Header Ads



இஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: சிரிய ராணுவம் தகவல்

இஸ்ரேல் நாட்டின் போர் விமானம் மற்றும் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரின்போது சில சமயங்களில் ராக்கெட் குண்டுகள் அண்டை நாடான இஸ்ரேல் நாட்டிற்குள் விழுவது வழக்கம். அப்போதெல்லாம் இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்படுகிறது. அவ்வகையில், நேற்று சிரிய ராணுவம் ஏவிய மோர்ட்டார் ரக குண்டு, இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றின் மீது விழுந்தது. இதையடுத்து இஸ்ரேல் விமானப்படை, சிரிய ராணுவத்தின் பீரங்கி நிலைகளை தாக்கியது. 

இவ்வாறு தாக்குதல் நடத்த வந்த இஸ்ரேல் நாட்டு போர் விமானம் மற்றும் ஒரு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது. போர் விமானம் குனைத்ரா நகருக்கு மேலே பறந்தபோது சுட்டு வீழ்த்தியதாகவும், ஆளில்லா விமானம் டமாஸ்கஸ் நகரை நெருங்கி வந்தபோது வீழ்த்தப்பட்டதாகவும் அரசு செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த தகவலை இஸ்ரேல் பாதுகாப்பு படை மறுத்துள்ளது. ‘சிரியாவின் பீரங்கி நிலைகளை நேற்று இரவில் தாக்கியபோது சிரிய ராணுவம் ஏவுகணைகளை வீசி பதில் தாக்குதல் நடத்தியது. ஆனால், நாங்கள் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்திய விமானத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை’ என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.