September 26, 2016

முஸ்லிம்களின் பூர்வீகம், தமிழர்களின் வரலாற்றினைவிட பழமை வாய்ந்தது..!

-SM சபீஸ்- 

வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற கோசத்துக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.

தமிழர்கள் எவ்வாறு வந்தேறுகுடிகள் இல்லாமல் இலங்கையின்  பூர்வீகக் குடிகளில் ஒரு அங்கத்தவர் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை முஸ்லிம்களும் இந்நாட்டின் பூர்வீக மக்கள் என்பதனை வடக்கு முதலமைச்சர் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலமைச்சரின் உரையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதனை சிங்கள சமூகம் நிருபித்தால் வடகிழக்கு இணைப்பை நான் கைவிடுகிறேன் என அறைகூவல் விடுக்கின்றார், இதன்மூலம் கிழக்கு மாகாணம்  தமிழர்களுக்கு சொந்தமானது என்றும்  வந்தேறு குடிகளான முஸ்லிம்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது எனவும்  மறைமுகமாக சொல்லி வைக்கின்றார்.

வடக்கு முதலமைச்சர் வரலாறு பேசுவதற்கு தகுதியானவரா? என்பது எனது கேள்வியாகும், ஏனென்றால் விக்னேஸ்வரனும் அவரைப்போன்று வரலாறுகளை நுனிப்புல் மேய்ந்த ஒருசில தமிழ் தலைமைகளும் முஸ்லிம்கள் தமிழ் பேசுகின்றார்கள், இஸ்லாமிய  மதம் கி பி 8ம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கிறது, ஆகவே வர்த்தக நோக்கில்  வந்த அரபியர்கள் தமிழ் பெண்களை திருமணம் முடித்ததன் விளைவாக முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றும் அதன்விளைவாக  தமிழ் பேசுகின்றார்கள் என்றும் எண்ணுகின்றனர், இதுதான் இவர்களது அறியாமையாகும்.

இலங்கையில் சோனகர் சமூகம் என்பது சைவமததுக்கு முந்திய வரலாறுகளை கொண்டுள்ளது என்பதனை வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள். (சோனகர்கள் மலே, மேமன்,போறா என்று பிரிந்திருப்பதனை தடுப்பதற்கு முஸ்லிம்கள் என்ற சொல்பிரயோகதுக்குள் ஒன்று சேர்த்தார்கள் )இந்தியாவின் ஒரிசா பகுதிகளில் இருந்து இலங்கைக்குள் வந்த திராவிடர்கள் பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் வரி செலுத்தும் முறை கொண்டுவரப்பட்ட பின்னரே சைவ மதத்தினராக அடையாளம் காணப்பட்டனர், ஆகவே சோனகர் சமூகம் சைவ மதத்துக்கும் முந்திய வரலாற்று பூர்வீகத்தைக்கொண்டுள்ளது.

அதேபோன்று சோனகர்கள் தமிழ் பேசுவதற்கு காரணம் தமிழக பகுதிகளில் வாழ்ந்த சோனகர்கள்  சங்கிலிய மன்னனின் கொடுங்கோலின் காரணமாக இலங்கைக்குள் குடிபெயர்கின்றபோது இங்குவாழ்ந்த சோனக உறவுகளோடு உரையாற்றுவதற்கான மொழியாக தமிழை மாற்றிக்கொண்டனர். இவ்விடத்தில் வரலாற்று ஆசிரியர்கள் ஒன்றை குறிப்பிடுகின்றார்கள் வடகிழக்கில் வாழ்ந்த தமிழ் பெண்களை வியாபாரத்துக்காக வந்த அரபியர்கள் திருமணம் முடித்தமையால் அவர்களது சந்ததிகள் தமிழ் பேசுகின்றார்கள் என்று திரிவுபடுத்தி கூற முற்படுகின்றனர், அப்படியானால் வடகிழக்குக்கு வெளியில் வாழுகின்ற 3/2 பங்கு முஸ்லிம் சமூகம் எவ்வாறு தமிழ் பேசக் கற்றுக்கொண்டது எனும் சிந்தனை இவர்களுக்கு எழாதது ஏன்? ஆகவே சோனகர்கள் எல்லோரும் தகவல் பரிமாறும் மொழியாக தமிழை தமிழ் இராஜ்ஜியம்  இலங்கைக்குள் உருவாவதற்கு  முன்னே பேசுகின்றனர் என்பது புலனாகிறது ஆனால் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த சோனகர்கள் அர்வி என்ற மொழியை பாவனையில் கொண்டிருந்ததாகவும் ஒல்லாந்தர் படை எடுப்பின் பின் அர்வி மொழியை அவர்கள் அழித்துவிட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இஸ்லாம் மதம் கி பி 8ம் நூற்றாண்டுக்குப்பின்னர் வந்தாலும் சோனகர் சமூகம் சைவ மதத்தை பின்பற்றும் தமிழர்களுக்கு முந்திய வரலாறுகளை கொண்டது என்பதனை இப்போதுள்ள தலைமைகள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஏனென்றால் இஸ்லாம் பரவுவதற்கு முன்னால்  அரபியர்கள் அரபியர்கள்தான் சீனர்கள் சீனர்கள்தான் ஆனால் அவர்களது மதம் மாறியுள்ளது அந்நிய படைஎடுப்புக்களின்மூலம் மதம் மாற்றமடைந்ததும் நன்னடைதைகள்மூலம் மதம் மாறிய சந்தர்ப்பங்களும் வரலாறுகளில் அதிகம் காணப்படுகிறது

