September 07, 2016

'முஸ்­லிம்கள் நினைத்த இடங்­க­ளில்­ மாடுகளை அறுக்காமல், இனமுறுகலை தவிர்க்க வேண்டும்'

விடிவெள்ளி ARA.Fareel

முஸ்­லிம்­களின் குர்பான் கட­மைக்­காக மாடுகள் அறுப்­ப­தற்கு அனு­மதி வழங்கும் போது நாட்டின் சட்­டத்தை கடு­மை­யாக அமுல்­ப­டுத்தி இனங்­க­ளுக்­க­கி­டையில் முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வதை தவிர்க்கும் படி சிங்­கள ராவய அமைப்பு உள்ளூராட்சி ஆணை­யா­ளர்­க­ளி­டமும் பிர­தேச செய­லா­ளர்­க­ளி­டமும் கோரிக்கை விடுத்­துள்­ளது.

அனைத்து மாந­ர­சபை ,நக­ர­சபை ஆணை­யா­ளர்­க­ளி­டமும் பிர­தே­ச­ச­பை­களின் செய­லா­ளர்­க­ளி­டமும் இவ்­வா­றான கோரிக்­கை­யொன்­றினை முன்­வைத்­துள்­ள­தாக சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார். குர்பான் மாடுகள் அறுப்­பது தொடர்பில் சிங்­கள ராவ­யின தலைவர் கருத்து தெரி­விக்­கையில், 

குர்பானுக்­கான மாடுகள் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்ள மாடுகள் அறுக்கும் மடு­வங்­க­ளிலேயே  அறுக்­கப்­ப­ட­வேண்டும்.

மேல் மாகா­ணத்தில் ராக­மையில் உள்ள மாடுகள் அறுக்கும் மடு­வத்தை மாத்­தி­ரமே பயன்­ப­டுத்த முடியும். முஸ்­லிம்கள் அவர்­க­ளது குர்பான் கடமைக் காலத்தில் தாம் நினைத்த இடங்­க­ளி­லெல்லாம் வீடு­க­ளிலும் மற்றும் பொது இடங்­க­ளிலும் மாடுகள் அறுப்­ப­தற்கு உள்­ளூ­ராட்சி அதி­கா­ரிகள் அனு­மதி வழங்­கக்­கூ­டாது.

அவ்­வாறு அனு­மதி வழங்­கப்­பட்டு அதன் கார­ண­மாக இனங்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலை ஏற்­பட்டால் அதற்கு மாந­க­ர­சபை மற்றும் நக­ர­சபை ஆணை­யா­ளர்­களும் பிர­தேச செய­லா­ளர்­க­ளுமே பொறுப்புக் கூற­வேண்டும்.

முஸ்­லிம்கள் ஏனைய இன மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து நாட்டின் சட்­டத்­திற்கு அமைய தமது சமயக் கட­மையை நிறை­வேற்­றிக்­கொள்ள வேண்டும். இந்­துக்கள் மாடு­களை தெய்­வ­மாக வணங்­கு­கி­றார்கள்.பௌத்­தர்­களும் மிருக வதையை எதிர்ப்­ப­துடன் மாடுகள் அறுப்­பதைத் தடை செய்­ய­வேண்டும் என்­கி­றார்கள்.

எனவே சம்­பந்­தப்­பட்ட அரச அதி­கா­ரிகள் மாடுகள் அறுக்கும் விட­யத்தில் சட்­டத்தைக் கடுமையாக அமுல்படுத்தி இதன் மூலம் நாட்டில் இன முறுகல் ஏற்படாதவாறு ஆவன செய்ய வேண்டும்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கும் சிங்கள ராவய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.

12 கருத்துரைகள்:

மடுவங்களில்தான் மாடு அறுக்க வேண்டும் என்ற சட்டம் தனி நபர்கள் அறுப்பதற்காகவா அல்லது வியாபாரத்திற்காக மாடுகளை அறுப்பவர்களுக்காகவா உள்ளதா?

Saringo jaffnavil avarrukku mandail pottapothu engu irruntheerhal.

