Header Ads



சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம், அமைப்பினரின் அறிக்கை

ஜெனீவா நகரில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ்ப்பாண முஸ்லிம் விவகாரம் குறித்து பேசப்பட்ட விவகாரம் தமது அமைப்புக்கு (JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL - JMCI) கிடைத்த வெற்றி  என அவ்வமைப்பின் பிரதான ஏற்பாட்டாளர் ஜவாமில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளதாவது,

வெளிநாடுகளில் வாழும் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களை உணர்வு ரீதியான ஒன்றுதிரட்டி நாங்கள் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பை நிறுவியுள்ளோம். இது யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்கருதி செயற்படும். எமது அமைப்பு ஜெனீவா சென்று அங்கு அமர்வொன்றையும் நடத்தியது. இதன்  சாதகங்ளை காலப்போக்கில் எமது சமூகம் அறிந்துகொள்ளும்.

எமது அமைப்பு இந்த அமர்வில் பங்குகொண்டதன் விளைவாக தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை தொடர்பான விவகார அலுவலகத்துடன் உத்தியோகபூர்வ தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் ஜெனீவாவில் எமது அமைப்பு மற்றுமொரு கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளது.

ஐ.நா. அதிகாரி ரீட்டா ஐசக்  சார்பில் இதுதொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸை தலைமையகமாக கொண்டு செயற்படும் சர்வதேச யாழ்ப்பாணம் முஸ்லிம் அமைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை கருதுகிறோம்.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள்  பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் யாழ்பாண முஸ்லிம்களின் நலன்களையும் பேசு பொருளாக்க திட்டமிட்டுள்ளோம்.

அந்த அமர்விலே சர்வதேச யாழ் முஸ்லிம் அமைப்பின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் நிச்சயம் பங்கேற்பார்கள்.

அந்தவகையில் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பினருக்கு ஒத்துழைப்பு நல்கும் சகல உள்ளங்களுக்கு நன்றிகள். எமது அமைப்பினரின் சுயநலமில்லாத சேவை தொடருமென உறுதியளிக்கிறோம்.


ஜவாமில்

(JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL - JMCI)

4 comments:

  1. இன்ஷா அல்லாஹ் உங்களின் முயற்சிகளுக்கு நிச்சயமாக அல்லாஹ் வெற்றியை தருவான் பொறுமையாளர்களுடனும் அநிதி இளைக்கப்படவனுடனும் அல்லாஹ் இருக்கிறான் அவனின் உதவியும் .இருக்கிறது முயற்சி எடுப்பது நமது கடமை அதை நிறைவேற்றி தருவது அல்லாஹ்வின் பொருப்பு.இதில் வெற்றிபெற அனைத்து முஸ்லிம்களும் துஆ செய்ய வேண்டும் .அல்லாஹ் நமது நற்காரியங்களை ஏற்றுக்கொள்வானாக ஆமீன்,

    ReplyDelete
  2. It is an important effort. Go ahead. Lots of challenges will come. Don't mind

    ReplyDelete
  3. My dear brothers, may Allah bless you and guide you in all your endevours.

    Brothers, we are all united by kalima laa ilaaha illallah.We are one community and one blood. I am making an appeal on behalf the people in the east. We are also facing the same danger like you iin the east.There is none to speak for us after the death Ashraff. Please speak for us too and take our matters to UN.This is a golden opportunity.Please use it for your brothers in the east too.Allah will question you in this matter too.Al-quran 102:08.Prophet said "Allah will give you mercy as long as you give mercy to the people on earth". Brothers, if you ignore us at this time, you will be sad and drop tears when we are in danger in future. Prophet said "a Muslim cannot be a true muslim untill he likes for his brother what he likes for him" again prophet said " Allah will help you as long as you help your brothers". I am expecting your reply. If you need any information or documents in this regard, my hand is always with you. Contact
    0773036347. Wassalam.

    ReplyDelete

Powered by Blogger.