உதாரணமாக முக்குவர் குலத்தை சேர்ந்த சமூகத்தினர் அந்நிய படையெடுப்பில் தமது பெண்களை பாதுகாத்து கொடுத்தமையை இட்டும் சோனகர்களின் நன்னடத்தையின் பொருட்டும் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களாக மாறிய வரலாறுகள் இன்றும் சான்றாக உள்ளன இம்மக்கள் தற்போது புத்தளப்பகுதிகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்

குறிப்பாக ஜப்னா மாவட்டத்தில் காணப்படும் நைனா தீவில் பின்பற்றப்பட்டுவந்த நாகவளிபாடு உலகில் நைனா தீவுக்கு அடுத்ததாக இன்னுமொரு நாட்டில்தான் காணப்படுகிறது. இந்த வரலாற்றை விக்னேஸ்வரன் தேடி அறிந்தால் சோனகர்கள் யார் என்பதனை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

ஆகவே விக்னேஸ்வரன் வரலாறுகளை தெரிந்து கொள்வதன்மூலம் கிழக்கு வடக்கோடு இணைய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட வேண்டும் என்பதனை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம் 

41 கருத்துரைகள்:

At ajan antoneyraj! It's clearly showing that how you are short minded. Anyhow, Mr. Ajan. Why we should not unite as Sri Lankans? Why we need to speak always our history and heritages to argue with others to undertimate a community? Why your vikneshvaran stated such words? Why tamilians always short minded. Pls come let's begin the world with peace,love, harmony and justice for every human being on our Mother Earth. And give respect to other community in order to get respect to your community. And don't bother to fight always for an unsoul language. Language doesn't have soul so why the people's should die and argue for the silly languages. Is important a soul better then a language right? Think and have positive mind.

why don't muslim gt out of this tamil language and get in touch with English nd sinhaĺa

ஐயய்யோ!!
முத்திடிச்சி..பாவம் இவங்கள்..
உண்மையில் தமது தலைமைகள் தறிகெட்டு அலைவதால் தமிழ்தலைமைகள் மேல்காள் புணர்சியீல் திரிகின்றனர்.
முஸ்லீம்கள் நாகத்தை வழி படுகின்றனரா ஹிஹி..ஹிஹி
நயினை தீவு நெய்னா தீவானதா...
தமிழர்கள்குறித்து கேட்டால் சைவம் பற்றி பிதட்டுகிறான்,
ஆதீதமிழர் பிரிவில் ஒரு பிரிவினரான நாகர் நாகர் வாழ்ந்தஇடமே நைனை தீவு.

என்னது
"எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்மோ "ஹீ..ஹீ
BOSS WE WANT MORE EMOTION PLEASE..HE..HE

Good motivation. I appreciate.

முதலில் ஜெருசலேமை தமது என்றார்கள்,சிந்துவெளி தமது என்றனர்,இமயமலைதமதுஎன்றனர்,அயோத்தி தமது என்றனர்,சிவனோளிபாதமலை தமது என்றனர்ர்,இப்போது நயினை தமது என்கிறார் இந்ந அறிவாளி.
கறுப்புகண்ணடீ அணிந்து கொண்டு பர்கும் எல்லா பொருளையும்கறுப்பு என்பது போல இஸ்லாம் கண்ணாடீயால் பார்த்து எல்லாம் தமது என்கின்றனர்.

தமிழன் வந்தேறி என்றும் நாட்டை பிரித்துக் கேட்கிறார்கள் என்றும் சந்திரிகா அம்மையார் தென்னாப்பிரிக்காவில் சொன்னதாக நினைவு.

உண்மைதான், தமிழன் வந்தேறிதான்.

நல்ல கற்பனை சக்தி உங்களுக்கு.முயற்சித்தால் நல்ல கதாசிரியர்ஆகலாம்.(இது பேன்ற ககாமடி கதைகள் அடிக்கடி எழுதுங்கள்)

Then they will mention you Sinhalese not Muslims. Think both advantages and disadvantages

மாற்று சமுதாயங்களை வந்தேறி வந்தேறி என்று காழ்ப்புணர்வை கொட்டி தீர்த்துக்கொண்டே இன்று சொந்த மண்ணில் கூட வாழ முடியாமல் தவிக்கிறான் முட்டாள் தமிழன். பிற சமுதாயங்களோடு ஒன்றி வாழ பழகுங்கடா

At kumar kumaran! Some of our politicians better then yours. You can read them in the history what they have done to our society as performing unity of our country. Why you are frustrate yourself behaving like a rude. Small example for your info" for exmple you have five siblings in your family and after some days 3 of them converted to other religions. Now, can you tell to that siblings to move away from you family or can you Expel them from your land which theirs too? YOU CANNOT. Because they will always represent your generation and thier land but only deference is religion and community. So, in this case your people's cannot own a land which is mine too. Any body can live anywhere that is human rights. Your people's always behaving like Devils to drink innocents blood.