Transportation will cost more.

தேரா் சொல்வது மிகவும் சரியே ... முஸ்லிம்களாகிய நாம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் . அரபு நாடுகளில் கூட குறிப்பிட மாடு அறுக்கும் மடுவங்களில் மாத்திரமே மிருகங்கள் அறுக்கப்படுகின்றன .

This is a Buddhist majority country where nearly all
men urinate at any time anywhere convenient to them .
Muslims don't slaughter animals in Sinhala villages.
It is good for Muslims to slaughter their "Kurbani"
at a selected location in every village . But at the
same time it is better for the trouble making monks
to mind their business of going house to house for
their Pirith and Bana services . Leave the Muslims
alone to look after their business.

பௌத்தர்கள் மிருகவதையை எதிர்ககிறார்களாம்.
கோழி , மீன் , பன்றி இவைகள் உயிர் உயிரில்லையோ?
ஒரு வேளை மாடு பெரிய மிருகம் , கோழி சின்ன மிருகம் ஆகவே சின்ன மிருக்கத்தை கொல்லுவது பரவாயில்லை என்பார்களோ?

ஆனால் அவரின் வேண்டுகோள் நியாயமானதே.

இங்கு "மாடு வெட்டல்" என்பது ஒரு ஆயுதமே.

முஸ்ஸிம்களை கட்டுப்படுத்துவதற்கு அல்லது திருத்துவதற்கு "மாடு வெட்டல்" ஐ பிக்குகள் பயன்படுத்துகறார்கள். அவ்வளவும் தான். இதை நிறுத்தினால் என்னொன்றை எடுப்பார்கள்.

Basic பிரச்சனை என்னவென்று கண்டுபிடித்து நீங்கள் திருந்தவேண்டும்.

ஏன்னென்றால் 35 வருடங்களாக ஆயுதங்களாலும் அரசியலிலும் எதிராக இருக்கும் தமிழர்களை விட, ஆதரவாக இருந்து பிரிவினையை எதிர்க்கும் முஸ்ஸிம்களை தான் பிக்குகளுக்கு பிடிக்குதில்லை. So something wrong somewhere!, Find & solve it.

Muslimgal meen saapital meen vathayai edithrpom matu vaday ay aadaripom

Mr.Ajan Attathoni unmaiyai kandu puddithuvittar mahlchchi.

Ajan Anthonyraj,

Our investigations indicate that less and less Sinhalese
nowadays listen to these Monks leaving the Monks no
choice but turning to more easy attention-grabbing business
so that their next meal is guaranteed . Don't you worry
Anthonyraj , Muslims will deal with the situation .

பெரும்பாலும் முஸ்லிம்கள் செறிவாக உள்ள பகுதிகளில்தான் குர்பானிக்கான மாடுகள் அறுக்கப்படுகின்றன. ஒரு சமயத்தில் உள்ள விடயங்ள் பல போது இன்னொரு சமயத்திற்கு பிடித்தமில்லாமல் இருக்கலாம்.அதற்காக அடுத்த சமயத்திற்கு சிரமத்தை (முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள பகுதிகளில் பல மைல்களுக்கு அப்பால் உள்ள மடுவத்தை தேடிச் சென்று கடமையை நிறைவேற்றச் சொல்வது) கொடுக்கக் கூடாது. சகிப்புத் தன்மையுடன் நடக்க வேண்டும். இப்படியாக பிடித்தமில்லாத விடயங்களையெல்லாம் பிரச்சினையாகப் பார்த்தால் நாட்டில் முறுகல் நிலைதான் வரும். ஒரு சில தேரர்கள் முஸ்லிம்களை எப்போதும் ஒரு அச்ச நிலைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள் போன்றுதான் உள்ளது.எனினும் முஸ்லிம்கள் செறிவு குறைந்த பகுதிகளில் பக்கத்தில் பக்கத்தில் குர்பானிக்கான மாடறுப்பதைத் தவிர்த்து குறிப்பிட்ட சில இடங்களைத் தெரிவு செய்வது நல்லது.

Post a Comment