஆண்மைக் குறைவா, ஆளுமைக் குறைவா, அல்லது கோழைத்தனமா என்று எனக்கு தெரியவில்லை. என்னவென்று சரியாக அறிந்துகொள்ள, முதலில் நீங்கள் வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது என்று நினைக்கிறேன்.

    இது உங்களுக்கு மட்டும் இருக்கும் பிரச்சினை அல்ல. ஒருவருடைய கருத்துக்கு எதிர் கருத்து கூர வக்கு இல்லாதவர்கள், தனிப்பட்ட முறையில் அவரை தாக்குவதை சிலர் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். கருத்துக்களோடு கருத்துக்கள் தான் மோதவேண்டும். தனி நபர்களை அல்ல. நீங்கள் முறையாக வளர்ந்திருந்தால், முடிந்தால், என்னுடைய கருத்துக்கு, எதிர் கருத்து ஒன்றை முன்வையுங்கள் பார்க்கலாம்.

    நான் எழுதுவது எமது சமூகத்தின் விழிப்புணர்ச்சிக்காகவே தவிர, இஸ்லாத்தின் பெயரில் மேலும் எமது சமூகத்தை முட்டாள்கள் ஆக்குவதட்காக அல்ல. இது வஹாபிஸம் அல்ல, ஷிஹாபிஸம்.

    I beg your pardon, if I have hurt your feelings.

    ReplyDelete
  8. M.Y.Shihabdeen
    என்னதான் முழு உடலையும் மறைத்தாலும்,................ இதட்கு என்ன செய்யலாம்? என்று நீங்களே கேட்டுவிட்டு, உங்கள் அறிவிற்கும் கற்பனைக்கும் ஏற்ப அபுஜியை வைத்துக் கொள்ளலாம் என்று கூறி இருந்தீர்கள்.
    பெண்கள் ஜில்பாப் அணிவது உங்களுக்கு ஏன் வெறுப்பாக உள்ளது?
    அதற்கு இஸ்லாத்தில் தடை உள்ளதா?
    உங்களுக்கு பெண்கள் புடவை அணிவதுதான் பிடிக்குமா?
    நீங்கள் ஷிஹாபிஸம் என்று சொல்லி இருந்தீர்கள். அப்படியாயின் காபிரான ஷியாவைச் சேர்ந்தவரா நீங்கள்?
    புனைப் பெயரில் நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்கள் அழைக்கப்பட வில்லையா? நான் ஒரு புனைப் பெயரை வைத்தால் உங்களுக்கு ஏன் எரிச்சல்? நீங்கள் கூட Saakbish என்று ஏன் அடைப்புக்குள் போட்டிருக்கிறிர்கள்?
    நானும் எமது சமூகத்தின் விழிப்புணர்ச்சிக்காகவே முயற்சி செய்கிறேன். அல்லாஹ் அந்த நிலையிலே எமது உயிரை கைப்பற்றுவானாக!

    ReplyDelete

Powered by Blogger.