Kumar Kumaran
நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களைப் படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:1)

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்; நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.(அல்-குர்ஆன் 4:131)

அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.(அல்-குர்ஆன் 6:73)

நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ - அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான். நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள்: “(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். “எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.(அல்-குர்ஆன் 10:7-10)

விஷக் கிருமி விக்கி மாமா கற்பனையில் உளறுகிறான்.

இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவர்கள் அதிகம் தெற்கிலும், தமிழர்கள் அதிகம் வடக்கு, கிழக்கிலும் வாழ்ந்து வருகின்றனர். வரலாற்று நெடுகிலும் இவ்விரு சமூகத்தின் பரம்பலும் இவ்வாறே காணப்பட்டு வருகின்றது. ஆனால் முஸ்லிம்கள் மட்டும்தான் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நாட்டின் சகல பாகங்களிலும், பிரதேசங்களிலும் வரலாற்றுக் காலம் தொட்டே வாழ்ந்து வருபவர்களாக இருக்கின்றனர். வடக்கு, கிழக்கில் தமிழர்கள் ஒருபோதுமே வாழ்ந்திராத பிரதேசங்களிலும் அதேபோல் தெற்கில் சிங்களவர்கள் ஒருபோதுமே வாழந்திராத பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் மட்டுமே நூறு வீதமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு நாட்டின் பூர்வீக குடிகள்தான் நாட்டின் சகல பாகங்களிலும் பரந்து வாழக் கூடியவர்கள். மாறாக குடியேரியவர்கள் குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே தமக்கான வாழிடங்களை அமைத்து வாழ்பவர்களாக இருப்பார்கள். எனவே இலங்கை முஸ்லிம்கள் ஆதிகாலம்(ஆதம்நபிகாலம்) தொட்டே இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்ற உறுதியான முடிவுக்கு வரமுடியும்

இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் தொன்மையானது என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்

உலகில் தோன்றிய முதல் மனிதனான ஆதம்(அலை) இலங்கைத் தீவிலேயே தோன்றியதாக பிரபலமான வரலாற்று ஆசிரியரான “அத்தபரி” அவர்கள் தனது நூலின் 130வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் ஆதம்(அலை) இறங்கிய இடம் பூஸ் எனும் மலையின் உச்சி என வரலாற்று ஆசிரியர் இப்னு அதீர் குறிப்பிடுள்ளார். மேலும் அவர் இம்மலை ராஹூன் என்ற மாகாணத்தில் இருப்பதாக கூறுகின்றார். இது இலங்கையின் ருஹூனு ரட்டையினைக் குறிக்கின்றது.

இந்தியாவின் மிகப்புராதன பெயர்களில் ஒன்று பாரதம் என்பதாகும். இது பார்-ஆதம் என்ற இரு சொற்களின் புணர்ச்சியாகும். அதன்படி உலகின் தொடக்கத்தில் இன்றைய இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இணைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“உலகில் சிறந்த பூமி நபி ஆதம்(அலை) இறக்கப்பட்ட இடமாகும்” “இந்தியாவின் தென் திசைப் பகுதியிலிருந்து, ஆதி இஸ்லாத்தின் தென்றலை நான் நுகர்கிறேன் என்று நபி(ஸல்) கூறினார்கள்” இது போன்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று இதை இன்னும் உறுதிப்படுத்துவதாய் அமைகின்றது. (கண்டி மாவட்ட முஸ்லிம்கள் பக்கம்4-11)

பாவாத மலையில் உள்ள பாதச் சுவடானது 5அடி நீளமான வலது பக்க பாதத்தின் அடையாளமாகக் காணப்படுகின்றது. இது ஆதி மனிதர்கள் பிரமாண்டமான தோற்றத்தை உடையவர்களாக இருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இதனடிப்படையில் இலங்கையின் பலபாகங்களிலும் அமையப் பெற்றுள்ள கப்றுகளில் உலகில் எங்குமே காணப்படாத 40, 30, 20, 10அடிகள் அளவுகளை உடைய கப்றுகள் காணப்படுகின்றமை ஆதாரபூர்வமாக நிறுபிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரமே இறந்தவர்களின் உடலைப் புதைக்கும் பழக்கம் உடையவர்கள். நாடெங்கிலும் காணப்படுகின்ற நீளமான கப்றுகள் தற்போதைய முஸ்லிம்களின் கப்றுகளை ஒத்திருப்பதோடு இம்முறையை இலங்கை முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பின்பற்றிவருவதானது அவர்களின் தொன்மையை உறுதிப்படுத்துகின்றது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான ஈமத்தாழிகள் “பொம்பரிப்பில்” கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈமத்தாழிகள் என்பது இறந்தவர்களை புதைப்பதற்காக புராதன மக்கள் பயன்படுத்திய புதைகுழிகளாகும்.

