Header Ads



தலைவராக இருக்கப்போவதில்லை - ரணில்

எதிர் காலத்தில், கட்சியை இரண்டாம் நிலை தலைவர் ஒருவர் கையேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் 50 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வின் போது தலைவராக இருந்த தாம் தற்போது 70 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் போதும் தலைவராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 80 ஆம் ஆண்டு நிறைவு வரும்போதும் தாம் தலைவராக இருக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே ரணில் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

எனவே கட்சியின் 80 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்படும்போது இரண்டாம் நிலை தலைவர் ஒருவர் கட்சியை பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம், இளைஞர்களிற்கு வாய்ப்பு உட்பட்ட கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. நம்புறமாதிரி இல்லையே கட்சிக்குள் திரும்பவும் கசமுசவோ கருவை தலைவராக எல்லோரும் முடிவு செய்ய முதலுக்கு மோசம் என்று மகிந்தவிடம் மண்டியிட்டு சோரம் போய் நாறினது நாடு,மறக்கவில்லை

    ReplyDelete

Powered by Blogger.