September 05, 2016

றிசாத் பதியுதீன், றீல் விடுகிறார் - ஹரீஸ்


(அகமட் எஸ். முகைடீன், ஹசீப் யாசீன்)

விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட பொழுது அன்று பாராளுமன்றத்தை பகிஷ்கரித்து அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் நானும் நண்பன் மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலும் என்பது நாடறிந்த வரலாறாகும். இந்த வரலாற்றை திரிவுபடுத்தி தான் பாராளுமன்றத்தை பகிஷ்கரித்து போர்க்கொடி தூக்கியதாக அமைச்சர் றிசாட் கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் நேர்மையற்ற முறையில் பேசி தனது வீர தீர செயலுக்கு பதிவு வைத்துள்ளமை அவரின் அரசியல் கையாலாகாத்தனத்தை  காட்டுகிறது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சினூடாக கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு  கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இன்று சில சகோதரர்கள் இப்பிராந்திய அரசியல் ஸ்திர தன்மையை சீர் குலைப்பதற்காக செயற்படுகின்றனர். சீசன் வியாபாரிகள் போன்று இங்குவந்து மேடை போட்டு உளறி மக்களின்  ஒற்றுமையை குலைக்கும் நடவடிக்கை தொடர்பில் ஒவ்வொருவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் உண்மைக்கு புறம்பாக பழைய வரலாறுகளை மறைத்துப் பேசுகிறனர். 

கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில்; அன்று விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட பொழுது றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அன்று ஆட்சிப் பங்காளிகளாக இருந்தபோது இவர்கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரித்து போர்க்கொடி தூக்கியதாக நேர்மையற்ற முறையில் பேசியிருக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு அரசு சாதகமாக நடக்கின்றது, அவர்களுடைய விடயங்களை ஆதரித்து செயற்படுகின்றது, முஸ்லிம்கள் வடகிழக்கில் கொல்லப்படுகின்றார்கள், அனாதையாக்கப் படுகின்றார்கள் என்பதற்காக 2002ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் ஒரு இளவயது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தேன்.

பல விடயங்களில் அரசு எங்களுக்கு அனுசரணையாக இருந்த போதும் முதல் முதலாக இதை ஒரு தேசிய பிரச்சினையாக மாற்ற வேண்டும் என்பதற்காக வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான அழுத்தத்தை கொடுக்க பாராளுமன்ற பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு இறைவன் எண்ணத்தை தந்தான். அப்போராட்டத்தை ஆரம்பிப்பதற்காக நண்பன் மர்ஹும் அன்வர் இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து பேசி இருவரும் இரண்டு நாட்கள் பாராளுமன்ற பகிஷ்கரிப்பை மேற்கொண்டோம். இதற்கு மக்கள் அமோக ஆதரவை தெரிவிக்கின்றனர் என்பதை ஏனையவர்கள் அறிந்து கொண்டார்கள். அதன் பின்புதான் அன்றிருந்த அமைச்சர் அதாவுல்லா அதேபோன்று றிசாட் பதியுதீன் மற்றும் ஏனைய ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்களுடன் இணைந்தார்கள். இது ஒரு வரலாறு, இதை யாரும் மறைத்துப்பேச முடியாது. ஆனால் அமைச்சர் றிசாட் தமக்குச் சாதமாக வரலாற்றை மாற்றி கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் தான் முன்னின்றி பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்பு செய்ததாக வாய் வீராப்பு பேசியுள்ளார்.

கடந்த மஹிந்த அரசாங்கத்தில் பொதுபல சேனா அமைப்பினர் அமைச்சர் றிசாட்டின் அமைச்சுக்குள் பலவந்தமாக புகுந்து அமைச்சர் றிசாட்டுக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்தனர். இதற்கு எதிராக கிளர்ந்தெழாமல் மஹிந்த அரசாங்கத்தில் கைகட்டி, வாய் மூடி மௌனியாக இருந்தார். தனக்கு இடம்பெற்ற இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க முடியாமல், பதவி விலக தைரியமில்லாத றிசாட், இந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படுமானால் தான் பதவி விலகி அரசுக்கு எதிராக செயற்படுவேன் என்று வீர வசனம் பேசியதை நம்பி ஏமாற கல்முனை மக்கள் அரசியல் தெரியாத முட்டாள்களல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

2 கருத்துரைகள்:

This is a fight of DECEPTION between the SLMC and the ACMC (Minister Rishad and Deputy Minister Harees) to attract the voters of the “pamaramakkal” of Kalmunai. There is a sense of truth in what Deputy Minister Harees says, but it does not mean that that he is not deceptive. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money. Look at the news revealing the Rice Imports scandal after The Ministry of Industries and Commerce extending the LC’s for import the validity of the letters of credit opened by former Minister Johnston had expired on the 10th of January 2015. It is reported that SATHOSA extended this Letter of Credit and imported more rice under the “Yahapalana” government. On 10th February 2015 the Lanka Sathosa had been instructed to import 8104 metric tons of Ponni Samba (GR11).This instruction had been given on the 12th January by the Minister of trade and industries Rishard Badiurdeen appointed by the government during the 100 day government. It is suspected that this is the rice that has been stored for long and then sold at Rs. 38/= a kilo under the pretext of “unfit for human consumption” for animal feed, buy rumoured that this stock has reached selected Rice Millers who have polished it and sold it to rice wholesale dealers in the open market. The total quantity thus sold is 85,000 metric tons (http://lankanewsweb.net/news/item/4040-rishard-educates-with-a-technique-to-consume-an-enhanced-meal-from-rice) – 05.09.2016.The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. NOW TEY HAVE STARTED TO FIGHT TO MISLEAD THE “appavimakkal” in the East and GATHER the votes for the forthcoming local government elections to show their strength so that they can make “POLITICAL DEALS” with Ranil or Mathripala Sirisena and or interestingly with the “JOINT OPPOSITION TOO (Mahindapela). It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

மொத்ததில முஸ்லீம்கள் புலிகளால் விரட்டியடிக்கும் பொழுது அங்கு யாருமே ஒன்றும் கிளிக்கவில்லை இப்பொழுதும் முஸ்லீம் காங்கிரஸ் TNA யுடன் இனைந்து கொன்டு யாருக்கு ஆப்படிக்கலாம் என்று நினைத்துக் கொண்டுள்ளனர் முஸ்லீம்களுக்கு சேவையை முதலில்
செய்யுங்கள் கிழக்கு மாகாணத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட
வீடுகளை எடுத்து மக்களிடம் ஒப்படையுங்கள் அதுக்கப்புரம் வீர வசனம் பேசலாம்,

Post a Comment