“பின்னர் பூமியை தோண்டக் கூடிய ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான்- அவருடைய சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குகாண்பிப்பதற்காக (அது பூமியில் தோண்டிற்று அதனைப்பார்த்து) என்னுடைய பரிதாபமே! இந்த காக்ததைப் போன்று நான் ஆவதற்கும் என் சகோதரரின் பிரேதத்தை (மண்ணில்) மறைப்பதற்கும் இயலாதவனாகிவிட்டேனே! என்று (பிரலாபித்து) அவர் கூறினார், கைசேதப்படுபவர்களில் ஒருவராக அவர் ஆகிவிட்டார்.-(அல்-குர்ஆன்5:31) இந்த குர்ஆன் வசனமானது முஸ்லிம்கள் இறந்தவர்களை எவ்வாறு அடக்கம் செய்யவேண்டும் (அதாவது இறந்தவர்களின் உடலை மண்ணைத் தோண்டி புதைக்க வேண்டும்) என்பதை உலகின் முதல் மனிதனான ஆதம்(அலை) அவர்களின் மகனுக்கு கற்றுக்கொடுத்ததைக கூறுகின்றது. இதன் மூலம் இலங்கை முஸ்லிம்களின் தொன்மை இன்னும் வலுப்படுத்தப்படுகின்றது.

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மிகமுக்கிய நூலான மகாவம்சம் இலங்கையில் வாழ்ந்த ஆரம்ப சமூகங்களான இயக்கர், நாகர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இவர்களில் ஒரு பிரிவான நாகர் ஓர் இறைக் கொள்கை(தௌஹீத்) உடையவர்களாக வாழ்ந்துள்ளார்கள். இவர்கள் முஸ்லிம்கள் என்பதை ஏ.பி.எம். இத்ரீஸ்(நளீமி) அவர்கள் தனது சோனக தேசம் பற்றிய குறிப்புக்களில் நிறுவுகின்றார்.

இந்த நாகருக்கு இலங்கையில் கரையோரப்பகுதியிலும், உள்நாட்டிலும் நாவாய்கள் இருந்ததாக பேராசிரியர் கணபதி பிள்ளை கூறுகின்றார்.

அந்தவகையில் தமிழ் நாட்டின் அரசாங்கத்தின் கீழ்நாட்டு பழஞ்சுவடி நூல் நிலையம் ஒன்றில் வடமொழியில் நௌகா சாஸ்திரம் என்றதொரு கப்பல் நூல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பலை தமிழ் நாவாய் என்கிறது. அதேவேலை ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் கப்பலை நாவ் என்கிறது. ஆங்கிலம் கப்பல் படையை நேவி என்கிறது. இதில் தமிழ் மொழி மட்டுமே நாவாய் என்பதை அயல் மொழி என்று கூறாது சொந்தம் கொண்டாடுகிறது. நாவாய் என்பதற்கும் நோவா (நூஹ்நபி) என்பதற்கும் தொடர்பு இருக்கின்றது. நோவா or நூஹ்(அலை) அவர்களே உலகில் முதன் முதலாக பெரிய கப்பலை or நாவாய் கட்டியவர் அவர் பெயரிலிருந்தே கப்பலுக்கு பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். எனவேதான் இலங்கையில் வாழ்ந்த நாகர் நூஹ்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களான முஸ்லிம்களாக இருக்கவேண்டும். இவ்வாறு நபி ஆதம்(அலை) அவர்களின் பத்து தலைமுறையினர் இலங்கையிலும், இந்தியாவிலும், அழிந்துபோன குமரிக்கண்டத்திலும் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன.

“ஆரியர்கள் இலங்கைக்கு வருகைதருகின்ற, போதிருந்த வேடுவர்களுடன் சேர்ந்திருந்த வரலாற்றை உடையவர்களே அரபிகள். இவர்கள் இலங்கையின் ஆதிக்குடிகள்” என சுவடித் திணைக்கள ஆணையாளர் கலாநிதி பாலேந்திரா குறிப்பிடுகிறார்.
இலங்கையின் வரலாற்றைக் கூறும் தொன்மை நூலான மகாவம்சம் மூதாதயரை (பண்டைய முஸ்லிம்களை) “யோனர்” என்று குறிப்பிடுவதுடன் பண்டுகாபய மன்னன்(கி.மு. 377-307) அநுராதபுர நகரத்தை அமைத்தபோது அதன் மேற்குப்புற வாசலருகே யோனர்களுக்கு நிலத்தை ஒதுக்கினார் எனவும் குறிப்பிடுகின்றது-(மகாவம்சம் அத்தியாயம் X பகுதி9- கெய்கர் மொழி பெயர்ப்பு பக்கம்74)

