Header Ads



முஸ்லிம்களை ஷியாக்களாக மாற்ற, ஈரானியர்கள் முயற்சி - சவூதி அரேபியா குற்றச்சாட்டு

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் பாதுகாப்பை சவூதி அரசு புறக்கணிக்கிறது என்று ஈரான் வெள்ளிக்கிழமை -09- குற்றம் சாட்டியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஹஜ் பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 769 பேர் உயிரிழந்ததாக சவூதி அரேபியா தெரிவித்தது.

அந்தக் கூட்ட நெரிசலில் அதிகபட்சமாக உயிரிழந்தோர் ஈரானைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், மெக்காவில் இவ்வாண்டு புனிதப் பயணம் மேற்கொள்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வருகிறது. 

இது குறித்து ஈரான் ஹஜ் குழுத் தலைவர் சையது ஓஹதி கூறியதாவது,

மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வோரின் பாதுகாப்பை சவூதி அரசு புறக்கணிக்கிறது. இந்த ஆண்டு புனிதப் பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப் போயிருந்தபோது, பல்வேறு நிபந்தனையிட்டனர். 

அங்கு வரும் சன்னி பிரிவினரை ஷியாக்களாக மாற்ற ஈரானியர்கள் முயற்சிப்பார்கள் என்று விளக்கம் அளிக்கிறது சவூதி. ஈரானியர்கள் மெக்கா வரக் கூடாது என்பது சவூதியின் முடிவானால் அதை நேரடியாகச் சொல்லலாம் என்றார் அவர்.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஈரான்-சவூதி இடையே நடைபெற்ற பேச்சு தோல்வியில் முடிந்த நிலையில், ஈரானிலிருந்து எவரும் மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது.

1 comment:

  1. நல்ல முடிவு. தொடர்ந்து அமுல்படுத்தினால் மிகவும் நல்லது

    ReplyDelete

Powered by Blogger.