Header Ads



லசந்வின் சடலத்தை தோண்டும்போது, ஆளில்லா விமானத்திற்கு என்னவேலை - தொடருகிறது விசாரணை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்  லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை கடந்த செவ்வாய்க்கிழமை  தோண்டும் போது, அதனை படம் பிடிக்க முற்பட்ட ட்ரோன் கமரா (ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் இயக்கப்படும் கமரா)குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த ட்ரோன் கமரா தொடர்பில் பிரத்தியேக விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக , லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விசாரணைகளுக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் திஸேரா   கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனுக்கு நேற்று அறிவித்தார்.

லசந்தவின் சடலத்தை மீளவும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த தோண்டும் போது, சடலத்தை ஊடகங்களுக்கு காண்பிக்க வேண்டாம் என உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவுக்கு, அவுஸ்திரேலியாவில் இருந்து லசந்தவின் பாரியார் தொலைபேசி ஊடாக கோரிக்கை முன்வைத்திருந்ததார். தமது இரு பிள்ளைகளும் அவற்றை பார்வை இடுவதனூடாக மனதளவில் பாதிக்கப்படுவர் என்பதைக் காரணம் காட்டியே அவர் உதவி பொலிஸ் அத்தியட்சரிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் புகைப்படம் எடுப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என குறிப்பிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா, இதன் போது ட்ரோன் கமரா ஒன்ரூடாக யாரோ ஒருவர் அல்லது ஒரு  குழு புகைப்படங்களை எடுக்க முற்பட்டதாகவும், அது பொலிஸாரால் தடுக்கப்பட்டதாகவும் அது குறித்து பிரத்தியேக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.