அதேவேலை இலங்கையின் புராதன சிங்களக் காவியங்களிலும் “யோனக” என்றபதம் கையாளப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

கி.மு 377இல் (பண்டுகாபயன் மன்னன் காலம் கி.மு377–307) தலைநகர் அநுராதபுரத்தில் அரேபியருக்கென தனியான வீடுகள் காணப்பட்டன - (அந்திரியஸ் நெல்)
கிரேக்க தளபதியான “ஒனாசிக் கிரீட்டஸ் ”கி.மு 327இல் வரையப்பட்ட பூகோளப்படத்தில் மன்னார், புத்தளம் பகுதிகளில் அரபுக் குடியிருப்புக்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
The History of Commerce in Indian என்ற நூலில் பேராசிரியர் சிறி கந்தையா “நபியவர்கள் வேதத்தை அறிமுகம் செய்ய முன்னர் மிக நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவின் மேற்குப்பகுதிக்கும் அரபுநாடுகளுக்கும் இடையிலான வியாபாரத் தொடர்புகள் விரிந்தளவில் இடம் பெற்றன” என்கிறார்.
கிறிஸ்தவ ஆண்டு தொடங்க முன்னரே அரேபியர் இலங்கையில் குடிகளாக வாழ்ந்தனர்.-(பிளினி)
கி.மு. 4ம் நூற்றாண்டளவில் தென்மேற்கு ஆசியாவின் பெரும் நிலப்பரப்பை ஆண்டு வந்த மாமன்னர் சுலைமான்(அலை) அவர்களது ஆட்சிக்காலத்தில் அவரது மனைவி பல்கீஸ் அவர்களுக்கு இலங்கையின் பெறுமதியான இரத்தினக் கற்களும், முத்துக்களும் அன்பளிப்பாகக் கிடைத்ததென்ற வரலாற்றுச் சம்பவங்கள் மரபு வழிக்கதைகளாக சில அரபு நூல்களில் காணக்கிடைக்கின்றன. இவரது ஆட்சிக் காலத்திலேயே இலங்கை, அரேபியர்களிடையே பிரபல்யம் பெற்றிருந்தமையை இதன்மூலம் ஊகிக்கலாம்.
அரேபியர்களின் கடல்கடந்த வணிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் கிரேக்கர்களுக்கு முன்னரேயே தொடங்கியிருந்தது. கிரேக்கர்கள் இந்தியாவை அறிய முன்னர் அரேபியர் அதனை அறிந்திருந்ததுடன் வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்திய மாலுமியான ரிப்லஸ் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார். பருவக்காற்றைப் பயன்படுத்தும் அறிவை மட்டுமன்றி துணிவையும் அவர்கள் கொண்டிருந்தனர் என்று Tennant Emarson (1859) குறிப்பிடுகிறார்.
ஏற்கனவே சிற்சில மரபு வழிக் கட்டுப்பாடுகளுடன் இந்தியத் துணைக்கண்டத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த அரேபியர்கள் ரோமானியப் பேரரசின் சரிவைத் தொடர்ந்து துறைமுக வணிகத்தில் முழு ஆதிக்கம் பெற்றனர். தென்கிழக்காசியாவின் வர்த்தகம் அரேபியர்களின் தனியுரிமை என்று கூறுமளவுக்கு அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. கி.பி. 4ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு முற்றாக வீழ்ந்ததனாலும், அக்கால இந்தியாவின் கடல் மார்க்க வர்த்தகத்தில் பங்கு கொள்ளாததாலும் தென் அரேபியரும் பாரசீகருமே துணைக்கண்டத்துடனான வர்த்தகத்தில் செல்வாக்குச் செலுத்தினர் என்று R.E. Mille என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.
இக்கருத்தை Tennant Emarson தனது இலங்கை என்ற நூலில் “அரேபியர்கள் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் மங்களூர், கள்ளிக்கோடு, கொல்லம், காயல்பட்டணம் போன்ற நகரங்களிலும், மலபாரின் ஏனைய துறைமுகங்களிலும் தமது வர்த்தகத்தை நிலைப்படுத்திக்கொண்டனர். ஏற்கனவே இலங்கையில் குடியேறியிருந்த தமது சந்ததிகளுடனும் அவர்கள் தொடர்பாடல்களைப் பேணினர்” என்று குறிப்பிடுகின்றார்.

கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இலங்கைத் துறைமுகங்களுக்கு அரேபிய வணிகர்கள் அடிக்கடி வந்து போயினர் என The Periplus of the Erythrian Sea என்னும் கிரேக்க வர்த்தகக் கைநூல் குறிப்பிடுகின்றது.

