Header Ads



ஜனாதிபதியின் இணையத்தை தாக்கிய மாணவர், பொலிஸ் இணையம் மீதும் தாக்குதல்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்ட பாடசாலை மாணவர், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்தமை குறித்த விசாரணைகளின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னதாக இந்த மாணவர் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கும் வகையில் ஓர் இலச்சினையை இணையத்தளத்தில் போடுவதற்கு முயற்சித்துள்ளார்.

எனினும், அந்த இலச்சினை இணையத்தளத்தில் காட்சியாகியிருக்கவில்லை. அதன் பின்னர் அவர் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவில்லை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் இணையத்தளத்திற்குள் ஊடுருவியமை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே பொலிஸ் இணையத்தளத்திற்குள் ஊடுருவியமை பற்றியும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்தமைக்காக கைது செய்யப்பட்ட மாணவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த மாணவருடன் கைதான மற்றுமொரு நபரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. சாதாரணமாக யோசிக்க வேண்டும் இவர் சைபர் தாக்கம் செய்வதற்கு போலிஸ் திணைக்களமும் ஜனாதிபதியின் இணையமும் தான் தேர்ந்தடுக்க வேண்டுமா இதில் ஏதாவது அரசியல் உள்நோக்கங்கள் இருக்கலாம் காரணம் தற்போது இந்த அரசாங்கத்தை எப்படியாவது கவுட்டு விட வேண்டும் என்றொரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பல வகையிலும் யோசிக்க வேண்டும்.அதே வேலை இதை ஒரு தமிழ் மாணவன் /முஸ்லிம் மாணவன் செய்து இருந்தால் இந்த நாட்டில் என்ன நடந்து இருக்கும்.ஓன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள்,பெரும் பதவி கொடுக்க சொல்வார்களா அல்லது புலிகள் உருவாகிவிட்டார்கள் அல்லது isis அல்கைதா இலங்கையில் உருவாகிவிட்டார்கள்.அரசாங்கம் தூங்கிக்கொண்டு இருக்கிறது என்று பத்திரிக்கை மாகா நாடு இரவு பகலாக கடத்துவார்கள்.

    ReplyDelete
  2. நீங்கள் இறுதியில் கூறிய விடயம் 100% உண்மை...!

    ReplyDelete
  3. I advice the President not to punish or leave this student free Rather utilize him for the development projects of the country and the governemtn.

    If released and made him free, there will be enough groups who will try to utilize him for wrong doings.

    ReplyDelete

Powered by Blogger.