Header Ads



இஸ்லாத்தை பற்றிய தப்பபிப்பிராயத்திற்கு, செயல்வடிவில் பதிலளிக்க வேண்டும் - ஜப்பானில் அப்துல்ஹாலிக் மௌலவி

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின்உதவித் தலைவர்களில் ஒருவரும், ஜாமிஆ இப்னு உமர் ஸ்தாபகத் தலைவர் மௌவி அப்துல் ஹாலிக் அவர்களின் ஜும்ஆ பயான் இன்று -16- வெள்ளிக்கிழமை ஜப்பானில் நடைபெற்றது.

ஜப்பான் - யோக்கஹோமா என்ற பகுதியில் அமைந்துள்ள எபீனா பள்ளிவாசலில் பல நூறு இலங்கை முஸ்லிம்களிடையே ஜும்ஆ குத்பா உபதேசத்தில் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வருமாறு,

முஸ்லிம்களாகிய நாம் வணக்க வழிபாடுகளை சீரமைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் உலகம் விரும்பும் சகவாழ்வும் இணக்கப்பாடும் ஏற்படும். 

இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் குறித்தும் தவறான அபிப்பிராயங்கள் இன்று நிலவுகிறது. எனினும் முஸ்லிம்களாகிய நாம் இந்த தவறான புரிதல்களை நீக்க பங்காற்றமுடியும். அதாவது எமது செயல்வடிவம் மூலம் இந்த தப்பான அபிப்பிராயத்திற்கு பதில் வழங்கமுடியும் என்றார்.

அதேவேளை அப்துல் ஹாலிக் மௌலவியின் சிறப்பு பயான் நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) இதே பள்ளிவாசலில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஆண், பெண் இருபாலாரும் இதில் கலந்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


1 comment:

Powered by Blogger.