பிலைனிங் (கி.பி.1), ஓனர்ஸ் கிரிட்டஸ் (கி.பி.3), இன்டிகோபிரிஸ்டர்ஸ் (கி.பி. 6) ஆகியோர் தமது கிறிஸ்தவ விவரண நூல்களிலும் அக்கால இலங்கைத் துறைமுகங்களில் அரேபியர் பெற்றிருந்த வணிகச் செல்வாக்கினை உறுதிசெய்கின்றனர்.
கி.பி. 3ம் நூற்றாண்டின் முடிவிலிருந்து ரோமர்களின் செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது.

“கடலாதிக்கத்தில் உரோமர்களை வென்ற அரேபியர்கள் கி.பி 2ம் நூற்றாண்டு காலப்பகுதியில், இலங்கையுடனான வர்த்தகத் தொடர்புகள் முழுவதையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். கிறிஸ்தவயுகத்தின் 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையுடனான சீன வர்த்தகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும், 8ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் துறைமுகப் பகுதிகளில் கணிசமான அரபிகள் குடியிருந்தனர்” என்று Tomas Arniod தனது Preaching Of Islam எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலியக்கால அரபுக் கவிஞர் இம்ராஉல் கைஸ் இப்னு ஹஜர் என்பவரின் கவிதைகளிலும் இலங்கைக்கும் அரபுலகிற்கும் இடையில் நிலவிய உறவுகளை சூட்சுமமாக வெளிப்படுத்துகிறார். (இவரது கவிதைகள் 1837ல் முதன் முதலாக மிஸ்யம் என்பவரால் பாரிஸ் நகரில் பதிப்பிக்கப்பட்டது.) இவரது தீவானின் மூன்றாவது கவிதையில் “பில்பில்சு” என்ற வார்த்தையும் இன்னொரு கவிதையில் “கரன்புல்சு ”என்றும் வருகிறது. பில்பில் என்பது மிளகாயைக் குறிக்கிறது. இது அரபு நாட்டில் உற்பத்தியாகாத ஒரு பொருள். அதே வேளை கரன்புல் என்பது கராம்பைக் குறிக்கும் சொல். ஆனால் இது அடிப்படையில் ஓர் அரபு மொழிச் சொல்ல்ல. கீழைத்தேய நாடுகளுடன் குறிப்பாக இலங்கையுடன் அரேபியர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை இச்சொற்கள் காட்டுவதாக இம்ராஉல் கைஸின் கவிதைகளை ஆராய்ந்தவர்கள் அபிப்பிராயப் படுகின்றனர்.

கி.பி. 150ல் கிளோடியஸ் தொலமியால் வரையப்பட்ட உலக வரைபடமே உலகின் மிகப்பழமையான வரைபடமாக கருதப்படுகின்றது. இதில் இலங்கையையும் அவர் உள்ளடக்கியதாகவே அந்த வரைபடத்தை வரைந்திருந்தார். அதில் இலங்கையை தப்ரப்பேன் என்றழைக்கும் தொலமி இலங்கையின் மிகப்பெரும் ஆறுகளுள் ஒன்றான மகாவலி கங்கையை “பாசில்பலூசியஸ்” (பாரசீகநதி) என்றும், ஜின் கங்கையை “அஸனாக்பலூலியஸ்” (எதியோபிய நதி) என்றும், தெதுரு ஓயாவை “சோனாபலூசியஸ்” (அரேபியநதி) என்றும் குறிப்பிடுகின்றார். குறிப்பிட்ட இந்த நதிக்கரையோரங்களில் பாரசீக, அரேபிய, மற்றும் எதியோப்பியர்களின் குடியிருப்புகள் சில இடங்களில் செறிவாகவும், இன்னும் சில இடங்களில் சிதறலாகவும் இருந்ததென தொலமி தனது இலங்கை பற்றி குறிப்புக்களில் தெரிவித்துள்ளார். அதேபோல் இலங்கையின் கிழக்குப் பகுதியை “அரபித்தத்தா” என்று குறிப்பிட்டு இப்பிரதேசத்துடன் அரபிகள் வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும், அறுகம்பை துறைமுகம் அவர்களது துறைமுகமாக விளங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(இவருக்கு முன்னர் இலங்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த ‘ஓனஸ் கிரிட்டஸ்’ என்பவரிடமிருந்து தொலமி பெற்றுக் கொண்ட தகவல்களும், புவியியல் ஆய்வுக் குறிப்புக்களுமே தொலமி பூகோளப்படத்தில் இலங்கையையும் உள்ளடக்கி வரைவதற்கு உதவியாக அமைந்திருந்ததன)
கி.பி 414இல் யோனரை (அரபுவணிகர்களை) அனுராதபுரத்தில் தாம் கண்டதாகவும், அவர்களை தான் சந்தித்ததாகவும், அவர்களின் வீடுகள் அழகாகக் காட்சியளித்தன என்றும் சீனயாத்திரிகரான பாஹியன் குறிப்பிட்டுள்ளார்-( மகாவம்சம்).

எமக்கு உரிய தனித்துவடையாளம் எமது தாய்மொழி உதாரணமாக முஸ்லிம்களுக்கு எப்படி அவர்களின் மார்க்கம் முக்கியத்துவம் வாய்ந்தோ அதை விட
மொழியை எங்கள் அடையாளமாக பார்ப்பது உங்களுக்கு குறுகிய மனப்பான்மையுயாய் தெரிந்தால் உண்மையில் யார் குறுகிய மனப்பான்மையுடையவர் என்பது வெள்ளிடை மலை

Vicki is asking for the merger of NE which is what LTTE terrorists also fought for. This means Vicki is an LTTE terrorist!. Come on Gammanpila we should arrest this guy...hahaha...

ராஜபக்ச ரெஜிமண்ட் பிரித்து வைத்த வடகிழக்கை ரனிலை வைத்து இணைக்கப்போகிரார்களாம். என்ன மடையர்கள். ஒன்றை மற்றும் இவர்கள் மறந்து விட்டார்கள் . கருனாவையும் பிரபாகரனையையும் தனது நரிப்புத்தியினால் பிரித்து LTTE யை குழியில் இட்டதே ரனில்தான்.ராஜபக்ச ரெஜிமண்ட் வெறும் மண்ணை மட்டுமே இட்டு LTTE யை எப்படியோ புதைத்து விட்டார்கள் . எப்படியோ LTTE யை ஒழித்து கட்டியாச்சி. ரனிலை நம்பினால் அவர் என்னொரு பெரிய குழியை வெட்டி அடுத்த ஆடசியிடம் கொடுப்பார் மண்ணை போடுவதற்கு .போரின் பின்னர் சிங்களவர்கள் செய்த சூழ்ச்சியில் நல்லா மாட்டிக்கொண்டு தடுமாறகிரது இவர்கள் இளைஞர் சமுதாயம் . கசிப்பு , அரக்கு , வெளிநாட்டு சரக்கு, நாள்தோறும் கற்பழிப்பும் கொலையும்,தற்கொலை ரவ்டிசம் இப்படியே உங்கள் நல்ல பழக்கங்கள் நீளுகிரன ..இதற்குள் இவர்களுக்கு வடகிழக்கு இணைப்பு மட்டும்தான் குறைச்சல். வடகிழக்கு இணையும் போது இவர்கள் அரைவாசி சுடுகாட்டிலும் மற்ற அரைவாசி வைத்தியசாலையிலும்தான் இருக்கும்.

They went all the places to do business :-)

சந்திர மண்டலத்துக்கு நீல் ஆம்ஸ்ரோங் போக முதலே முஸ்லிம்கள் போய்விட்டார்கள் என்பதே உண்மை.

Is it true?ajan is a no 1 scientist .ente pallikkoodetile paditte ayya?

According to Government information department & CID intelligence that North CM has a link with Terrorist out fit in India and it has been proved by Indian intelligence also Calke as a RAW so Viking is Terrorist. I don't understand what hell Sri lankan government doing without arresting him.

Muslim our community. We can talk any languages. Because we are not bother about languages like your people's. Sinhalese are better then tamilians. They didn't kill innocent Muslims over decades. They will never call us Sinhalese cos Muslim is reflection of our religion. So everybody can recognize us as Muslim by our religious practices.

We didn't go to moon first but we are the one who motivated first that we can go to moon by evidencing the noble Quran.

முஸ்லிம்களும் இந்த நாட்டின் குடி மக்கள்தான், அதற்காக போலி வரலாறுகளை உருவாக்கத் தேவையில்லை.

சோனகர்கள் "அர்வி" மொழியைப் பேசினார் என்று பொய்களை சொல்லத் தேவையில்லை.

அப்படி ஒரு மொழி பேசப்பட்டு இருந்தால், ஒரு ஒல்லாந்தர் படையெடுப்பின் மூலம் சுவடே தெரியாமல் அழித்துவிட முடியுமா?
இஸ்லாத்தை விட்டு மதமாற்றாத ஒல்லாந்தர் மொழியை மட்டும் அழித்தனர் என்பது நம்பக் கூடியதாக இல்லை. ஒரு மொழியை அவ்வளவு இலகுவாக சுவடே தெரியாமல் அழிக்க முடியாது. கல்வெட்டுக்கள், புதைபொருட்கள், அந்தக் காலத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் என்று எதிலுமே இந்த மொழி எழுதப்பட்டே இல்லையா?

இவன் ஒரு மொக்கனாக இருப்பானோ?

Arasiyal arivatra thamizh pesum hindukkal intha c.v vignewaaranum rajapaksevum podum aatchik kavilppu kabada naadahaththil sikkap pohirarhal....

என்று நாளைக்கு என்னொருவர் JM யில் எழுதுவார், பாருங்கள்.

பைதியகாரர்களுக்கு பதிலளித்து உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள் எமது முதலமைசர் ஓர் நீதிபதி நிறைய படித்தவர் சிங்களவர்கள் மத்தியில் அதிக காலம் வாழ்ந்தவர் அவர் இப்படி ஓர் அறிக்கை விடுகிறார் என்றால் அதில் ஏதோ ஒர் ராஜ தந்திரம் உள்ளதாக எனக்கு தென்படுகிறது

சகோ,Naseem அல்லாஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வானாக,மிகவும் அழகிய விளக்கம் இப்படியான விளக்கமூலமாகவாவது அறிவுக் குறுடர்களின் கண்களை திறந்து வைக்கட்டும் இதற்கும் அவர்கள் வேறு விளக்கம் சொன்னால் அவன் அறிவுக்குறுடை நாங்கள் எதுவும் செய்ய இயலாது

தமிழ்நாட்டில் எவ்வாறு தமிழ்பேசும் முஸ்லீம்கள் தமிழர்களோ அவ்வாறே, இலங்கையில் வாழும் அறுதிப் பெரும்பான்மை தமிழ் பேசும் முஸ்லீம்கள் இஸ்லாத்துக்கு மதம் மாறிய இலங்கைத்தமிழர்களும், கீழைக்கரை, மலபார், கொல்லம், இராமநாதபுரம், தொண்டி போன்ற இடங்களிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்த தமிழ் முஸ்லீம்கள் என்ற உண்மையை மறைத்து, சுயநல அரசியல் நோக்கங்களுக்காக, இல்லாத வரலாற்றை இட்டுக் கட்டித் தம்மைத் தாமே முட்டாளாக்கிக் கொள்கிறார்கள் இலங்கை முஸ்லீம்கள்.

Naseem MMS இன் உளறல்களைப் பார்த்து சின்னக்குழந்தை கூட வாய் விட்டுச் சிரிக்கும். தம்மை அரபுக்களின் வாரிசுகளாக்க படாத பாடுபடுகிறார்கள் இலங்கை முஸ்லீம்கள் ஆனால் எந்த அரபும் இந்த இலங்கை முஸ்லீம்களை அரபுக்களாக ஒப்புக் கொள்வதில்லை என்பது தான் பரிதாபத்துக்குரியது. இந்த தமிழ் - முஸ்லீம் பிரிவினைக்குக் காரணம், தமிழர்களல்ல. ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை முஸ்லீம்களின் தலைமை, வடக்கு -கிழக்கில் வாழ்ந்த தமிழ் முஸ்லீம்களின் கைகளில் இருக்கவில்லை, மலே முஸ்லீம்களின் கைகளில் இருந்தது. அவர்கள் தமது தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள உருவாக்கியது தான் மத அடிப்படையிலான இந்த ‘முஸ்லீம்’ அடையாளம். ஏனென்றால் அவர்கள் தம்மைத் தமிழர்கள் என அடையாளப்படுத்த முடியாது. அவர்கள் மூலமாக, தமிழ்நாட்டைப் போல் தமிழர்களையும் முஸ்லீம்களையும், மதம் வேறுபட்டாலும் தமிழர் என்ற இன அடிப்படையில் ஒன்றுபட விடாமல் தடுத்து, பிரித்தாண்டு கொண்டனர் சிங்களத் தலைவர்கள்.

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மட்டுமன்றி பாகிஸ்தானில், பங்களாதேசில், துருக்கி, மற்றும் மத்திய கிழக்கு, நாடுகளில் கூட எந்த மொழியைப் பேசுகிறார்களோ அதைத் தான் தமது இனமாக முஸ்லீம்கள் கொள்கிறார்களே தவிர முஸ்லீம் என்ற இனஅடையாளம் கிடையாது. மலையாளி, தமிழ், ஆந்திரா, பிகாரி, மராத்தி, வங்காளி மொழி பேசும் முஸ்லீம்கள் எல்லோருமே தமது இனமாக அந்த மொழியின் அடிப்படையில் தான் கருதுகிறார்கள். இஸ்லாம் அவர்களின் மதம் மட்டும் தான். இலங்கை முஸ்லீம்கள் மட்டும், முட்டாள் தனமாக வரலாற்றைத் திரிப்பதைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

இனவெறி பைத்தியம் பிடித்தவன் இப்படித்தான் உளறுவான்,அப்படித்தான் எங்களுக்கு விளங்கிது

நல்லதொரு வரலாற்றுக் கற்பனைக்கதை. முதலில் உங்களுடைய தாத்தாவின் தாத்தாவின் பெயர் என்னவென்று பாருங்கள். பிறகு இப்படி வரலாறு புனை கதை எழுதலாம். சிங்களவர்கள் செய்வது போல் இவர்களும் வரலாற்றை திரித்து பொய் வரலாறு எழுதத்தொடங்கி விட்டார்கள். போய் இந்தக் கட்டுரைகளை முதலில் வாசியுங்கள் https://en.wikipedia.org/wiki/Islam_in_Sri_Lanka

https://en.wikipedia.org/wiki/Islam

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

https://en.wikipedia.org/wiki/Naga_people_(Lanka)

https://en.wikipedia.org/wiki/Adam

எந்த மதமும் யாரயைும் காப்பாறாது சோரும் பாேடாது மதம் ஒரு வாழும் முறையே

Post a Comment